தன்னைப் பாதிக்கிற
ஒவவொரு நிகழ்வும்
ஒவவொரு உணர்வும்
கருவாகி
அவனுள் வளர்ந்து
கவியாக வரும் வரை
கவிஞன் படும் பிரவச அவஸ்தை
அவன் மட்டுமே அறிந்தது
ஆயினும்
கருவானது கவியாகி
கால் கொண்டு நடக்கையில்
அது தரும் அவஸ்தை
அது கூட அவன் மட்டுமே அறிந்தது
இளைஞர்களை கொள்ளை கொண்ட
'இழந்த காதலை'
இயற்றிய அவனே
மறந்து போன நிலையில்
கவிஞனின் மனைவி ஒரு நாள் கேட்டாள்
'யார் அந்த அழகு சுந்தரி
இப்பொது கூட விலகி கொள்கிறேன்
இடைஞ்சலாக இருக்க மாட்டேன்' என
கண் கசக்கிப் போனாள்
இந்தப் பிரச்சனை ஒயவே
ஆறு மாதங்கள் ஆகிப்போனது
'நண்பனின் நயவஞ்சகம்'
கவிதை வெளிவந்த பின்னே
கவிஞனின் நெருங்கிய நண்பன்
தொடர்பு எல்லையை விட்டு
தொலைந்தே போனான்
அதற்கான காரணம்
இதுவரை
கவிஞனுக்கு விளங்கவே இல்லை
'சம்பந்திகளின் தர்பார்'
கவிதைக்கு பின்னே
மாப்பிள்ளை முகம் கொடுதது பேசுவதே இல்லை
'தவறினை நேரடியாகச் சொல்லியிருக்கலாம்
கவிதையாக்கி அசிங்கப் படுத்தியிருக்க வெண்டாம்' என
சொல்லி போன சம்பந்தி
கவிஞனின் வீட்டுப் பக்கம்
இன்று வரை வரவே இல்லை
முத்தைக் கொண்டு
கடற் பரப்பைக் கூட
அளந்து அறியக் கூடும்
படைப்பைக் கொண்டு
படைப்பாளியை அறியக் கூடுமோ?
கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்
ஆனாலும் என்ன
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன
31 comments:
கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இது நண்பரின் மடிக்கணினியிலிருந்து)
அருமை ஐயா... வாழ்த்துக்கள்....
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன
>>
அதனால்தான் சமூக வளைத்தளங்கள் அபார வளர்ச்சி அடையுது
கவிதை வரிகளுக்காக வரும் சிக்கல்களை எல்லாம் மயான வைராக்கியம் போல ,தோன்றிய பின் மறந்து விடுவது கவிஞனுக்கு அழகு !
தம 3
கவிதை இயற்றித் துன்பமடைவது சரி, 20 வருடங்களுக்குமுன் அலுவலகத்தில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்' பாடலைப் பாடி அருகில் கேட்டுக் கொண்டிருந்த சக அலுவலரின் கோபத்துக்கு ஆளான சம்பவம் நினைவுக்கு வருகிறது!
பிரசவ வைராக்கியம் என்ற வார்த்தையே பெண்ணீயதிற்கு
எதிராகத் தோன்றுகிறது எனக்கு. மன்னிக்கவும்.
எழுத்துக்களோடு எழுத்தாளனின் உணர்வுகளையும் சம்மந்தபடுத்தித்தான் பார்க்கிறார்கள்.. உலகில் இல்லாத ஒன்றை பற்றி எதுவுமில்லை.. கற்பனை என்றாலும் உலகில் எங்கோ நடக்கும் நிகழ்வுகளாகத்தான் இருக்கும்..!
படைப்பாளியை பாதிக்கும் நிகழ்வுகளும் உணர்வுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
படைப்புகளும் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன.
உண்மை. பகிர்வுக்கு நன்றிகள். தலைப்பும் அருமை.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பார்த்த பாதித்த விஷயங்கள் தானே கவிதையாகின்றன அருமையான படைப்பு....
எண்ணங்கள் கற்பனையோடு கலக்கும்போது கதைகள் கவிதைகள் உருவாகின்றன. எண்ணங்கள் அசல் வாழ்வின் நிகழ்வுகளின் பிரதிபலிப்பே.ஆகவே கதைகளில் கவிதைகளில் வரும் கதாமாந்தர்கள் அசல் வாழ்விலும் சிலரைப் போல் இருக்கலாம். நூறு சதவீத கற்பனை செய்ய முடியுமா என்ன.?சொல்லிப்போனவிதம் அருமை.
உண்மையான வார்த்தைகள்! சம்பவங்களில் இருந்து கவிதையும் கற்பனையும் பிறந்தாலும் அதில் படைப்பாளியை தேடக்கூடாது! அருமையான படைப்பு! நன்றி!
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன//
கவிதைகள் பிறந்து கொண்டே இருக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
//ஆனாலும் என்ன
கவிஞனை பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன//
உண்மை....அருமையான வரிகள்!
கவிஞனுக்குள் இருக்கும் வலிகள் கொஞ்சம் கற்பனைக் கலந்து கவியாக்கி இருப்பது சிறப்பு அய்யா. வித்தியாசமான சிந்தனை. பகிர்வுக்கு நன்றி.
arumai..
arumai..
aamaam..!
வணக்கம்
ஐயா
வித்தியாசமான கற்பனையில் கவி அமைந்துள்ளது வரிகள் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பல நேரங்களில் படைப்புகள் இப்படி அமைந்து விடுகின்றன. அதைப் படிப்பவர் அவர்களுக்காகவே சொல்லப்பட்டது போல கருதிக் கொள்வர் என்பது உண்மைதான். புதிய கோணத்தில் கவிதை அமைத்தது சிறப்பு
த.ம 7
கவிதை என்றில்லை.
எதை எழுதினாலும் நாமே சென்சார் செய்த பின் தான் வெளியிட வேண்டும் என்பது தான் உண்மையே!
உணர்வுகளின் விரிவு கவிப்பூ -தான் இதற்கு ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கக் கூடாது.
வேதா. இலங்காதிலகம்:
ஏற்கனவே படித்த என் மனத்தைக் கவர்ந்த பதிவு இது.
இருந்தாலும் அடுத்தவரின் குழந்தைகளையும் பார்த்து இரசிக்கும் தன்மையுள்ள மனம்!!
அரிதாரம் பூசி இருந்தாலும் அடுத்தடுத்து
பிரசவித்து... அதனால் படும் இன்ப துன்பங்களை கவிஞர்கள் நன்கு அறிந்திருந்தாலும்
உங்களின் கவிதையில் உள்ள உண்மை... ஆஹா...
கலைஞர்கள் பிரசவ வேதனையை அடைந்தாலும் பிரசவித்து வேதனை அடைந்தாலும் பரவாயில்லை. மலடாக இருக்கக்கூடாது என்பதை சொல்லிச் சென்ற விதத்தைக் கண்டு வியக்கிறேன் இரமணி ஐயா.
அப்படியே படம் பிடித்தது போல் .இருக்கிறது
கவிஞர்களின் இளகிய மனது உடனே பாதிக்கும். மோதிக்கும், போதிக்கும் கவிதை வடிவில்.
இல்லையேல் கவிதை எப்படி உருவாகும். .வேதனையிலும் பிரசவிப்பது நல்லதே. என்ற கருத்து அருமை...! நன்றிதொடர வாழ்த்துக்கள்.....!
கவிதைக்குள் கவிஞனைத் தேடினால்
கவிதைகள் நீர்த்துப் போகும்
கவிஞனுக்குள் கவிதையைத் தேடினால்
'தங்க முட்டை வாத்தே' மிஞ்சும்//
ஒற்றைச் சொல்! அருமை!
எப்படி நெருக்கடியிலும் பிறப்பெடுப்பவைதானே படைப்பு?இன்னும் சொல்லபோனால் நெருக்கடி நேரத்தில் பிறக்கிற படைப்பிற்கு பலம் அதிகம்,நன்றாகவும் இருக்கும்.பாறையினூடாக வளர்ந்த பயிரைப்போல/
"கவிஞனைப் பாதிக்கும்
நிகழ்வுகளும் உணர்வுகளும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன
கவிதைகள் பிறந்து கொண்டுதான் இருக்கின்றன." என்ற
உண்மை - என்றும்
அழியாத உண்மை!
பாவலர்களின் உண்மை நிலையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
ஆகா! அருமை. தொடருங்கள்.
தாங்கள் சொல்வது உண்மைதான்.
ஆனாலும் விரைவில்
விலகியவர்
புரிந்து கொள்வர்
இன்னும் நெருக்கமாய்
இணைந்து கொள்வர்
மில்டன் போன்றவர்களுக்கு இப்படியொரு அவஸ்தை ஏற்பட்டதடா? கவிதைக்குள் கவிஞனைத் தேடும் முயற்சியின் தவறை மிக அழகாக உணர்த்தி விட்டீர்கள்! மனம் கவர்ந்த பகிர்வு!
கவிதைகள் இயற்றும் கவிஞனுக்குத் தான் எத்தனை பிரச்சனைகள்.....
மீள் பதிவு எனினும் மீண்டும் படிக்க பிடித்த பதிவு....
Post a Comment