Friday, February 6, 2015

தொலைக்காட்சிக் கனவான்களே ...

குடிக்கிற காட்சி வருகையில்
குடி குடி கெடுக்கும் என
கீழே எழுத்துப் போடுவது மாதிரி

சிகரெட் குடிக்கையில்
புகைப் பிடிக்கும் பழக்கம்
புற்று நோயை உண்டாக்கும் என
எழுத்துப் போடுவது மாதிரி

நமது தொலைக்காட்சிச் தொடர்களில்

வில்லிகள் அடுத்த குடும்பத்தைக் கெடுக்க
சதி செய்கிற போது
இது குணக்கேடு தீங்கானது என்றோ

வில்லன்கள்அடுத்தவன் மனைவியை
அடைய முயற்சிக்கையில்
இது மகாப் பாவம் என்றோ

போட்டுத் தொலைத்தால் என்ன ?

வில்லன்களைகதா நாயகனை விட
புத்திசாலிகளாகச் காட்டுவதும்

வில்லிகளைகதா நாயகியை விட
அழகாய் காட்டுவதும்

தொடர் முடிகிற கடைசி நாளில் மட்டும்
நல்லவன் சுகப்படுவதும்

கடைசி காட்சிவரை
தீயவர்கள் சுகமாகத் திரிவதும்

கொஞ்சம் சமநிலை
மனதுடையோரை
குழப்பிவிட்டுத்தான் போகிறது

எனவே

அய்யா
தொலைக்காட்சிக் கனவான்களே
ரேட்டிங் பார்ப்பதிலேயே
முழுக் கவனமாய் இல்லாமல் கொஞ்சம்
நாடு குறித்தும் கவனம் கொள்ளுங்களேன்
பிளீஸ்..................

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ம்ஹீம்... மாறுவது சிரமம் தான்...

KILLERGEE Devakottai said...

கவிஞரே இந்த ஏமாற்று வேலைகளை தொடங்கி ஆண்டுகள் பல மாமாங்கம் கடந்து விட்டது இதில் திருந்த வேண்டியது மக்களே....

தமிழ் மணம் 3

துரை செல்வராஜூ said...

நாடு நல்லபடியாகி விட்டால் -
அவர்கள் கல்லா கட்ட முடியாதே!..

கரந்தை ஜெயக்குமார் said...

தொலைக் காட்சிகள்
நாடு குறித்துக் கலவலைப்படவேண்டுமா?
நடக்கிற காரியமா
தம ’1

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//வில்லிகள் அடுத்த குடும்பத்தைக் கெடுக்க
சதி செய்கிற போது
இது குணக்கேடு தீங்கானது என்றோ
வில்லன்கள்அடுத்தவன் மனைவியை
அடைய முயற்சிக்கையில்
இது மகாப் பாவம் என்றோ
போட்டுத் தொலைத்தால் என்ன ?//
இதுவரை யாருக்கும் தோன்றாத கேள்வி? சிறப்பான பதிவு

mohan baroda said...

Good Post. This is the reason why I stopped watching the serials in Tamil as also in Hindi. We cannot expect them to change because their focus is in TRP. So let us change.

G.M Balasubramaniam said...

வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
தற்கால யுகத்துக்கு மிகவும் எடுத்துக்காட்டான கவிதை.. பகிர்வுக்கு நன்றி ஐயா. த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

இதே போல தமிங்கிலம் பேசும் போது கீழே தமிழ் அழியப் போகிறது என்று கிழே எழுதினால் நன்று. அன்புடன்
ஆரூரன்
நெதர்லாந்து

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிந்தனை.

அவர்களுக்கு trp rating மேல் இருக்கும் கவனம் மற்ற எதிலும் இருப்பதில்லை.... :(

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவனத்தைத் திருப்ப நினைக்கும் பயனுள்ள வேண்டுகோள்தான் :) ..... ஆனால் இதை யார் கேட்கப்போகிறார்கள். :(

Post a Comment