உலகில் சரித்திரம் சிலரை தலைவராக்கி
தன் தேவையைப்பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது.
சில தலைவர்கள் தங்கள் அபரீதமான உழைப்பால்,
கடவுளின் அருட்பார்வையால்,மக்களின்
பூரண உழைப்பால்சரித்திரத்தை தலைகீழாய்ப்
புரட்டிப் போட்டிருக்கிறார்கள்
இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவர் நீங்கள்
தங்களை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி என்பது கூட
ஒரு யானையை பானைக்குள் திணிக்க எடுக்கும்
அற்ப முயற்சியே.தமிழகத்தின் அனைத்து பிரிவினரும்
ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள தங்களை
ஒரு சிறு வட்டத்திற்குள் அடைக்க முயலும் முயற்சி
அற்பத்தனமானதே. அது வேண்டாம்
பெரும்பாலான மக்களுக்கும் இதில் உடன்பாடில்லை
ஆயினும் தங்கள் பாஷையில் சொன்னால்
ஒரு துளி வியர்வைக்கு நூறு கோடி தங்கக் காசை
அள்ளித் தந்த தமிழகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்
என்கிற தீவிர எண்ணம் தங்களுக்கு இருப்பதால்
தங்களின் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
இந்தப் பேருதவியை செய்து தந்தால் தமிழகம்
இன்றுபோல்உங்களை என்றும் கொண்டாடும்
தமிழகத்தைச் சார்ந்த மதிப்பிற்குரிய
சி.சுப்ரமணியம் அவர்கள்நிதியமைச்சராக
இருந்த காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருந்த
கடுமையான பஞ்சத்தை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட
பல்வேறு நடவடிக்கைகளில் விஷமாக
ஒட்டிக் கொண்டு வந்ததுதான் இந்த
நாசகாரச் சீமைக் கருவேலை
இதனுடைய அபரீதமான பெருக்கம்
மண்வளம் கெடுத்துநீர்வளம் கெடுத்து
காற்றிலுள்ள ஈரப்பதத்தையும்
உறிஞ்சுவதன் மூலம் சுற்றுச் சூழலையும் கெடுத்து
இப்போது தமிழகத்தை நாசகாடாக்கிக் கொண்டிருக்கிறது
அண்டை மாநிலமான கேரளத்தில் அரசின் உதவியோடு
சீமைக் கருவேல முள்ளை முற்றிலும் அழித்து
தங்கள் மண்ணைச் சொர்க்க பூமியாக்கிவிட்டார்கள்
நாம்தான் நரகத்தின் இடையில் நிற்கிறோம்
இதன் தீமைகளை முற்றாக அறிந்து
நான் சார்ந்திருக்கிறஅரிமா சங்கத்தின் 324 பி3
மாவட்டத்தின்ஆளுநர் திரு.ரகுவரன் அவர்கள்
தனது ஆண்டுக்குரிய சேவைத் திட்டமாக
சீமைக் கருவேல முள்ளை அகற்றுதலைச்
செய்யமுனைய அனைவரின் ஒத்துழைப்போடு
இதுவரைமதுரை தேனி சிவகங்கை திண்டுக்கல்
முதலானமாவட்டங்க்களில்5000 ஏக்கருக்கு
மேற்பட்ட நிலப் பரப்பில்
இதனை அகற்றிவிட்டோம்.
இன்னும் அகற்றிக் கொண்டிருக்கிறோம்
ஆயினும் இதனை விழிப்புணர்வு இயக்கமாகத்தான்
செய்ய முடிகிறதே ஒழிய முற்றாக
ஒழிக்க இயலவில்லை
எங்கள் முயற்சி வானளவு வளர்ந்து நிற்கும் ஒரு
கொடிய அரக்கனை சிறுகம்பு கொண்டு வெல்ல
முயல்வது போலத்தான் உள்ளது
தாங்கள் மனது வைத்தால் தங்கள் பிறந்த நாள்
கோரிக்கையாக மக்களிடன் இந்த கருத்தை மட்டும்
வலியுறுத்தினால் ,தமிழகத்தில் ஏதேனும் ஓரிடத்தில்
நீங்கள் ஒரு முள்ளை வெட்டினால்போதும்
நிச்சயம் தமிழகத்திலிருந்து இந்த கருவேல முள்
அடியோடுஒழிக்கப் பட்டுவிடும்
இதற்கான சேடலைட் மூலம் தமிழகத்தில் உள்ள
ஒட்டு மொத்தகருவேல முள் பரப்பையும் அதனை
விஞ்ஞானப் பூர்வமாக ஒழிப்பதற்கான
செயல் திட்ட முறைகளையும்
தருவதோடு உடன் இணைந்து பணியாற்றவும்
பல இயக்கங்கள் எங்களைப் போல தயாராக உள்ளன
தங்கள் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
தமிழ் மண்ணின் வளத்தை மட்டும் மீட்டுத் தாருங்கள்
இதை அரசு செய்ய முடியாது.தாங்கள் நினைத்தால்
நிச்சயம் இதைஒரு மக்கள் இயக்கமாக்கி
சாதித்துக் காட்டமுடியும்
அதைத் தொடர்ந்து தமிழக மக்களின்
வாழ்வில் வளமும் நலமும் மாண்பும்
நிச்சயம் பல்கிப் பெருகும்
நிச்சயம் இது தமிழக மக்களுக்குச் செய்த வாழ்நாள்
பேருதவியாகவும் இருக்கும்
உங்கள் வாழ் நாள் சாதனையாகவும் இருக்கும்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தன் தேவையைப்பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது.
சில தலைவர்கள் தங்கள் அபரீதமான உழைப்பால்,
கடவுளின் அருட்பார்வையால்,மக்களின்
பூரண உழைப்பால்சரித்திரத்தை தலைகீழாய்ப்
புரட்டிப் போட்டிருக்கிறார்கள்
இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவர் நீங்கள்
தங்களை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி என்பது கூட
ஒரு யானையை பானைக்குள் திணிக்க எடுக்கும்
அற்ப முயற்சியே.தமிழகத்தின் அனைத்து பிரிவினரும்
ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள தங்களை
ஒரு சிறு வட்டத்திற்குள் அடைக்க முயலும் முயற்சி
அற்பத்தனமானதே. அது வேண்டாம்
பெரும்பாலான மக்களுக்கும் இதில் உடன்பாடில்லை
ஆயினும் தங்கள் பாஷையில் சொன்னால்
ஒரு துளி வியர்வைக்கு நூறு கோடி தங்கக் காசை
அள்ளித் தந்த தமிழகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்
என்கிற தீவிர எண்ணம் தங்களுக்கு இருப்பதால்
தங்களின் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
இந்தப் பேருதவியை செய்து தந்தால் தமிழகம்
இன்றுபோல்உங்களை என்றும் கொண்டாடும்
தமிழகத்தைச் சார்ந்த மதிப்பிற்குரிய
சி.சுப்ரமணியம் அவர்கள்நிதியமைச்சராக
இருந்த காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டிருந்த
கடுமையான பஞ்சத்தை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட
பல்வேறு நடவடிக்கைகளில் விஷமாக
ஒட்டிக் கொண்டு வந்ததுதான் இந்த
நாசகாரச் சீமைக் கருவேலை
இதனுடைய அபரீதமான பெருக்கம்
மண்வளம் கெடுத்துநீர்வளம் கெடுத்து
காற்றிலுள்ள ஈரப்பதத்தையும்
உறிஞ்சுவதன் மூலம் சுற்றுச் சூழலையும் கெடுத்து
இப்போது தமிழகத்தை நாசகாடாக்கிக் கொண்டிருக்கிறது
அண்டை மாநிலமான கேரளத்தில் அரசின் உதவியோடு
சீமைக் கருவேல முள்ளை முற்றிலும் அழித்து
தங்கள் மண்ணைச் சொர்க்க பூமியாக்கிவிட்டார்கள்
நாம்தான் நரகத்தின் இடையில் நிற்கிறோம்
இதன் தீமைகளை முற்றாக அறிந்து
நான் சார்ந்திருக்கிறஅரிமா சங்கத்தின் 324 பி3
மாவட்டத்தின்ஆளுநர் திரு.ரகுவரன் அவர்கள்
தனது ஆண்டுக்குரிய சேவைத் திட்டமாக
சீமைக் கருவேல முள்ளை அகற்றுதலைச்
செய்யமுனைய அனைவரின் ஒத்துழைப்போடு
இதுவரைமதுரை தேனி சிவகங்கை திண்டுக்கல்
முதலானமாவட்டங்க்களில்5000 ஏக்கருக்கு
மேற்பட்ட நிலப் பரப்பில்
இதனை அகற்றிவிட்டோம்.
இன்னும் அகற்றிக் கொண்டிருக்கிறோம்
ஆயினும் இதனை விழிப்புணர்வு இயக்கமாகத்தான்
செய்ய முடிகிறதே ஒழிய முற்றாக
ஒழிக்க இயலவில்லை
எங்கள் முயற்சி வானளவு வளர்ந்து நிற்கும் ஒரு
கொடிய அரக்கனை சிறுகம்பு கொண்டு வெல்ல
முயல்வது போலத்தான் உள்ளது
தாங்கள் மனது வைத்தால் தங்கள் பிறந்த நாள்
கோரிக்கையாக மக்களிடன் இந்த கருத்தை மட்டும்
வலியுறுத்தினால் ,தமிழகத்தில் ஏதேனும் ஓரிடத்தில்
நீங்கள் ஒரு முள்ளை வெட்டினால்போதும்
நிச்சயம் தமிழகத்திலிருந்து இந்த கருவேல முள்
அடியோடுஒழிக்கப் பட்டுவிடும்
இதற்கான சேடலைட் மூலம் தமிழகத்தில் உள்ள
ஒட்டு மொத்தகருவேல முள் பரப்பையும் அதனை
விஞ்ஞானப் பூர்வமாக ஒழிப்பதற்கான
செயல் திட்ட முறைகளையும்
தருவதோடு உடன் இணைந்து பணியாற்றவும்
பல இயக்கங்கள் எங்களைப் போல தயாராக உள்ளன
தங்கள் பிறந்த நாள் பரிசாக தமிழக மக்களுக்கு
தமிழ் மண்ணின் வளத்தை மட்டும் மீட்டுத் தாருங்கள்
இதை அரசு செய்ய முடியாது.தாங்கள் நினைத்தால்
நிச்சயம் இதைஒரு மக்கள் இயக்கமாக்கி
சாதித்துக் காட்டமுடியும்
அதைத் தொடர்ந்து தமிழக மக்களின்
வாழ்வில் வளமும் நலமும் மாண்பும்
நிச்சயம் பல்கிப் பெருகும்
நிச்சயம் இது தமிழக மக்களுக்குச் செய்த வாழ்நாள்
பேருதவியாகவும் இருக்கும்
உங்கள் வாழ் நாள் சாதனையாகவும் இருக்கும்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
31 comments:
செய்வாரா?
முடியும்.... ஆனால் முடியாது....!
நண்பர் திண்டுக்கல்லாரின் மொழியை வழி மொழிகிறேன் ஐயா.
எமது மதுரை பதிவை காண வருக....
நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிய இந்த பதிவை எனது பேஸ்புக் தளத்தில் பகிர்கிறேன்
He may not be doing that
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
அவர் செய்தால் நன்றாக இருக்கும்...ஆனால் அவர் யோசித்து முடிக்கும் முன் அடுத்த பிறந்த நாள் வந்தாலும் ஆச்சரியம் இல்லை....தமிழ் மண் தன்னை இத்தனை தூரம் வளர்த்தது என்று அவர் உண்மையாக நினைத்தால் இதை செய்யலாம். அவர் ஒரு குரல் கொடுத்தால் முள் காணாமல் போகும்.. ஆண்டவன் சொன்னால் இந்த அருணாசலம் செய்வான்...மக்கள் கூட ஆண்டவன் தானே...? நல்ல பதிவு ஐயா. நன்றி
R.Umayal Gayathri said..//
மிகச் சிறந்த
என் மனம் கவர்ந்த பின்னூட்டம்
மிக்க நன்றி
ஸ்ரீராம். said..//.
செய்வாரா?
செய்வார் போலத்தான் தோன்றுகிறது
பார்ப்போம்
உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
முதலில் இப்படியான எதிர்பார்ப்புகள் நாம் அவர் முன் வைக்கிறோம் என்பதை அவர் கவனிப்பாரா ? என்பதே என் ஐயம்.
திண்டுக்கல் தனபாலன் said...//
முடியும்//
முடியும் என்வே நம்புவோம்
முடிந்தால் தங்கள் தளத்திலும்
பகிரவும்.அவரிடம் விஷயம் போய்ச்
சேருகிறதோ இல்லையோ
அதிக மக்களிடம் போய்ச்சேர்ந்தாலே
இது குறித்து ஒரு விழிப்புணர்வு
நிச்சயம்ஏற்படும்
அதற்காகவே இந்தப் பதிவு
KILLERGEE Devakottai said...//
நண்பர் திண்டுக்கல்லாரின் மொழியை வழி மொழிகிறேன் ஐயா.//
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Avargal Unmaigal said...//
நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிய இந்த பதிவை எனது பேஸ்புக் தளத்தில் பகிர்கிறேன்//
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
பகைர்வுக்கும் மனமார்ந்த நன்றி
Balaji said...
He may not be doing that//
செய்வார் எனவே நம்புகிறேன்
Yarlpavanan Kasirajalingam said...//
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்//
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
பகைர்வுக்கும் மனமார்ந்த நன்றி
Sasi Kala said...//
முதலில் இப்படியான எதிர்பார்ப்புகள் நாம் அவர் முன் வைக்கிறோம் என்பதை அவர் கவனிப்பாரா ? என்பதே என் ஐயம்.
நிச்சயம் கவனிப்பார் செய்வார்
கலைஞர் அவர்களிடமும் சூப்பர் ஸ்டாரிடம்
உள்ள சிறந்த குணமே தகவல்களைப்
பெறுவதற்கு எப்போதும் தயாராய் இருப்பார்கள்
என்பதுதான்
பார்ப்போம் நல்லதை எதிர்பார்ப்போம்
அவர் பார்வைக்குச் சென்றால் நிச்சயம் ஏதாவது செய்வார் என்று நம்புகிறேன்.
நல்ல முயற்சி . தொடரட்டும் சார்
நல்லதொரு கோரிக்கை நிறைவேற வாழ்த்துகள்.
மக்கள் கலைவாணர் விவேக் அவர்கள் பத்து லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் எங்கும் நட்டு சாதனை செய்தார் ,ரஜினி நினைத்தால் ...கருவேல இனமே அழிந்து போகும் என்பது உண்மைதான் !
த ம 5
வணக்கம் !
சமூகத்தின் நலன் கருதித் தாங்கள் முன்வைத்த இக் கோரிக்கையானது சம்மந்தப் பட்டவரின் பார்வைக்குக் கிட்டிடவும் அதன் விளைவாக இவ் வேண்டுகோள் நிறைவேறவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா !
இந்தச் செய்தி..... வேண்டகோல் அவரின் பார்வையில் பட்டால் நிச்சயம் செய்வார் என்றே நம்புகிறேன்.
அவர் சொன்னால் ஆண்டவன் சொன்னது போல் என்று எண்ணும் தமிழர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்க வேண்டும் என்று ரஜினி நினைத்தால்....இவ்வுதவியைச அவர் செய்தே ஆக வேண்டும். செய்வார்.
உங்கள் கண் அசைத்தால்
காற்றின் வேகத்தில் பணியிசைக்க
ஆயிரமாயிரம் பேர் இருக்கையில்
இதைச் செய்தால் என்ன? என்ற கேள்வியுடன்
நீங்கள் வைத்திருக்கும் இந்த அற்புதமான
படைப்பு உச்ச நடிகரின் உச்சத்தில் உறைக்கட்டும்...
செய்வார் என நம்புவோம்...
நாமும் அத்தகைய கிள்ளக் கிள்ள வளரும்
மகிஷாசுரனை வதைக்க சிறு முயற்சி எடுப்போம்...
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள். சீமைக் கருவேல மரத்தினால் ஏற்படும் தீமைகளை ரஜனிகாந்த் சொன்னால் தான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கேட்பார்களா, இதையே சீமான், திருமாவளவன் போன்ற தமிழர்கள் சொன்னால் கேட்க மாட்டார்களா? "மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது, மணிகட்டிய மாடு சொன்னால் தான் கேட்கும்” என்ற ஈழத்துப் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. :-)
நல்ல முயற்சிதான் ஐயா....
தம 9
நரேந்திர மோடியின் சுத்த பாரதத்துக்கான அழைப்பு போலிருக்கிறதே. . எல்லா இடங்களிலும் அரிமா சங்கத்தினர் முயன்றாலேயே சரியாகிவிடும். உங்கள் அழைப்பு அவர் காதில் விழவேண்டுமே.
அருமை .நல்ல கோரிக்கை. இதை ரஜினியின் கவனத்திற்கு யாரேனும் கொண்டு சென்றால் நல்லது நடக்க வாய்ப்பு இருக்கிறது.
சிறந்த சிந்தனை.
நடைமுறைபடுத்த சம்மந்தபட்டவர்
முன்வர வேண்டும்
அந்த அருணாச்சலேசுவரர் வழிகாட்ட வேண்டும்
வணக்கம்
ஐயா
தூங்கி கிடக்கும்சிங்கத்தை தட்டி எழுப்பிவிட்டது போல ஐயா... இந்த தகவல் நிச்சயம் சென்றடையுமாக இருந்தால் நல்லது நடக்கும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பதிவு வேண்டு கோள்! ரஜனிக்குப் போய் சேருகின்றதோ இல்லையோ மக்களுக்குப் போய் சேர்ந்தால் இயங்க மாட்டார்களா? அதனால் எங்கள் முகநூலில் இணைத்துப் பகிர்கின்றோம். கூகுள் + லும் பகிர்கின்றோம்.
Post a Comment