Friday, January 2, 2015

உண்மையாகும் கட்டுக்கதைகள்

ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி   
எங்கோ ஒரு  மலைக் குகையில்
 உயிரை ஒரு கிளியிடம் வைத்துவிட்டு 
உல்லாசமாய்  உலவித் திரிந்த
அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளி என்பது 
சாத்தியமற்றதென்றும்
இது ஒரு  அர்த்தமற்றக் 
கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து
சாரமற்ற  என் படைப்பினுக்கும்
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
என்னுள்  ஒரு மாறுபட்ட சிந்தனை
மெல்ல மெல்ல மலரத்தான் செய்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ இருக்கும் உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது
அன்பிருந்தால்  நிச்சயம் சாத்தியமென்று
புரியத்தான் செய்கிறது

இப்போதெல்லாம்
அந்த அரக்கனின் கதை கூட
சாத்தியமென்றேப் படுகிறது எனக்கு 

15 comments:

துரை செல்வராஜூ said...

எங்கோ இருக்கும் உடலையும்
எங்கோ இருக்கும் உயிரையும்
ஓயவிடாது இயக்குதல் என்பது
அன்பிருந்தால் நிச்சயம் சாத்தியமென்று
புரியத்தான் செய்கிறது!..

சிறந்த சிந்தனை..
அன்பிருந்தால் ஆகாததும் உண்டோ!..

வாழ்க நலம்!..

”தளிர் சுரேஷ்” said...

அருமை! ஓப்பீடு செய்ய சொன்ன உவமை சிறப்பு! வாழ்த்துக்கள் ஐயா!

ஆத்மா said...

அன்பால் சாதிக்காதது ஏது
நன்று ஐயா

இளமதி said...

வணக்கம் ஐயா!

இந்த அன்புதான் எங்களை இங்கு இழுத்து வருவதுவும், உங்களை எங்கள் பதிவுகளுக்கு வந்து ஒருவார்த்தை தரமாட்டிர்களா என எண்ண வைப்பதுவும்!..
அற்புதமான, உண்மையான சிந்தனை! சிறப்பு!

ஆனாலும் ஒன்று ..
// சாரமற்ற என் படைப்பினுக்கும்..//

இந்த வரிதான் சாரமற்றது ஐயா!.. நீக்கிவிடுங்கள்..:)

தொடருங்கள்!.. வாழ்த்துக்கள் ஐயா!

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பே அனைத்தும் ஐயா... வாழ்த்துக்கள்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஐயா, அருமையான சிந்தனை ..உண்மை என்பதை நானும் உணர்கிறேன் .

சாரமற்ற படைப்பு என்று உங்கள் படைப்புகளைக் கூறி விட்டீர்களே!! அதை மட்டும் ஏற்கவில்லை ஐயா

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சாரமற்ற என் படைப்பினுக்கும்
உயிரளிப்போரை நினைக்க நினைக்க//

சாரமற்ற சிலரின் படைப்பினுக்கும் கூட ஓடிப்போய் உயிரளிப்போர் தாங்கள் மட்டுமே என்பதே என் எண்ணமாக உள்ளது. :)

ஆனால் நீங்க ஏதேதோ மாற்றிச் சொல்கிறீர்கள். தங்களின் தன்னடக்கம் எனக்குப் பிடித்துள்ளது, ரமணி சார்.

பகிர்வுக்கு நன்றிகள்.

Anonymous said...

''...
எங்கிருக்கும் உடலையும்
எங்கோ இருக்கும் உயிரும்
ஓயவிடாது இயக்குதெலென்பது
அன்பிருந்தால் நிச்சயம் சாத்தியமென்று
புரியத்தான் செய்கிறது...'''' mmmm...
Vetha.Langathilakam.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

அன்பே சிவம்.... நல்ல கருத்தை முன்வைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...


அருமை அருமை ஐயா.

அருணா செல்வம் said...

கவிதைப்படி பார்த்தால் உங்களின் உயிர், எங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது இரமணி ஐயா.

பல்லுயிர் படைத்தப் பாவலர் நீங்கள்.

வாழ்த்தி வணங்குகிறேன் இரமணி ஐயா.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அன்பினால் ஆகாதது உண்டோ?
நல்ல கருத்து

விச்சு said...

அன்புதான் உலகத்தை இன்னும் இயக்குகிறது. அருமை.

ananthako said...

தங்கள் படைப்புக்கு உயிரோட்டம் தரும் கருத்து
வையகம் முழுவதும் பெரும் உயிரோட்டம். அதில் எழுகடலும் எவரெஸ்ட் சிகரமும் தாண்டி பின் உயிரோட்டம் உற்சாகமும் கருத்தூற்று நல்ல ஒப்புமை .வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அருமை ரமணி ஜி!

த.ம. +1

Post a Comment