Sunday, February 15, 2015

லெட்சுமணக் கோடு

பொறுமை கொஞ்சம்
அளவை மீறினால்
அது எருமை மாட்டுத்தனமே

சிக்கனம் கொஞ்சம்
கூடுதலாகிப் போனால்
அது கஞ்சத்தனமே

உரிமையும் கொஞ்சம்
எல்லை மீறினால்
அது அடாவடித் தனமே

அறவுரையும் கொஞ்சம்
அளவைத் தாண்டினால்
அது எல்லை மீறலே

பாண்டித்தியமும் கொஞ்சம்
அளவு தாண்டினால்
அதுவும் பாமரத்தனமே

அமிர்தமும் கொஞ்சம்
அளவு கூடினால்
நிச்சயம் அது விஷமே

சாலை விதிகளில்
கடக்கக் கூடாத
மஞ்சள் கோட்டைப் போன்றே

வாழ்க்கைப் பாதையிலும்
கடக்கக் கூடாத
லெட்சுமணக் கோடுண்டு

அறிந்து தெளிவு பெறுவோம்
தொடர்ந்து சிகரம் தொடுகின்ற
சூட்சுமம் அறிந்து உயர்வோம்

12 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
100வீதம் உண்மை ஐயா நல்ல கருத்து மிக்க வரிகள் பகிர்வுக்கு நன்றி த.ம 2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ப.கந்தசாமி said...

சிந்தனைத் தெளிவே வாழ்வு ஆகும்.

Thulasidharan V Thillaiakathu said...

அறிந்து தெளிவு பெறுவோம்
தொடர்ந்து சிகரம் தொடுகின்ற
சூட்சுமம் அறிந்து உயர்வோம்//

அருமை! உண்மையே! சூட்சுமம் அறிந்து உயர்வோம்//

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாழ்க்கைப் பாதையிலும் கடக்கக் கூடாத லெட்சுமணக் கோடுண்டு. அறிந்து தெளிவு பெறுவோம்//

ஆஹா, அருமை.

தொடர்ந்து சிகரம் தொடுகின்ற சூட்சுமம் அறிந்து உயர்வோம்.//

OK Sir .... நன்றி.

G.M Balasubramaniam said...

சிகரம் தொட்டு ஆவதென்ன. ?எல்லாம் அளவோடு இருந்தால் நலமே.

ADHI VENKAT said...

//வாழ்க்கைப் பாதையிலும்
கடக்கக் கூடாத
லெட்சுமணக் கோடுண்டு

அறிந்து தெளிவு பெறுவோம்
தொடர்ந்து சிகரம் தொடுகின்ற
சூட்சுமம் அறிந்து உயர்வோம்//

சரியான அறிவுரை. த.ம+1

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எதற்கும் ஒரு எல்லை வைத்துக் கொள்வது நல்லது. கோபமே இருந்தாலும் சரி, பொறுமை என்றாலும் சரி

KILLERGEE Devakottai said...

உரிமையும் கொஞ்சம்
எல்லை மீறினால்
அது அடாவடித் தனமே
அருமை அருமை
தமிழ் மணம் 5

திண்டுக்கல் தனபாலன் said...

வேறென்ன...? அனைத்திற்கும் ஆசை தான் காரணம்...!

வெங்கட் நாகராஜ் said...

//அறிந்து தெளிவு பெறுவோம்
தொடர்ந்து சிகரம் தொடுகின்ற
சூட்சுமம் அறிந்து உயர்வோம்//

சிறப்பான சிந்தனை. நன்றி ஐயா.

த.ம. +1

ShankarG said...

'லெட்சுமணக் கோடு' சீரான, பிரச்சினை அற்ற வாழ்க்கைக்கான மிக முக்கியமான நெறிமுறையை அழுத்தமாய் பதிவு செய்கிறது. நன்றிகள் பல.

ezhil said...

அருமைங்க எல்லை உணர்ந்து நடக்கச் சொல்லியிருக்கீங்க

Post a Comment