Monday, November 10, 2014

நாளும் சவமாய் வாழ்ந்து ....

நாம்தான் சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்
சுற்றிச் சுற்றித் திரிகிறோமா  ?

அழகிய மலரினைப்போல
குழ்ந்தையின் சிரிப்பினைப்போல
அன்றாட விடியலைப்போல

அழகானவை
இனிமையானவை
உயர்வானவை எல்லாம்

மறைப்பின்றி
எளிமையாய்
மிக அருகாமையில்
நம்மைச் சுற்றியே
வலம் வருகையில்

நாம் தான்
கண்ணை மூடி
காட்சி தேடி
மூடனாகத் திரிகிறோமா  ?

நாம் தினம் எதிர் கொள்ளும்
சுனாமிச் சீற்றங்களும்
பூகம்ப அதிர்வுகளும்
எரிமலை குழம்புகளும் கூட
நம்முள்
எவ்வித சலனங்களையும்
ஏற்படுத்தாது போக....

வெகு சிலருக்கோ.....
...
முதலிரவில் மறுத்துச் சொன்ன
ஒரே ஒரு வார்த்தை.கூட..
கை மாறி மாறி வந்து சேர்ந்த
ஒரு சிறு கனி.கூட..
அலைந்து ஓய்ந்துச் சாய்ந்த
அடி மரத்து நிழல் கூட
விழிபடைதலுக்கு
போதுமானதாகிப் போக
போதி மரமாகி போக

நாம்தான்
கோடாலி கொண்டு
நகம் வெட்ட முயன்று
தினம் நொந்து வீழ்கிறோமா  ?

நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்தும்
சூட்சுமம் அறியும்  உபாயமறியாது ம்
 நாளும் சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ? 

15 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
ாசொல்லிய வார்த்தைகள் அத்தனையும் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...

செப்புத்தமிழ் கொண்டு செதுக்கிய கவி அருமை ஐயா.

ஸ்ரீராம். said...

இதை உரத்த சினதனையாகக் கொண்டு ஒரு அறிவுரை போல ஏற்றுக் கொள்ளலாம்.

ஆத்மா said...

அழகான பொழுதுகளை ஐ போனுக்குள் போக்கும் இப்போதைய சமூகமும் நாளும் சவமாய்தான்
நன்று ஐயா

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கவிதை! சூட்சுமம் அறிந்தால் சுகம்தான்! இல்லையேல் சவம்தான் என்று உணர்த்தியமைக்கு வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

கவி அருமை ஐயா
தம 1

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிந்திக்க வைக்கு சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

அன்புடையீர்,

வணக்கம்.

http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

மேற்படி பதிவினில் அறிவிக்கப்பட்டுள்ள தங்களுக்கான பரிசுத்தொகை இன்று 10.11.2014 திங்கட்கிழமை தங்களின் வங்கிக்கணக்கினில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களுக்கான பணம் கிடைக்கப்பட்ட விபரத்தை தாங்கள் உறுதிசெய்து மேற்படி பதிவினில் ஓர் பின்னூட்டம் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சியடைவேன்.

அவசரம் இல்லை. தங்களால் முடிந்தபோது, செளகர்யப்பட்டபோது உறுதி செய்தால் போதுமானது.

அன்புடன் கோபு [VGK]

Unknown said...

சூட்சுமம் இருப்பது சூன்யத்தில் ,நாம் வேறு 'ஒன்றில் 'தேடிக்கொண்டிருந்தால் ......விடிவேது ?
த ம 2













Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே!

சிறப்பான கவிதை, சிந்திக்க வைக்கும் வரிகள்.

\\நாம்தான்
விழிகள் மூடும்வரை
விழிப்படையாதிருந்தும்
சூட்சுமம் அறியும் உபாயமறியாது ம்
நாளும் சவமாய் வாழ்ந்தே சாகிறோமா ? //

நாம் அனைவரும் என்றுமே இந்த உண்மையை உணராமல் இருக்கிறோமோ என்று எண்ண வைத்தது அருமை.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Avargal Unmaigal said...

நான்ரசித்து படித்த சிந்திக்க வைக்கும் சிறப்பான கவிதை பாராட்டுக்கள்

Anonymous said...

நாம்தான் சூட்சுமம் தெரியாது
செக்கு மாடாய்.......ஆம் உண்மை தான்...
சூட்சுமம் தெரிந்தால் ஏன் இந்தப் பாடு....
நல்ல கேள்விகள் தான்.
வேதா. இலங்காதிலகம்.

மகேந்திரன் said...

சுற்றிய சூழலின்
சூத்திரம் கற்கவும்
சூட்சுமம் வேண்டுமென உரைக்கும்
அழகான கவிவரிகள் ஐயா..

சசிகலா said...

எதை எதையோ தேடி ஓட்டம் . நம்மை நெருங்கி கிடக்கும் சூழலை அறியா செக்கு மாடுகளாய் மானுடம். உண்மை தான் ஐயா.

Thulasidharan V Thillaiakathu said...

சூட்சுமம் தெரியாமல் விடை தேடி எங்கோ எதையோ தேடி அலைந்து வழி தவறி முட்டிச் சவமாக வாழ்கின்றோம்! அருமையான சிந்திக்க வைக்கும் கவிதை!

Post a Comment