நாசிக்கு மணமும்
நாவுக்குச் சுவையும்
ஊசிமனைக் குறையும் இன்றி-உணவு
முழுமையாத் தந்த போதும்
உடலுக்கு ஊறு
விளைவிக்கு மாயின்
விஷம்போலத் தானே உணவு-அதை
விலக்குதல் தானே அறிவு
மயங்கிடும் வண்ணமும்
மதித்திடும் வண்ணமும்
உயர்தர உடையே ஆயினும்-அதனால்
மதிப்பது கூடும் போதினும்
சூழலுக்கு மாறாய்
இருந்திடு மாயின்
தீயது தானே உடையே-அதைத்
தவிர்த்திடல் தானே முறையே
அரண்மணை அளவும்
மயக்கிடும் அழகும்
நிறைந்தே இருந்த போதும்-வீடு
வியத்திட வைத்த போதும்
நிம்மதிக்கு ஊறாய்
இருந்திடு மாயின்
நிச்சயம் வீடும் காடே-அதில்
வசிப்பதும் துயரம் தானே
பாகுபோல் எதுகையும்
பால்போல் மோனையும்
ஏதுவாய் கலந்த போதும்-கவிக்கு
சுவையாக அமைந்த போதும்
பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே
நாவுக்குச் சுவையும்
ஊசிமனைக் குறையும் இன்றி-உணவு
முழுமையாத் தந்த போதும்
உடலுக்கு ஊறு
விளைவிக்கு மாயின்
விஷம்போலத் தானே உணவு-அதை
விலக்குதல் தானே அறிவு
மயங்கிடும் வண்ணமும்
மதித்திடும் வண்ணமும்
உயர்தர உடையே ஆயினும்-அதனால்
மதிப்பது கூடும் போதினும்
சூழலுக்கு மாறாய்
இருந்திடு மாயின்
தீயது தானே உடையே-அதைத்
தவிர்த்திடல் தானே முறையே
அரண்மணை அளவும்
மயக்கிடும் அழகும்
நிறைந்தே இருந்த போதும்-வீடு
வியத்திட வைத்த போதும்
நிம்மதிக்கு ஊறாய்
இருந்திடு மாயின்
நிச்சயம் வீடும் காடே-அதில்
வசிப்பதும் துயரம் தானே
பாகுபோல் எதுகையும்
பால்போல் மோனையும்
ஏதுவாய் கலந்த போதும்-கவிக்கு
சுவையாக அமைந்த போதும்
பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே
32 comments:
மிக அருமையாக சொல்லிடீங்க அய்யா...
மொத்த சமூகமும் இங்கே கௌரவப் பிரியர்கள். இதில் விலக்க வேண்டியவை,தவிர்க்க வேண்டியவை எல்லாம் விலக்கப்படுவதும் இல்லை, தவிர்க்கப்படுவதும் இல்லை. உணவில் பாட்டில் பானங்களும், நூடுல்ஸ்களும், உடையில் கோர்ட் சூட்டுகளும் இந்த வகையில் கௌரவத்திற்காக முன்னிறுத்தப்படுபவை.
பிணத்திற்கு மாலை அடையாளமான போதும் ஆளுயர மாலையை இருவர் மூங்கிலின் நடுவில் தூக்கிவந்து பிணத்திற்கு அணிவித்து கௌரவம் நிலை நாட்டியதை நான் பார்த்திருக்கிறேன். சமூதயம் உணர்வு பூர்வமானது எனவே நிலை மாறப்போவதில்லை.
'பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே'
அருமையான உவமையும், ஆழ்ந்த உள்ளடக்கமும் கொண்ட அழகான கவிதை அய்யா.
பயனற்ற கரு கொண்ட கவிதையும் உருவாக தெரிந்தாலும் பிணம்தான் !
த ம 2
''..விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே...'''
நல்ல உவமைகள் .
ரசனை, சிந்தனையுடைத்து.
நன்றி
பாராட்டுடன்.
வேதா. இலங்காதிலகம்.
ரசிக்க வைத்த கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .
வணக்கம்!
சொல்லழகும் வல்ல பொருளழகும் சூழ்ந்தொளிரும்
நல்லழகுப் பாட்டின் நடை!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
மிக அருமை. நன்றாகச் சொன்னீர்கள்.
///பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்///
அருமை ஐயா
நன்று சொன்னீர்கள்
தம 6
என் மனதிலும் இருக்கிற எண்ணம் இது. இத்தனை அழகாகச் சொல்லுதல் உங்களுக்கே உரித்தான திறன். பிரமாதம் ஐயா.
நன்றாக... உண்மையைச் சொன்னீர்கள் ஐயா...
பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே
கடுமையாய் சுட்ட போதிலும்
உண்மை உண்மைதானே..!
அருமை .
அருமையாக சொன்னீர்கள் உண்மையை.
போலி கவுரவம் வேண்டாம் வாழ்க்கையில், அருமை ஐயா...
பிணம் கொண்ட மாலை! அருமையான உவமை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள் ஐயா!
பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே
நச் என்று இருக்கிறது! அருமை!
"உடலுக்கு ஊறு
விளைவிக்கு மாயின்
விஷம்போலத் தானே உணவு-அதை
விலக்குதல் தானே அறிவு" என்ற
வழிகாட்டலை வரவேற்கிறேன்.
பிணம் கொண்ட மாலைக்கு புதுப்புது உவமைகள்! புதுமைதான்!
த.ம.13
நன்றாகச் சொன்னீர்கள் அன்பரே.
யதார்த்தம் சிறந்த கவிதையாக வடிவெடுத்துள்ளது. நன்றி.
அருமையான உவமைகள்....
வணங்குகிறேன் இரமணி ஐயா.
வணக்கம்
ஐயா
அருமையான சொல் வீச்சுக்கள் கவிதையில் துள்ளி விளையாடுகிறது நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பயனற்ற கருவுக்கு
பல்லக்கு தூக்கின்
விழலுக்கு நீர்போல் தானே-நிச்சயம்
பிணம் கொண்ட மாலை தானே
யாரும் இதுவரை சொல்லாத உவமை! உம் திறன் கண்டு வியக்கிறேன்! வாழிய! இரமணி!
பயனற்ற கருவிற்கு பல்லக்கு தூக்கின் விழலுக்கு இறைத்த நீர் போல.....
நல்ல உவமை.
நாடுபோய்க் கொண்டிருக்கும் விதம் எது தவிர்க்கப்படவேண்டுமோ அதுவே விரும்பிச் செய்யப்படுகிறது ஒரு வேளை விழலுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் ஆங்கே பொசிவதுபோல ////////
இரசித்தேன்! நன்றி ஐயா!
பலவற்றை கவிதைக்குள் வைத்து தந்துவிட்டீர்கள்.
அருமை
த்.ம.17
கவிதையில் கூட வாழ்க்கையை சொல்லமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.
Killergee
www.killergee.blogspot.com
Post a Comment