Wednesday, November 5, 2014

காதலிலே காமமது உப்புப் போலத்தான்

ஆண் :முத்தத்துக்கும் சப்தத்துக்கும்
            ஏழாம் பொருத்தம்
            சித்தத்துக்கும் முத்தத்துக்கும்
            நூறு பொருத்தம்
           சப்தமின்றி மொத்தமாக கண்ணே வாடி -நாம
           சொர்க்கத்துக்கு குடிபோவோம் முன்னே வாடி

பெண் :சப்தமாகப் பேசாதே
             கேணக் கிறுக்கா
             மொத்தஊரும் கேட்குதடா
            ஸ்பீக்கர் கணக்கா
            நிச்சயம்தான் ஆகட்டும் அடுத்த மாசமே-நான்
            நம்பிஎன்னை தந்திடுறேன் மொத்த மாகவே

ஆண் :தவிக்கிறப்ப இல்லாட்டி
             தண்ணி எதுக்கு
             பசிக்கிறப்ப இல்லாட்டி
            சோறு எதுக்கு
            தவிக்கிறேண்டி தூக்கமின்றி
            நாளு நாளா-கொஞ்சம்
            சூடேத்திப் போயேண்டி சாயா கணக்கா

பெண்:வெத்துக்கஞ்சி ஆனாலும்
            ஆசை மச்சான்
            வக்கணையா தின்னவேணும்
            அழகு மச்சான்
            மெச்சுவீட்டுக் கறிக்கஞ்சி ஆனா கூட-கையில்
            வைச்சுத்தின்னா ருசித்திடுமா சொல்லு மச்சான்

ஆண் : மோகத்திலே வேகத்திலே
              பேசிப் புட்டேன்
              தாமதமா தவறுன்னும்
             புரிஞ்சுக் கிட்டே
             ஏகமனதா என்னைநீயும் மன்னிச்சுடுடி-என்றும்
             தவறாம கண்ணாலயே பேசிப் போடி

கோரஸாக :
           காதலிலே காமமது
           உப்புப் போலத்தான்
          கூடப்போனா வாழ்வதனை
          மாத்திப் போகும்தான்
         வேதமாக மனசிலிதை வைச்சுப் புட்டோம்-இனி
         எந்தநாளும் திருநாள்தான் புரிஞ்சுக் கிட்டோம்

        (பட்டுக்கோட்டையார் கவியரசு அவர்களுக்கு
        முந்திய காலங்களில் சினிமா காதல் பாடல்கள்
        பாணியில் ஒரு நிகழ்வுக்காக எழுத முயன்றது )

21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

// சூடேத்திப் போயேண்டி சாயா கணக்கா... //

ஓஹோ..!

கோமதி அரசு said...

மிக அருமை.

நல்ல கருத்தை சொல்லும் கவிதை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆஹா திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் ஹிட் ஆகி இருக்கும்.
//காதலிலே காமமது உப்புப் போலத்தான் //
வள்ளுவன் கருத்தை பாடலில் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் அருமை ரமணி சார்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தம4

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.!

சிறப்பான வார்த்தை,வரிகளுடன் ௬டிய நல்ல கருத்தை தந்த கவிதை.! படித்து ரசித்தேன்.!
பகிர்வுக்கு நன்றி.!

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எண்ண வெளிப்பாட்டை மிகவும் யதேச்சையாகக் கொணரும் சொற்களைக் கொண்ட கவிதை. கவிதையில் லயித்தேன். நன்றி.

சசிகலா said...

அழகான கருத்தை அற்புதமாக உரையாடலில் வெளிபடுத்திய விதம் சிறப்புங்க ஐயா.

Anonymous said...

சப்தமின்றி மொத்தமாக
சொர்க்கத்துக்கு குடிபோவோம்......
அடடா!...காதல் ...காமம் சொட்டியது....
ரசனையே!...நன்று...நன்று...
வேதா. இலங்காதிலகம்.

அருணா செல்வம் said...

ஜாலியான இசைப்பாடல் இரமணி ஐயா.
த.ம. 6

KILLERGEE Devakottai said...

அருமையான கவி ஐயா.

ananthako said...

உப்பு அதிகமானால் உப்புள்ள பண்டம் குப்பையிலே.அது பக்குவப்படனும் சேர்க்கையிலே முத்த எதிர்ப்பு வெட்டவெளியிலே ,அதுவிலங்கினமே ,இதற்கு ஆதரவால் நாடு விலங்கிடுமோ, நல்ல பாடல்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
அருமையான உரையாடல் நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி ஐயா.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சென்னை பித்தன் said...

//காதலிலே காமமது
உப்புப் போலத்தான்//
அருமையான கவிதை

Unknown said...

இதெல்லாம் அந்த காலம் .இப்போதைய காதல் 'உப்புக் கண்டக்' காதல் :)
த ம 8

Thulasidharan V Thillaiakathu said...

கேணக் கிறுக்கா
மொத்தஊரும் கேட்குதடா
ஸ்பீக்கர் கணக்கா// ஹஹஹ்

கொஞ்சம்
சூடேத்திப் போயேண்டி சாயா கணக்கா
மிகவும் ரசித்தோம் !! அருமை!

Avargal Unmaigal said...

மிகவும் ரசித்தேன் இந்த மாதிரி எளிமையாக கவிதைகள்தான் எனக்கு மிகவும் பிடிக்கிறது. படிக்க ஆரம்பிக்க போது என்ன ரமணி சார் தளத்தை க்ளிக் பண்ணினால் தென்றல் சசிகலா பக்கம் வந்துவிட்டது போல இருந்தது. அதன் பிந்தான் தெரிந்தது இது உங்கள் பக்கம் என்று... இன்றை தினத்த்தில் நான் ரசித்து படித்த கவிதை இது அருமை அருமை அருமை

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை ஐயா
தம 9

Kavinaya said...

நல்ல கருத்து. ரசித்தேன்!

”தளிர் சுரேஷ்” said...

எளிமையும் இனிமையும் கலந்த சுவையான பாடல்! வாழ்த்துக்கள்!

மகேந்திரன் said...

பாட்டாகவே பாடி பார்த்துட்டேன் ஐயா..
அற்புதமான வரிகள்...ஆழமான கருத்து...

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கவிதை......

மெட்டமைத்து பாடினால் நன்றாக இருக்கும்....

த.ம. +1

Post a Comment