விளையாட்டில்
இறுதிப்போட்டியினை இலக்காக வைத்து
முன்போட்டிகளைச் சிறப்பாகக் கையாளாதவன்
சிறந்த விளையாட்டு வீரனில்லை
வாழ்க்கையிலும்
நிறைவான நான்காம் இருபதினை
இலட்சியமாகக் கொண்டு
முன் இருபதுகளை கையாளத்தெரியாதவனும்
வாழ்வின் சூட்சுமம் புரிந்தவனில்லை
முதல் இருபதில்
தன்னை அனைத்து வகையிலும்
தயார்ப்படுத்திக் கொள்ள தவறியவனும்
இரண்டாம் இருபதில்
தனது அனைத்துத் திறனையும்
முழுமையாகப் பயன்படுத்த துணியாதவனும்
மூன்றாம் இருபதில்
அனைத்து நிலைகளிலும் தன்னை
ஸ்திரப்படுத்துக் கொள்ளத் தெரியாதவனும்
நான்காம் இருபதில்
தனக்கு மட்டுமன்று அனைவருக்கும் சுமையாகிறான்
தரையில் எறியப்பட்ட மீனாகிப் போகிறான்
மறுமை குறித்த நினைப்பில்
இம்மையை இழக்காதவன் தானே
மறுமையிலும் செம்மை கொள்ளச் சாத்தியம் ?
தடுமாற்றமின்றி கூரையேறிக்
கோழிபிடிக்கத் தெரிந்தவன்தானே
வானமேறி வைகுந்தம் போகவும் சாத்தியம் ?
காலத்தே செய்யும் பயிர்மட்டுமல்ல
நாம் செய்யும் காரியம் கூட
கூடுதல் பலன் கொடுக்கவே செய்யும்
எனவே இன்றே
முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்
இறுதிப்போட்டியினை இலக்காக வைத்து
முன்போட்டிகளைச் சிறப்பாகக் கையாளாதவன்
சிறந்த விளையாட்டு வீரனில்லை
வாழ்க்கையிலும்
நிறைவான நான்காம் இருபதினை
இலட்சியமாகக் கொண்டு
முன் இருபதுகளை கையாளத்தெரியாதவனும்
வாழ்வின் சூட்சுமம் புரிந்தவனில்லை
முதல் இருபதில்
தன்னை அனைத்து வகையிலும்
தயார்ப்படுத்திக் கொள்ள தவறியவனும்
இரண்டாம் இருபதில்
தனது அனைத்துத் திறனையும்
முழுமையாகப் பயன்படுத்த துணியாதவனும்
மூன்றாம் இருபதில்
அனைத்து நிலைகளிலும் தன்னை
ஸ்திரப்படுத்துக் கொள்ளத் தெரியாதவனும்
நான்காம் இருபதில்
தனக்கு மட்டுமன்று அனைவருக்கும் சுமையாகிறான்
தரையில் எறியப்பட்ட மீனாகிப் போகிறான்
மறுமை குறித்த நினைப்பில்
இம்மையை இழக்காதவன் தானே
மறுமையிலும் செம்மை கொள்ளச் சாத்தியம் ?
தடுமாற்றமின்றி கூரையேறிக்
கோழிபிடிக்கத் தெரிந்தவன்தானே
வானமேறி வைகுந்தம் போகவும் சாத்தியம் ?
காலத்தே செய்யும் பயிர்மட்டுமல்ல
நாம் செய்யும் காரியம் கூட
கூடுதல் பலன் கொடுக்கவே செய்யும்
எனவே இன்றே
முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்
55 comments:
இந்தியர்களின் சராசரி வயதை 65 ஆக கணக்கிட்டிருக்கிறதாம் அரசு. எனவே எண்பது வரை வாழ்வதே சாதனையாகி விடுகிறது போலும்! :)))
மறுமை குறித்த நினைப்பில்
இம்மையை இழக்காதவன் தானே
மறுமையிலும் செம்மை கொள்ளச் சாத்தியம் ?
செம்மையான ஆக்கம்..!
எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்ச வைரமுத்து மாதிரி நான்கு இருபதா நீங்கள் பிரித்த விதம் அருமை !
த.ம.3
மறுமை குறித்த நினைப்பில்
இம்மையை இழக்காதவன் தானே
மறுமையிலும் செம்மை கொள்ளச் சாத்தியம் ?/////
உண்மையான வார்த்தை ஐயா....
ஒவ்வொறு தருணத்தையும் சவாலோடு எதிர்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கையில் நம்மை எந்த சவாலும் நெருங்காது...
' நிகழ்காலத்தில் இரு அல்லது வாழு ' என அறிவுறுத்திய விதம் நன்று.மிக அவசியமானதும் கூட.
பாட்ஷா படத்தில் வைரமுத்து மனித வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்து எழுதியிருப்பார்...
நீங்கள் மனித வாழ்க்கையை 20 இருபதாக பிரித்திருக்கிறீர்கள்...
அழகிய கவிதையில்...
நல்லது
மறுமை என்பதே ஒரு பயமுறுத்தும் ஆயுதம் அதைக் கூறியே இருக்கும்போது நல்லவனாக இரு என்ற அறிவுரை.அது போல்தானா--- /தடுமாற்றமின்றி கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரிந்தவனே வானமேறி வைகுந்தம் போவது சாத்தியம்”/” எவரெஸ்டில் கால் பதிக்க முயலலாம்....வைகுந்தம் என்பது சாத்தியமா.?உள்ளதா என்றே தெரியாதது......!
முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்..
இருபது இருபதாக பிரித்து சொல்லி இறுதியில் தக்க ஆலோசனையையும் தந்தீர்கள் ஐயா.
''..முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்..''
ஆம் நல்ல வழி.
வேதா.இலங்காதிலகம்.
வணக்கம்
ஐயா
ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு கருத்துக்கள் உள்ளது படிக்கும் போது மனதுக்கு இதமாக உள்ளது கவிமாலை. அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அழகான வாழ்க்கைத் தத்துவம்.அற்புதமான சிந்தனை.எல்லோருக்குமே தேவையான அறிவுரை
சாதிக்காவன் மனிதனில்லை...
எமக்கு ஆண்டவன் ஆற்றலைத் தந்துள்ளான்.
அதற்கேற்ப எவ்வளவுமுடியுமோ அதுவரை முயன்றிடல் வேண்டும்.
நல்ல அறிவுரை ஐயா.
சிறந்த சிந்தனைக்குரிய வரிகள்! வாழ்த்துக்கள்!
//முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்//
வைர வரிகள் ஐயா!
//முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்
// அருமை!
முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்//
உண்மை.
அழகான ,அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
//நான்காம் இருபதில் தனக்கு மட்டுமன்று அனைவருக்கும் சுமையாகிறான் //
உண்மையே. திட்டமிடாத + சுதாரிப்பு இல்லாத பலரும் இதுபோலத்தான் தத்தளிக்கின்றனர்.
அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.
எனவே இன்றே
முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்//
உண்மை! முற்றிலும் உண்மை! இரமணி!
சிறப்பான ஆலோசனை! கண்ணில் தெரிவதை முதலில் பிடிப்போம்! பின்பு கனவில் தெரிவதை அடைவோம்! மிகவும் பிடித்த கவிதை! நன்றி!
கண்ணில் தெரிகிற கனவுகளாய் வாழ்க்கை விரிகையில் எட்டிப்பிடிக்கத்தானே வேண்டியிருக்கிறது/கனவுகளுக்கும்,கண்ணில் படர்கிற காட்சிகளுக்கும் அதிக தூரமொன்றும் இருப்பதாய் தெரியவில்லை.
tha.ma 10
முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்
எட்டுக்குள் வாழ்க்கை போல் இது எண்பதுவரை
பயனுள்ள பதிவு அருமை
வாழ்த்துக்கள்
உண்மை.. முற்றிலும் உண்மையான வார்தைகள் கவிதை வடிவில் ..
தா.மா.. 11
உண்மை. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க நினைப்பதால்தால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன .உங்களுக்கே உரிய நடையில் அழகாக சொல்லிவிட்டீர்கள்
த.ம. 13
முடிவிலும் வரிகள் அற்புதம் ஐயா...
இவை எல்லாம் ஜாலியே இல்லை ஐயா
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
அருமை தொடரவும் வாழ்த்துக்கள்!
மிகச்சிறந்த அறிவுரை!
ஸ்ரீராம். //
.தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
இராஜராஜேஸ்வரி said..//.
?
செம்மையான ஆக்கம்.
.
.தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Bagawanjee KA said...
எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்ச வைரமுத்து மாதிரி நான்கு இருபதா நீங்கள் பிரித்த விதம் அருமை !//.
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கவிதை வீதி... // சௌந்தர் // said..//.
உண்மையான வார்த்தை ஐயா....
ஒவ்வொறு தருணத்தையும் சவாலோடு எதிர்கொள்ள பழகிக்கொண்டால் வாழ்க்கையில் நம்மை எந்த சவாலும் நெருங்காது..//
.தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
ஸ்ரவாணி said...//
' நிகழ்காலத்தில் இரு அல்லது வாழு ' என அறிவுறுத்திய விதம் நன்று.மிக அவசியமானதும் கூட.//
.தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கவிதை வீதி... // சௌந்தர் // said...//
நீங்கள் மனித வாழ்க்கையை 20 இருபதாக பிரித்திருக்கிறீர்கள்...
அழகிய கவிதையில்.//
..தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
G.M Balasubramaniam //..
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
Sasi Kala said...//
..இருபது இருபதாக பிரித்து சொல்லி இறுதியில் தக்க ஆலோசனையையும் தந்தீர்கள் ஐயா//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
kovaikkavi s//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
2008rupan said...
வணக்கம்
ஐயா
ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு கருத்துக்கள் உள்ளது படிக்கும் போது மனதுக்கு இதமாக உள்ளது கவிமாலை. அருமை வாழ்த்துக்கள் ஐயா//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி
கவியாழி கண்ணதாசன் said...//
அழகான வாழ்க்கைத் தத்துவம்.அற்புதமான சிந்தனை.எல்லோருக்குமே தேவையான அறிவுரை/
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
இளமதி said...
சாதிக்காவன் மனிதனில்லை...
எமக்கு ஆண்டவன் ஆற்றலைத் தந்துள்ளான்.
அதற்கேற்ப எவ்வளவுமுடியுமோ அதுவரை முயன்றிடல் வேண்டும்.
நல்ல அறிவுரை ஐயா.
சிறந்த சிந்தனைக்குரிய வரிகள்! வாழ்த்துக்கள்!//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
கே. பி. ஜனா... said...
//முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்//
வைர வரிகள் ஐயா!//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
உஷா அன்பரசு said...
//முதலில் கண்ணில் தெரிவதை
எளிதாய்ப் பிடிக்கப் பழகுவோம்
முடிவில் கனவில் காண்பதை
முழுதாய் அடைந்து மகிழ்வோம்
// அருமை
!தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
கோமதி அரசு said...//
உண்மை.
அழகான ,அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.//!
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
.
வை.கோபாலகிருஷ்ணன் said...
//நான்காம் இருபதில் தனக்கு மட்டுமன்று அனைவருக்கும் சுமையாகிறான் //
உண்மையே. திட்டமிடாத + சுதாரிப்பு இல்லாத பலரும் இதுபோலத்தான் தத்தளிக்கின்றனர்.
அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
புலவர் இராமாநுசம் said...
எனவே இன்றே
உண்மை! முற்றிலும் உண்மை! இரமணி!//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
s suresh said...//
சிறப்பான ஆலோசனை! கண்ணில் தெரிவதை முதலில் பிடிப்போம்! பின்பு கனவில் தெரிவதை அடைவோம்! மிகவும் பிடித்த கவிதை! நன்றி!//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
Vimalan Perali s/
/
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
சீராளன் said..//.
எட்டுக்குள் வாழ்க்கை போல் இது எண்பதுவரை
பயனுள்ள பதிவு அருமை //
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
வேடந்தாங்கல் - கருண் said...//
உண்மை.. முற்றிலும் உண்மையான வார்தைகள் கவிதை வடிவில் .//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
T.N.MURALIDHARAN said...
உண்மை. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க நினைப்பதால்தால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன .உங்களுக்கே உரிய நடையில் அழகாக சொல்லிவிட்டீர்கள்//
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
திண்டுக்கல் தனபாலன் said//...
முடிவிலும் வரிகள் அற்புதம் ஐயா..//
.தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///
T.N.MURALIDHARAN said...
உண்மை. இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க நினைப்பதால்தால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன .உங்களுக்கே உரிய நடையில் அழகாக சொல்லிவிட்டீர்கள்//
.தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி///
திண்டுக்கல் தனபாலன் said...
முடிவிலும் வரிகள் அற்புதம் ஐயா...//
.தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
Iniya said...
இவை எல்லாம் ஜாலியே இல்லை ஐயா
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.
அருமை தொடரவும் வாழ்த்துக்கள்!//.
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/
Ranjani Narayanan said..//.
மிகச்சிறந்த அறிவுரை!/
தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி//
Post a Comment