Sunday, May 24, 2015

ஸ்பான்சர்

வெகு நாட்களுக்குப் பின் நான்முன்பு குடியிருந்த
ஏரியாப் பக்கம் போக வேண்டி இருந்தது

இப்போது புதிதாக வீடு கட்டி
குடியிருக்கும் பகுதியும் முன்னர்
இருந்த பகுதியும் அதிகத் தூரம்
இல்லையென்றாலும் நேரமின்மை மற்றும்
வேலைப் பளுவின் காரணமாக அதிகம்
அந்தப் பக்கம் செல்ல முடியவில்லை

கடந்த வாரம் அந்தப் பகுதியில் கொஞ்சம்
வேலை இருந்ததாலும் நேரமிருந்ததாலும்
அப்படியே அங்கு பழக்கமானவர்களையும்
சந்தித்து வரலாம் எனப் போனேன்

கொஞ்சம் நெருக்கமானவர்களிடம்
பேசி கொண்டிருந்தபோது ஒரு நண்பர்
அங்கு குடும்ப நண்பராக இருந்த ஒரு
டாக்டரின் பெயரை குறிப்பிட்டு அவருடைய
மகன் பத்தாண்டுகளுக்குப் பின்
ஸ்டேட்ஸில் இருந்து வந்திருப்பதாகவும்
அவன் அவசியம் என்னப் பார்க்க
வர வேண்டும்எனச் சொல்லிக்
கொண்டிருப்பதாகவும் சொன்னார்

அவர் அப்படிச் சொன்னது எனக்கு
ஆச்சரியமளிப்பதாக இருந்தது

காரணம் அப்படி அவன் தேடி வந்துப்
பார்க்கும்படியாக ஒரு நெருக்கமான
பழக்கமோஅல்லது இந்தப் பத்து ஆண்டுகளில்
ஒரு சிறு தொடர்போ அவனுடன் இருந்ததில்லை

அப்படி இருக்க என்னை அவசியம்
பார்க்க விரும்புவதாகவும் வேறு சிலரிடம்
என் வீடு போகும் வழியும் விலாசமும்
கேட்டுக் கொண்டிருந்ததாகவும் சொல்ல
என்னால் ஆச்சரியப் படாமல் இருக்க
முடியவில்லை

சரி அப்படி யென்றால் அங்கிருந்து வந்திருப்பவனை
அலைய விடவேண்டாம்.நாமே அவன் வீடு சென்று
பார்த்துவிட்டு வரலாம் என்ப் போனேன்

நான் போன சமயம் அவன் வீட்டில் இல்லை

அவனுடைய அப்பா டாக்டர் மட்டும் இருந்தார்

சற்று வயதாகி விட்ட படியால் இப்போது
பிராக்டீஸ் செய்வதில்லை என பல்வேறு
விஷயங்களைப்பேசிக் கொண்டிருந்தபோதே
அவனுடைய பையன் இப்போது இருக்கும்
கம்பெனி குறித்தும் அவன் நிலை குறித்தும்
சொல்லச் சொல்ல எனக்குப் பிரமிப்பாக இருந்தது

அவரும் அவனுடைய பையன் வந்ததிலிருந்தே
என்னைப் பார்க்க விரும்புவதாகவும்
அமெரிக்காவில் இருந்து சில பரிசுப் பொருட்கள்
எனக்காக வாங்கி வந்திருப்பதாகவும் சொல்ல
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை

ஒருவேளை வேறு யாரையோ நானாக நினைத்து
இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறானா என்கிற
குழப்பம் எனக்குள் விஸ்வரூபம் எடுக்கத்
துவங்கிவிட்டது

சரி இருந்தது இருந்து விட்டோம்.
ஒருவேளை அவன்என்னைத் தேடிக் கொண்டு
வந்து விட்டு அதுநான் இல்லை என்பது போன்ற
நிலை வந்தால்இன்னும் தர்மசங்கடமாகிப் போகும்
அதற்குஇங்கிருந்தே பார்த்துவிட்டுப் போய் விடுவது
உத்தமம் எனக் கருதி நானும் அவர்களுடன்
தற்கால அரசியல் நிலவரம், ஏரியா வளர்ச்சி நிலவரம்
எனப் பொதுவான விஷயம் குறித்துப்
பேசிக் கொண்டிருக்க வீட்டு வாசலில் கார் வந்து
நிற்கும் சபதம் கேட்டது

டாக்டரும் "இதோ பையனே வந்து விட்டான் "
என மெல்ல இருக்கையை விட்டு எழ நானும்
அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கிற
குழப்பத்துடன் எழுந்து வாசல் பக்கம் திரும்பினேன்

(தொடரும் )

14 comments:

KILLERGEE Devakottai said...

ஆஹா தொடரும்.... தொடர்கிறேன்.....

Unknown said...

உங்களின் கவிதை உங்களை பார்க்க வேண்டுமென்ற ஆவலை அவருக்கு ஏற்படித்திருக்கும் !

தி.தமிழ் இளங்கோ said...

ஒரு சஸ்பென்ஸ் உடைபடும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.
த.ம.2


வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, மிக அருமையானதோர் அனுபவத்தினை அழகாகச் சொல்லிவந்து இறுதியில் ஓர் சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தியுள்ளீர்கள்.

தொடரட்டும்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

ப.கந்தசாமி said...

சஸ்பென்ஸ் பிரமாதம். பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சீக்கிரம் தொடருங்கள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது... இறுதியில் சொல்லி முடிக்காமல் தொடரும் என்று சொல்லி விட்டீர்கள் தொடருங்கள் ... அவலுடன் காத்திருக்கோம். த.ம 4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

என்ன நடக்கப்போகிறது என்று ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது தொடரும் என்று கூறிவிட்டீர்கள். சரி, தொடர்வோம்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம்
என்னையும் ஆட்கொண்டுவிட்டது ஐயா
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா...

விமல் ராஜ் said...

இப்படி தான் கடைசியில் இருக்கும் என நினைச்சேன்...

"அப்பா! யார் இவர்? உங்க ஃபிரண்டா ?? " என்று கேட்டான் அவருடைய மகன்...

Unknown said...

மீண்டும் எப்போது! பதிவு! நலமா! வயதாகி விட்டதல்லவா! அதனால் பலராலும் மறந்தவனாகி விட்டேன்!

G.M Balasubramaniam said...

தொடர்கிறேன்

Iniya said...

m..m ஆவலோடு காத்திருக்கிறேன்.

Yarlpavanan said...

சுவையான பதிவு
தொடருங்கள்

Post a Comment