சட்டென மின்சாரம் அணைந்து போக
ஏற்றப்பட்ட விளக்கில்
எதிர் சுவற்றில் என் உருவம்
பூதாகாரமாய்...
ஏதோ ஒரு காரணமாய்
நான் பின் நகர
அதே சுவற்றில் என்னுருவம்
என்னிலும் பாதியாய்...
பார்த்துக் கொண்டிருந்த என் பேரன்
"எப்படித் தாத்தா
விளக்கும் நகராம நீயும் மாறாம
உன் நிழல் மட்டும் எப்படி
உயரமாய் குள்ளமாய் " என்கிறான்
"அது இடைவெளி செய்யும் மாயம் "என்கிறேன்
அவன் புரியாது விழிக்கிறான்
எனக்கும்
வேறெப்படி சொல்வதெனப் புரியவில்லை
ஏற்றப்பட்ட விளக்கில்
எதிர் சுவற்றில் என் உருவம்
பூதாகாரமாய்...
ஏதோ ஒரு காரணமாய்
நான் பின் நகர
அதே சுவற்றில் என்னுருவம்
என்னிலும் பாதியாய்...
பார்த்துக் கொண்டிருந்த என் பேரன்
"எப்படித் தாத்தா
விளக்கும் நகராம நீயும் மாறாம
உன் நிழல் மட்டும் எப்படி
உயரமாய் குள்ளமாய் " என்கிறான்
"அது இடைவெளி செய்யும் மாயம் "என்கிறேன்
அவன் புரியாது விழிக்கிறான்
எனக்கும்
வேறெப்படி சொல்வதெனப் புரியவில்லை
33 comments:
ரசித்தேன் ஐயா... பேரனுக்கு வாழ்த்துக்கள்...
ஆம் புரியாத ரகசியம்
என்ன சொல்லலாம்? :)
வணக்கம்
ஐயா
அவன் புரியாது விழிக்கிறான்
எனக்கும்வேறெப்படி
சொல்வதெனப் புரியவில்லை
கவியின் வரிகள் அருமை ரசித்தேன்...வாழ்த்துக்கள்..ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சில வாழ்க்கையின் சூட்சமங்களும் இப்படித்தான்...
அழகிய சிந்தனை...
சொன்ன விதமும் அருமை...
''..எனக்கும்
வேறெப்படி சொல்வதெனப் புரியவில்லை....''
ரசித்தேன்
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
பேரனுக்கு வாழ்த்துக்கள் ஐயா
ஒரு படத்தில் ” கன்னத்தில் என்னடி காயம்?’ என்று எம்ஜிஆர் கேட்க, “அது வண்ணக்கிளி செய்த மாயம்” என்று நாயகி சொல்லுவார். இங்கே என்ன மாயம்? கவிஞர் ரமணி தனது பதிவில் சில சமயங்களில் இப்படி மாயம் செய்வார்.
தி.தமிழ் இளங்கோ //
.இலக்கிற்கும் நமக்குமான இடைவெளி
நம் முயற்சியின் காரணமாய் குறையக் குறைய
நம்மை கூட்டிக் காட்டும் மாயம் நிகழும்
எனபதனை சொல்ல முயன்றிருக்கிறேன்
இன்னும் சரியாகச் சொல்லி இருக்கலாம் என
தங்கள் பின்னூட்டத்திம் மூலம் தெரிந்து கொண்டேன்
வரவுக்கும் தெளிவூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
அதானே.. :) நல்ல மாயத் தாத்தா தான் நீங்கள் ஐயா!...:)
விதவிதமாய்ச் சிந்திச்சு எழுதி எங்களை இப்படி ஹாஆ!... என மலைக்க வைக்கிற உங்கள் திறமையைச் சொன்னேன்..:)
மிகவே ரசித்தேன்!
வாழ்த்துக்கள் ஐயா!
என்ன சொல்லி புரிய வைக்க....
த.ம. 8
நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.பதிவினுள்ளே ஒரு இனிய கவிதை ஒளிந்திருக்கிறது.
இடை வெளி ரகசியத்தை சொன்னால் புரியாது தான்.
ஆனால் அழகிய கலிதை கொண்டு விளக்கி இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்
தொடருங்கள்....
//விளக்கும் நகராம நீயும் மாறாம உன் நிழல் மட்டும் எப்படி உயரமாய் குள்ளமாய் " //
கேள்வி கேட்கும் குழந்தைகள் தான் புத்திசாலியாக இருப்பார்கள். தங்கள் பேரனுக்குப் பாராட்டுக்கள். ;)
தலைமுறை இடைவெளி என்பது இதுதானோ ?
த.ம 9
"அது இடைவெளி செய்யும் மாயம் "என்கிறேன்//
அருமை..
பேரனும் நல்ல புத்திசாலி.
பேரனுக்கு வாழ்த்துக்கள்.
///அது இடைவெளி செய்யும் மாயம் "என்கிறேன்///
இடைவெளியின் மாயத்தில் உருவம் மட்டுமல்ல மனிதனின் அன்பும் மாறுபடுகிறது இடைவெளியின் தூரம் அதிகரிக்குக்கும் போது அன்பும் அதிகரிக்கிறது tha.ma 10
nantri ayyaa..!
pinnoottam kandu purinthathu ayyaa...!
நிதர்சனமாக நடக்கும் சம்பவம்
உங்கள் பார்வையில் மிகவும் அழகான கவிதையாக..
இடைவெளி தோற்றப் பிழையாகிப் போனது..
ஒளிச்சிதறல் தரும் மாயையே...
நீர் நிரம்பிய கண்ணாடிக் குவளைக்குள்
தேக்கரண்டியை இட்டால் வளைந்து தோன்றுவது போல...
அருமையான ஆக்கம் ஐயா..
சிந்திக்க வைக்கிறது...
உங்கள் பேரனுடன் என்னையும்...
செய்யுளின் பொழிப்புரை ;
நம் வாழ்க்கையின் இலக்கிற்கு நாம் மிக அருகில் செல்லும் போது,
சிரமங்களுக்கு இடையிலும் [ மின்சாரம் போனது ]
தளரா முயற்சியுடனும் [ மாற்று விளக்கு ஒளி ] இலட்சியத்தை எட்டும் போது
நாம் பூதாகரமாய் விஸ்வரூபத்துடன் உலகிற்குத் தெரிவோம்.
பெரிதாகப் பேசப்படுவோம்.
இது வரை நாம் சிந்தித்தது மில்லை இப்படிக் கேட்டது மில்லையே. இது தான் புதிய சமுதாயம் புதிய சிந்தனை, நிகழ்ச்சி என்னவோ பழசு தான்.
தாத்தாவைவிட சுட்டி தான் பையன். கெட்டிக்காரன்.
நன்றாக ரசித்தேன்....!.
நன்றி தொடர வாழ்த்துக்கள்...!
மிக அருமை ரமணி ஐயா...விளக்கு செய்யும் மாயத்தில் வாழ்க்கைப் பாடம் வைத்தீர்கள்..
நன்றி!
த.ம.12
மாயக் கவிதை
வளர்ந்தாலும் இயற்கையின் முன் நாமும் குழந்தைகள்தானே நண்பரே.
இடைவெளியில் மாறுபட்டு தெரிகிறதுதான் உள்ளும், புறமும்..! அருமையான கவிதை!
வாழ்க பேரன்! வளர்க மேலும்!
இடைவெளி செய்யும் மாயம் - உண்மைதான் அது. உறவுகளுக்குள் இடைவெளியைப் பொறுத்துதான் தவற்றின் அளவு சிறியதா பெரியதா என்று தீர்மானிக்கப்படுகிறது. அழகான ஆழமான வரிகள். பாராட்டுகள் ரமணி சார்.
நம்மின் இலக்கைவிட்டு நகர்ந்து செல்ல செல்ல
நம்மின் வெற்றியின் வேகம் குறைந்து விடுகிறது.
நம் இலக்கை நோக்கிச் செல்ல செல்ல
வெற்றியைப் பூதாகரமாய்க் காண்கிறோம்.
அருமையான சிந்தனை.
விளக்கும் மாறாமல் உருவமும் மாறாமல்
இடைவெளி செய்யும் மாயம்....!!
சுறுங்கச் சொல்லி விளங்க உரைத்தல், உங்களைப் போல் எனக்கு வருவதில்லையே என்று கவலைப்படுகிறேன் இரமணி ஐயா.
இடைவெளியால் மாற்றமா
மாற்றத்திற்கு இடைவெளியா
"விளக்கு விளக்குகிறது!"
அழகிய கவிதை!
இடைவெளிக்கு இத்தனை பரிமானஙகளா!
மிகவும் ரசித்த கவிதை.
மிகவும் இரசித்தேன்! பகிர்விற்கு நன்றி ஐயா!
Post a Comment