Tuesday, February 17, 2015

வெறுங்கை முழம்

வித்தியாசமாக
சுவாரஸ்யமாக
பயனுள்ளதாக
எதைச் சொல்லலாமென
எப்படித்தான்  முயன்றபோதும்
எத்தனை நாள்  முயன்றபோதும்
ஏதும் பிடிபடாதே போகிறது

ஆயினும்
கவர்ந்ததை
ரசித்ததை
உணர்ந்ததை
சொல்லத் துவங்குகையிலேயே
வித்தியாசமும்
சுவாரஸ்யமும்
பயனும்
இயல்பாகவே
தன்னை இணைத்துக் கொண்டு
படைப்புக்குப்
பெருமை சேர்த்துப் போகின்றன

எத்தகைய
ஜாம்பவனாகினும்
வில்லாதி வில்லனாகினும்
இல்லாததிலிருந்து
ஏதும் படைக்க   இயலாதென்பதும்   ...

விஞ்ஞானத்திற்கான
அடிப்படை இலக்கணம் மட்டும் அல்ல அது
படைப்பிலக்கியத்தற்கான
அடிப்படை விஞ்ஞானம் என்பதும்
மறுக்க இயலாதுதானே  ?

16 comments:

KILLERGEE Devakottai said...

உண்மையான வரிகள் ஐயா.
தமிழ் மணம் 2

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

விஞ்ஞானத்திற்கான
அடிப்படை இலக்கணம் மட்டும் அல்ல அது
படைப்பிலக்கியத்தற்கான
அடிப்படை விஞ்ஞானம் என்பதும்
மறுக்க இயலாதுதானே ?
எனது பக்கம் கவிதையாக வாருங்கள்

சொல்லிச்சென்ற விதமும் முடித்த விதமும் நன்று ஐயா..
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எரியும் தீப்பிளம்பு:

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

இல்லாமல் இருப்பதிலிருந்து இருப்பதை கொண்டு வருவதே வாழ்க்கை...

ezhil said...

இருப்பதன் மாற்றுதானே இல்லாதவைகள்

ezhil said...

இருப்பதன் மாற்றுதானே இல்லாதவைகள்

Yarlpavanan said...

படைப்பாளி ஒருவருக்கான
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இல்லாததிலிருந்து ஏதும் படைக்க இயலாதென்பதும் ...//

இல்லாததையும் பொல்லாததையும் சொல்லாமல் இருப்பதையும், இயற்கையையும், இயல்பாகச் சொல்லியுள்ளது அழகு ! பாராட்டுக்கள்.

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

வலிப்போக்கன் said...

எனக்கும் ..எதைச் சொல்லலாமென
எப்படித்தான் முயன்றபோதும்
எத்தனை நாள் முயன்றபோதும்
ஏதும் பிடிபடாமல் போகிறது அய்யா

kingraj said...

பிடிபட்டால் முயற்சி நின்றுவிடுமென..... பிடிபடாமல் பாடம் சொல்கிறதோ....
தம 6

RAMA RAVI (RAMVI) said...

எத்தகைய
ஜாம்பவனாகினும்
வில்லாதி வில்லனாகினும்
இல்லாததிலிருந்து
ஏதும் படைக்க இயலாதென்பதும் ...//

சிறப்பு. மிகவும் ரசித்தேன்.

G.M Balasubramaniam said...

இல்லாததிலிருந்து ஏதும் படைக்க இயலாதென்பது (matter) பொருளுக்குப் பொருந்தலாம். விஷயத்துக்குமா.?

UmayalGayathri said...


கவர்ந்ததை
ரசித்ததை
உணர்ந்ததை
சொல்லத் துவங்குகையிலேயே
வித்தியாசமும்
சுவாரஸ்யமும்
பயனும்
இயல்பாகவே
தன்னை இணைத்துக் கொண்டு
படைப்புக்குப்
பெருமை சேர்த்துப் போகின்றன


உண்மை ஐயா தம +1

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

இருந்த நடந்த உணர்ந்த அறிந்த ஒன்றிலிருந்து
வருவதுதானே விஷயமும் இல்லையோ ?

வெங்கட் நாகராஜ் said...

கருத்துச் செறிந்த கவிதை. ரசித்தேன் ஐயா.

த.ம. +1

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல கருத்துமிக்க வரிகள். மிகவும் ரசித்தோம்! சார்!

Post a Comment