ஒரு அற்புதமான கவிதை என்
மெயிலுக்கு வந்தது
அதைப் பகிர்வதில் பெரும்
மகிழ்ச்சி கொள்கிறேன்
சிலேடைச் சித்தருக்கு என்
மனமார்ந்த நன்றி
சர்வ தேச மகளிர் தினம்
மெயிலுக்கு வந்தது
அதைப் பகிர்வதில் பெரும்
மகிழ்ச்சி கொள்கிறேன்
சிலேடைச் சித்தருக்கு என்
மனமார்ந்த நன்றி
சர்வ தேச மகளிர் தினம்
தாயாய் , தாரமாய் ,
தமக்கையாய் , தாதியாய்
மகளாய் , மன்னியாய்
மாமியாராய் , மருமகளாய்
தோழியாய் , துணைவியாய்
பாசமிகு பாட்டியாய்
தசாவதாரம் எடுப்பது மகளிரன்றோ
பசி தீர்க்கும் அன்னமாய்
நோய் தீர்க்கும் மருந்தாய்
பொறுமையில் பூமியாய்
உறவிணைக்கும் பாலமாய்
வழிகாட்டும் குருவாய்
வரமளிக்கும் தெய்வமாய்
அஷ்டாவதானம் செய்வதும் மகளிரன்றோ
கலங்கிடும் மனதிற்கு
கலங்கரை விளக்கமாய்
விளங்கி கரை சேர்ப்பவர் மகளிரன்றோ
குத்து விளக்கேற்றி
குடும்பமே கோயிலாய்
விளங்கிடச் செய்வது மகளிரன்றோ
செவிலியர் போலவே
சேவைகள் செய்வதில்
சிறந்து விளங்குவோர் மகளிரன்றோ
பெண்கல்வி எதிர்க்கும் துன்மதியாளரை
பெண்களை போகப்பொருளாய் நினைப்போரை
பெண்களை அடிமையென பேசித் திரிவோரை
பெண்களால் முடியாதென பிதற்றித் திரிவோரை
பெண்களி டம் வரதட்சினை கேட்போரை
பெண்களை எள்ளி நகையாடிடும் பேடிகளை
நன்முறை அல்லது வன்முறை கொண்டு
வரன்முறைப் படுத்திட சூளுரைப்போம் .
உரி மைகள் கொடுப்போம்
மரியாதை கொடுப்போம்
உயர்ந்த இடமொன்று
உள்ளத்தில் கொடுப்போம்
உலக மகளிர்தின உறுதிமொழி எடுப்போம்
வாழ்க மகளிர் ! வாளர்க மகளிர் புகழ் !!
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
8.03.2015
13 comments:
கவிதை அருமை திரு. சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் அவர்களுக்கும், வெளியிட்ட கவிஞருக்கும் நன்றி.
தமிழ் மணம் 1
சிந்திக்க வேண்டிய நாளில்
சிந்திக்க வைக்கும் பதிவு
நல்லதொரு நன்றி நவிலல். இனிய பகிர்வு.
அருமை அருமை...
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
சிலேடை சித்தருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி. வாழ்க.
அருமை அருமை....
கவிஞருக்கும் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி.
இன்றைய நன்நாளுக்கு மிகவும் பொருத்தமான பாடல். இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றிகள்.
கவிஞரின் பகிர்வுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
த.ம.6
அருமை. பகிர்வுக்கு நன்றி
மிக அற்புதமான கவிதை. பகிர்வுக்கு நன்றி சார்..
அழகிய அற்புதமான கருத்துக்களை உள்ளடக்கிய கவிதை! பகிர்ந்த தங்களுக்கும், கவிஞருக்கும், தங்களுக்கு மெயிலில் கவிதை அனுப்பிய நண்பருக்கும் நன்றி!
அர்த்தமுள்ள வரிகள் தங்களுக்கு பகிர்ந்த சிலேடை சித்தருக்கும் தங்களுக்கும் நன்றிங்க ஐயா.
ஆஹா! என்ன ஒரு அருமையான க்விதை...சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் .அவர்களுக்கும் இதை பகிர்ந்த தங்களுக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள்!
Post a Comment