Monday, January 26, 2015

குடியரசுதினச் சிந்தனைகள்

நிராயுதபாணியான மிக மோசமான எதிரியையும்
இன்று போய் நாளை வா எனச் சொல்லிய
அவதாரப் புருஷர்களும்...

பகைவனுக்கருள்வாய் என ஆண்டவனை வேண்டும்
பரந்து விரிந்த மனம் படைத்த கவிஞர்களும்...

தன் நாட்டினுள் நுழைய விஸா வழங்க மறுத்த
அந்த நாட்டின் ஜனாதிபதியையே குடியரசு தின
விழாவினுக்கு விருந்தினராய் அழைக்கும்
மேன்மையும்...

நமது நாட்டில்தான் சாத்தியம் எனும்
பெருமிதத்தோடு...

அனைவருக்கும் இனிய குடியரசு தின
நல்வாழ்த்துக்கள்

(இன்னும் நமக்கேயான பெருமிதங்களைப்
பின்னூட்டத்தில் தொடரலாமே )

13 comments:

KILLERGEE Devakottai said...

குடியரசுக் கவிதை அருமை கவிஞரே...
தமிழ் மணம் 1
மதி விதியின் வழியா ? காண வாரீர்..

தி.தமிழ் இளங்கோ said...

கவிஞருக்கு எனது இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
த.ம.3

ஸ்ரீராம். said...

ஆம், ஆம், ஆம்!

குடியரசுதின வாழ்த்துகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
உண்மையான வரிகள்... பகிர்வுக்கு நன்றி த.ம 5
இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

குடியரசு ஆனபின் நாட்டின் வளர்ச்சி பெருமிதப் படும்படியா இல்லேன்னு படுதே!
த ம 6

Unknown said...

குடியரசுதின வாழ்த்துகள்.

kingraj said...

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் அய்யா.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒவ்வோராண்டும் எங்களது இல்லத்தில் சுதந்திர நாளன்றும், குடியரசு நாளன்றும் தேசியக்கொடியை ஏற்றிவருகிறோம் என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நன்னாள் கவிதை நன்று.

Thulasidharan V Thillaiakathu said...

தாமதத்திற்கு மன்னிக்கவும்! தாமதமான குடியரசு தின வாழ்த்துக்கள்! அருமையான குடியரசு வாழ்த்துத் தின கவிதை!

வெங்கட் நாகராஜ் said...

குடியரசு தின நல்வாழ்த்துகள்.

சென்னை பித்தன் said...

அழகான வாழ்த்து.
உங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தம 10

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெருமிதமான சிந்தனைகள் அருமை. வாழ்த்துகள்.

Post a Comment