Wednesday, October 2, 2013

உவமையும் படிமமும்

உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை
அவளது பேரழகை
அணுஅணுவாய் ரசிக்கச் சொல்லியும்

நெற்றிச் சூடி முதல்
பாதக் கொலுசு வரை
அவளது அலங்கார நேர்த்தியை
விதம் விதமாய் புகழ்ந்துப் பேசியும்

குயிலொத்த குரல் சிறப்பை
கடலொத்த விழிச் சிறப்பை
அவளது செயல்பாட்டு நேர்த்தியை
புதுப்புது விதமாய் விவரித்து விளக்கியும்

அவள் மதிவதனத்தில்
சந்தோஷச் சுவடுகளைக் காணோம்
அவள் பேரழகின் பெருமைதனை
சரியாகச் சொன்னதான திருப்தியைக் காணோம்

மனம் கசந்து நான்
அவளே புரிந்து கொள்ளட்டும் என
ஆளுயரக் கண்ணாடியை
அவள் முன்னே வைத்து விட்டு
பின் நகர்ந்து நிற்கிறேன்

பலமுறை பல கோணத்தில்
பார்த்துப் பார்த்துச் சிரித்த அவள்
புதிதாகப் பார்ப்பதுபோல் தன்னைப்
பெருமையாய்ப் பார்த்து ரசித்த அவள்
என்னை இறுக அணைத்துக் கொள்கிறாள்

உருவகச் சிறப்பில்
உவமை நேர்த்தியில்
அணியின் அலங்காரத்தில்
மயங்கிக் கிடந்த எனக்கு
மெல்ல மெல்லப் புரியத் துவங்குகிறது
படிம நேர்த்தியின் பலமும் சிறப்பும்

49 comments:

Avargal Unmaigal said...

கவிதை நன்று....

கவியாழி said...

உங்கள் வார்த்தையைவிட உண்மையை பிரதிபலிக்க
கண்ணாடியை நம்பி கன்னியவள் மடியில் விழுந்தாளோ?

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

படிம நேர்த்தியின் பலமும் சிறப்பும்

காட்சியே கனம்..

Anonymous said...

''..ஆளுயரக் கண்ணாடியை
அவள் முன்னே வைத்து விட்டு
பின் நகர்ந்து நிற்கிறேன்..''
படிம நிலையைத் தானே உணரட்டும்...என்று.....
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

சசிகலா said...

உருவகச் சிறப்பில்
உவமை நேர்த்தியில்
அணியின் அலங்காரத்தில்
மயங்கிக் கிடந்த எனக்கு
மெல்ல மெல்லப் புரியத் துவங்குகிறது
படிம நேர்த்தியின் பலமும் சிறப்பும்.
வெ கு சிறப்பாக முடித்துள்ளீர்கள் ஐயா. மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்.

RajalakshmiParamasivam said...

கண்ணாடியை விட உங்கள் கவிதை வரிகள் அழகை அழகாய் எடுத்துரைக்கின்றது .
அழகிய கவிதை.
வாழ்த்துக்கள்...

ஸாதிகா said...

அருமையான வரிகள்..

ADHI VENKAT said...

அழகான வரிகளை ரசித்தேன். பாராட்டுகள்.

த.ம. 6

ஸ்ரீராம். said...

அருமை.

Unknown said...

முடித்த விதம் நன்று!

வை.கோபாலகிருஷ்ணன் said...

துவக்கமும் இடையும் முடிவும் அருமை.

//உருவகச் சிறப்பில்
உவமை நேர்த்தியில்
அணியின் அலங்காரத்தில்
மயங்கிக் கிடந்த எனக்கு
மெல்ல மெல்லப் புரியத் துவங்குகிறது
படிம நேர்த்தியின் பலமும் சிறப்பும்//

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

G.M Balasubramaniam said...

தன் அழகைத் தான்கண்டு மகிழ்வதைவிட பிறர் சொல்லக் கேட்பதில்தானே பெருமையும் பொலிவும் தெரியும்? ஒருவேளை ஒப்பிட்டு நோக்குகிறாளோ.?

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

...எந்த ஒரு படைப்பையும்
புரியச் சொல்வதைவிட
உணரச் சொல்வதே சிறப்பு
என்கிற பொருளில் சொல்ல முயன்றுள்ளேன்
பெண்ணைப் படைப்பாகக் கண்டால்
ஒருவேளை என் கருத்து தெளிவாகலாம்
இல்லையெனில் நான் சரியாகச் சொல்லவில்லை
எனக் கருதிக் கொள்ளலாம்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

அணைப்பில் எல்லாம் மறந்து விடுவதுண்டு ...உங்களுக்கு புரியத் தொடங்குவது ,சும்மா ஒரு மாறுதல் அல்ல ...அதற்கும் மேலே ஏதோ ஒன்று !
ரசித்தேன் ..நன்றி !

அருணா செல்வம் said...

படைப்பின் அழகை
படைத்தவன் தான் முதலில் இரசிக்க வேண்டும்.

உள் அடங்கிய கருத்து மிகவும் அழகாக உள்ளது இரமணி ஐயா.

கீதமஞ்சரி said...

உவமைக்கும் படிமத்துக்குமான வித்தியாசத்தை வெற்றெழுத்துக்களால் விளக்கிக்கொண்டிராமல் அழகிய பெண்ணைக்கொண்டு அழுத்தமாய் உணரச்செய்தமை சிறப்பு. பாராட்டுகள் ரமணி சார்.

”தளிர் சுரேஷ்” said...

படிமம் சிறப்புதான்! ரசனையான கவிதை! நன்றி!

கோமதி அரசு said...

கவிதை மிக அருமை.
சொல்லால் மட்டும் நம்பாமல் சுயமாய் சிந்தித்து உணரும் உண்மை மேல்தான்.
வாழ்த்துக்கள்.

Unknown said...

மிகவும் ரசித்தேன் சார்..... கவிதையை படிக்கும்போதே மனது துள்ளுகிறது.

மாதேவி said...

படிம நேர்த்தியின் பலமும் சிறப்பும் அழகிய கருத்துடைய கவிதையாக.

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது அன்பரே.

Iniya said...

படிமத்தின் பலத்தையும் சிறப்பையும் உணர்த்தியதற்கு நன்றி. வீட்டில் இருப்பவர்களுக்கு விடுதலை. இனி நன்றாக இருகிறதா என்று கேட்க வேண்டியதில்லை. நன்றாக ரசித்தேன். வாழ்த்துக்கள்!

Anonymous said...

படிமம் என்றால் கருப்பொருள் தானே ?
அது இல்லாத , வெறும் உவமை , உருவக
அலங்காரங்கள் மட்டும் வைத்து எழுதும் போது
கவிதைப்பெண் ஒப்புக் கொள்ளவில்லை தன் அழகை.
படிமம் வைத்து புதுக்கோணத்தில் எழுதத் துவங்கிய போது
கவிப்பெண் இறுக அணைத்தாள் என்பது நிறைய
கவிதைகள் வெள்ளமெனப் பெருகின எனப்
பொருள் கொள்ளலாமா ?

Anonymous said...

வணக்கம்
ஐயா

கவிதையின் வரிகளை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள் அருமை வாழ்த்துக்கள் ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal said..//.
கவிதை நன்று.

தங்கள் முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன்//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

.

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said...
ஆகா... ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்..//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி said...//
படிம நேர்த்தியின் பலமும் சிறப்பும்
காட்சியே கனம்.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi said...
''..ஆளுயரக் கண்ணாடியை
அவள் முன்னே வைத்து விட்டு
பின் நகர்ந்து நிற்கிறேன்..''
படிம நிலையைத் தானே உணரட்டும்...என்று//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala said...//
வெ கு சிறப்பாக முடித்துள்ளீர்கள் ஐயா. மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

rajalakshmi paramasivam said...//
கண்ணாடியை விட உங்கள் கவிதை வரிகள் அழகை அழகாய் எடுத்துரைக்கின்றது .
அழகிய கவிதை.//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா said...
அருமையான வரிகள்../

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி said.....
அழகான வரிகளை ரசித்தேன். பாராட்டுகள்/

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். said...//
அருமை./

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் said...//
முடித்த விதம் நன்று!///

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...//
துவக்கமும் இடையும் முடிவும் அருமை//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

Bagawanjee KA said...
அணைப்பில் எல்லாம் மறந்து விடுவதுண்டு ...உங்களுக்கு புரியத் தொடங்குவது ,சும்மா ஒரு மாறுதல் அல்ல ...அதற்கும் மேலே ஏதோ ஒன்று !
ரசித்தேன் ..நன்றி //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் said...//
.
உள் அடங்கிய கருத்து மிகவும் அழகாக உள்ளது //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி said...
உவமைக்கும் படிமத்துக்குமான வித்தியாசத்தை வெற்றெழுத்துக்களால் விளக்கிக்கொண்டிராமல் அழகிய பெண்ணைக்கொண்டு அழுத்தமாய் உணரச்செய்தமை சிறப்பு.//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh said...//
படிமம் சிறப்புதான்! ரசனையான கவிதை//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

chanthuru sumith said...//
good/

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு said...
கவிதை மிக அருமை.
சொல்லால் மட்டும் நம்பாமல் சுயமாய் சிந்தித்து உணரும் உண்மை மேல்தான்.//

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Suresh Kumar said...
மிகவும் ரசித்தேன் சார்..... கவிதையை படிக்கும்போதே மனது துள்ளுகிறது.//

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி said...
படிம நேர்த்தியின் பலமும் சிறப்பும் அழகிய கருத்துடைய கவிதையாக.//

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர் இரா.குணசீலன் said...//
கவிதை நன்றாகவுள்ளது அன்பரே./

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

/

Yaathoramani.blogspot.com said...

Iniya said...//
படிமத்தின் பலத்தையும் சிறப்பையும் உணர்த்தியதற்கு நன்றி//


/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி said...//
படிமம் என்றால் கருப்பொருள் தானே ?

கீத மஞ்சரி said...//
உவமைக்கும் படிமத்துக்குமான வித்தியாசத்தை வெற்றெழுத்துக்களால் விளக்கிக்கொண்டிராமல் அழகிய பெண்ணைக்கொண்டு அழுத்தமாய் உணரச்செய்தமை சிறப்பு.//

Yaathoramani.blogspot.com said...

2008rupan said...

கவிதையின் வரிகளை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள் அருமை வாழ்த்துக்கள் //

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment