Tuesday, November 4, 2014

உலகத் தலைமை கொள்வோம்

உலகை வென்ற தமிழா -நீயும்
ஓய்ந்து கிடத்தல் முறையா ?-இமயச்
சிகரம் வென்ற தமிழா -நீயும்
சிதறிக் கிடத்தல் அழகா ?

சைகை மொழியை உலகே-மெத்தச்
சார்ந்தி ருந்த வேளை-பொங்கும்
வைகைக் கரையில் மொழிக்குச்- சங்கம்
நிறுவி நின்ற  தமிழா         (உலகை )

நிலத்தின் வகைகள் அறிந்து-அதனை
ஐந்து வகையாய் உணர்ந்து-நாளும்
இயற்கை யுடனே இணைந்து-வாழும்
முறையைத் தெளிந்த தமிழா    (உலகை )

காதல் வீரம் தன்னை-இரண்டு
கண்ணைப் போலக் கொண்டு-நமது
சீலம் தன்னை உலகு  -நன்கு
அறிய வாழ்ந்த தமிழா

சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை
சிறுமைப் படுத்தும் சாபம்-அதனை
உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்
உலகத் தலைமை கொள்வோம்

23 comments:

கோமதி அரசு said...

அருமையான கவிதை.
ஒற்றுமை ஓங்குக!

இராஜராஜேஸ்வரி said...

சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை
சிறுமைப் படுத்தும் சாபம்-அதனை
உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்
உலகத் தலைமை கொள்வோம்

தலைமை ஏற்கும் அற்புத கவிதை...!

அம்பாளடியாள் said...

வணக்கம் !

சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை
சிறுமைப் படுத்தும் சாபம்//

ஒற்றுமையே பலம் தரும் என்று உணர்த்திய பாடல் வரிகள் அருமை !அருமை ஐயா ! வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் தங்கள் படைப்புகள் இடைவிடாது .

சசிகலா said...

இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த தமிழன் தான் இன்று இயற்கையையும் சிதைத்து தம்மையும் சிதைத்து ஒற்றுமையில்லாமல் வாழுகின்றான். சிறப்பாக சொன்னீர்கள் ஐயா.

G.M Balasubramaniam said...

/உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்
உலகத் தலைமை கொள்வோம்/நல்ல ஆசை..! வாழ்த்துக்கள்

தருமி said...

நமக்குத் தெரிந்த உரை நடையில் ஏதாவது எழுதி விட்டால் ஒரு பின்னூட்டம் போட்டு விடலாம் எனக் காத்திருக்கிறேன்!!

தினேஷ்குமார் said...

சிதறி கிடப்பது தவறே சிந்தனை முன்னமாய் ஓட முயல்வோம் ....

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...


தருமி said..//.
நமக்குத் தெரிந்த உரை நடையில் ஏதாவது எழுதி விட்டால் ஒரு பின்னூட்டம் போட்டு விடலாம் எனக் காத்திருக்கிறேன்!!//

எனக்குச் சதுரத் தோசை
சரியாய் வராதே

Unknown said...

சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை
சிறுமைப் படுத்தும் சாபம்-அதனை
உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்
உலகத் தலைமை கொள்வோம்

நன்று சொன்னீர்! முற்றிலும் உண்மை!

”தளிர் சுரேஷ்” said...

ஒற்றுமையே வெற்றிக்கு வழி என்பதை அழகாய் சொன்னது கவிதை! வாழ்த்துக்கள்!

Unknown said...

சுயநல வாதிகளுக்கு புரிந்தால் சரி !
த ம 7

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சிறுமைப்படுத்தும் சாபத்திலிருந்து விமோசனம் பெற முயலவேண்டும் . கவிதை எளிமை இனிமை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம8

துரைடேனியல் said...
This comment has been removed by the author.
துரைடேனியல் said...

அருமையான கவி மாலை சார். அற்புதமான சிந்தனை. சிதறிக் கிடத்தலே நம் தமிழருக்கு முன்னேற்றத்திற்கான தடைக்கல். நாம் ஒன்றுபட வேண்டும் சிந்தனையிலும் செயலிலும். அப்போது தமிழர்தம் வெற்றிக்கொடி உலகமெங்கும் பறக்கும்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய கவிதை ஒற்றுமையை புலப்படுத்தும் கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
த.ம10

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

V. Chandra, B.COM,MBA., said...

அருமை வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை... வாழ்த்துக்கள் ஐயா...

Yarlpavanan said...

"சிதறிக் கிடத்தல் ஒன்றே - நம்மை
சிறுமைப் படுத்தும் சாபம் - அதனை
உதறி ஒன்றாய் எழுவோம் - நிலையாய்
உலகத் தலைமை கொள்வோம்!" என்ற
வழிகாட்டலையே விரும்புகின்றேன்.
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.!

\\சிதறிக் கிடத்தல் ஒன்றே -நம்மை
சிறுமைப் படுத்தும் சாபம்-அதனை
உதறி ஒன்றாய் எழுவோம்-நிலையாய்
உலகத் தலைமை கொள்வோம்//

ஒற்றுமையின் வலிமையை அழகாக உணர்த்தியது கவிதையின் வரிகள்.! ரசித்தேன்.
பகிர்ந்தமைக்கு நன்றி.!

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.


சித்திரவீதிக்காரன் said...

தமிழர்கள் ஒருங்கிணைந்தால் வையத் தலைமை கொள்ளலாம் என்று சொல்லும் நல்லதொரு கவிதை.

வெங்கட் நாகராஜ் said...

ஒற்றுமை இருந்தால் உண்டு வாழ்வு.....

சிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா.

த.ம. +1

Post a Comment