Wednesday, November 19, 2014

இலக்கியச் சோலையில் புத்தம் புதிய மலராய் ....

பொட்டு வைச்சுக் கோலம் போடும்
பருவப் பெண்ணைப் போல-பாத்திக்
கட்டி விட்டு நீரைப் பாய்ச்சும்-தெளிந்த
தோட்டக் காரன் போல

சந்தம் ஒண்ணு நெஞ்சில் கொண்டு
கவிதை எழுதிப் பாரு-உனக்குள்
விந்தை போல வார்த்தை நூறு
வந்து கொஞ்சும் பாரு

காய்ச்சீர் கனிச்சீர் போன்றுப் பெரிய
வார்த்தை எல்லாம் வேண்டாம்-புலிப்
பாய்ச்சல் போலப் பாய்ந்து பின்னே
பூனை யாக வேண்டாம்

புளிமா தேமா போன்று சிறிய
சீர்கள் இருந்தால் போதும்-அதிலே
எளிதாய் எந்தப் பெரிய கருத்தும்
சொல்லல்  எளிது  ஆகும்

புத்தம் புதிதாய் நித்தம் காலை
புலரும் கதிரோன் போல-தொடர்ந்து
நித்தம் ஒருகவி படைப்ப தென்ற
உறுதி நெஞ்சில் ஏற்று

நாளைய உலகில் தமிழில் நீதான்
சிறந்த கவியாய் இருப்பாய்-இலக்கியச்
சோலையில் புத்தம் புதிய மலராய்
மலர்ந்து என்றும் நிலைப்பாய்

16 comments:

Yarlpavanan said...

"புளிமா தேமா போன்று சிறிய
சீர்கள் இருந்தால் போதும்-அதிலே
எளிதாய் எந்தப் பெரிய கருத்தும்
சொல்லல் எளிது ஆகும்" என்பதில்
உண்மை உண்டு - அதனால் தான்
வெண்பாக் காரருக்கு ஈடாக
ஆசிரியப்பாக் காரரும் மின்னினரே!

KILLERGEE Devakottai said...

நம்பிக்கையூட்டும் நல்ல வரிகள் ஐயா.

ananthako said...

சீரும் இல்லை அணியும் இல்லை அது தமிழுக்கு அணியாகும் என்றே தமிழார்வம் தூண்டும் கவிதை .பாராட்டுக்கள்.

Anonymous said...

எழுதுங்கள் எழுதுங்கள் எல்லோரும் எழுதுங்கள்.
வேதா. இலங்காதிலகம்.

சசிகலா said...

இலக்கியச் சோலைக்குள் இளசுகளை நுழைக்கும் சிறந்த நோக்கம் அருமை அருமை. எதிலும் தமிழை எங்கும் தமிழாய் காண்போம் உலகை..

Unknown said...

சந்தம் ஒண்ணு நெஞ்சில் கொண்டு
கவிதை எழுதிப் பாரு-உனக்குள்
விந்தை போல வார்த்தை நூறு
வந்து கொஞ்சும் பாரு

உண்மைதான்!

கவியாழி said...

எனக்காகவே எழுதியதுபோல் இருக்கிறது.உண்மைதான்

vimalanperali said...

நாளைய உலகில் நானும் ஒரு கவிஞனாய் ரிஉஎதுவிட்டுத்தான் போகிறேனே/

இளமதி said...

தங்களின் பாடலே சந்தம் நிறைந்து
உள்ளம் கவர்ந்த பாடலாக இருக்கிறது ஐயா!

அருமை! வாழ்த்துக்கள்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
கருத்து நிறைந்த கவிதை கண்டு மனம் மகிழ்ந்தது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களின் ஆர்வம் பாராட்டத்தக்கது. தொடர்ந்து கவிதை எழுதுங்கள். படிக்கிறோம்.

திண்டுக்கல் தனபாலன் said...

தினமும் ரசிக்க காத்திருக்கிறோம் ஐயா...

இராஜராஜேஸ்வரி said...

சந்தம் ஒண்ணு நெஞ்சில் கொண்டு
கவிதை எழுதிப் பாரு-உனக்குள்
விந்தை போல வார்த்தை நூறு
வந்து கொஞ்சும் பாரு

விந்தை சிந்தும் சந்தம்..!

தி.தமிழ் இளங்கோ said...

வலைப் பதிவினில் புதுக்கவிதை பாட வரும் இளங்கவிஞர்களுக்கு , உற்சாகமூட்டும் கவிதை.
த.ம. 8

V. Chandra, B.COM,MBA., said...

கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

மனவெளி said...

கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

Post a Comment