Friday, May 29, 2015

ஸ்பான்சார் ( 3 )

அதிக நேரம் காக்க வைக்காமல்
சிறிது நேரத்திலேயே
ஹாலுக்கு வந்த டாக்டரின் மகன் சட்டென
சோபாவில் அமர்ந்து கொண்டு

" சொல்லுங்க மாமா எப்படி இருக்கேள்
எனக்கு உண்மையில் நேரடியாக நீங்களே
எங்கள் வீட்டிற்கு வந்தது பாக்கியம்தான்
இன்று நீங்கள் வரவில்லையெனில் நாளை
நிச்சயம உங்கள் வீட்டிற்கு நான் வந்திருப்பேன்
மாமி மற்றும் எல்லோரும் சௌக்கியமா "
எனச் சகஜமாகப் பேசத் துவங்கினான்

எனக்குத் தான் எப்படிப் பேசத் துவங்குவது
எனத் தெரியவில்லை.

முன்னெல்லாம் அவனை வாடா போடா
என்கிற பாணியில் தான் பேசிப் பழக்கம்.
இப்போது அப்படிப் பேசும்படியான
சூழலில் அவன் இல்லையெனப் பட்டதால்...

" அப்பா வேலை விஷயம் வந்த விஷயம்
எல்லாம் சொன்னார்.ரொம்ப சந்தோஷம்
நீங்கள் வந்திருப்பதாகவும் பார்க்க விரும்புவதாகவும்
சொன்னார்கள்.நான் இப்போது ரிடையர் ஆகிப்
ஃப்ரியாகத்தானே இருக்கிறேன்.அதுதான்
இப்படி லாத்தலாக வந்தேன் " எனச் சொல்லி
முடிப்பதற்குள் இடைமறித்த அவன்..

"மாமா தேவையில்லாத மரியாதையெல்லாம்
வேண்டாம்  அது எனக்கும் அன்ஈஸியாக. இருக்கும்
உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்
எனவே எப்போதும் போல என்னடா ஹரி
என்கிற மாதிரியே பேசுங்கள்."
எனச் சொல்லிச் சிரித்தான்

நான் உண்மையில் இதுவரை டாக்டரின் பையன்
எனச் சொல்லி வந்த காரணமே அவன் பெயர்
மறந்து போனதால்தான்,அவன் பிடி கொடுத்தது
கொஞ்சம் வசதியாகப் போயிற்று

"ஆமாண்டா ஹரி. எனக்கும் ஒருமாதிரியாகத்தான்
இருந்தது.ஆனாலும் பார்த்து ரொம்ப நாள் இடைவெளி
ஆகிப் போனதா நீயும் வளர்ந்து பெரிய ஆளாக
பெரிய அதிகாரியாகத் தோண ஆரம்பிச்சயா
அதுதான் சின்னத் தயக்கம்." எனச் சொல்லிக்
கொண்டிருக்க ஹரியின் தாயார் ஒரு தட்டில்
சாக்லேட் மற்றும் பழங்களை ஒரு தட்டில்
வைத்து "சாப்பிட்டுக் கொண்டே பேசுங்கோ "
எனச் சொல்லிப் போனார்

இனியும் சுற்றி வளைக்க விரும்பாது "
என்னைப் பார்க்கணும்னு எல்லோரிடமும்
சொல்லிக் கொண்டிருந்தததாகக் கேள்விப்பட்டேன்
அது எதற்காக இருக்கும் என எண்ணி எண்ணி
நானும் ரொம்பக் குழம்பிப் போனேன்
அது என்ன எனத் தெரிந்தால் என் குழப்பம் தீரும்"
என்றேன்

அவன் சொல்லத் துவங்கினான்

உண்மையில் ஒன்றுமில்லை என நாம் நினைத்துக்
கொண்டிருக்கிற பல சிறு சிறு விஷயங்களில் கூட
இத்தனை இருக்குமா என்கிற மலைப்பு
என்னுள் அதிகரித்துக் கொண்டே போனது

(தொடரும் )

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நான் உண்மையில் இதுவரை டாக்டரின் பையன்
எனச் சொல்லி வந்த காரணமே அவன் பெயர்
மறந்து போனதால்தான்,அவன் பிடி கொடுத்தது
கொஞ்சம் வசதியாகப் போயிற்று//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

இன்னும் இந்தப்பகுதியிலும் அந்த சஸ்பென்ஸ் நீடிக்கிறதே ! :)

G.M Balasubramaniam said...

தொடர்கிறேன்

பழனி. கந்தசாமி said...

ரசித்தேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

எங்களுள்ளும் மலைப்பு அதிகரித்ததுக் கொண்டே போகிறது
ரசிக்கின்றோம் ஐயா
தம 2

தி.தமிழ் இளங்கோ said...

மலைப்பு - உங்களுக்கு மட்டுமல்ல, இந்த பதிவைப் படிக்கும் வாசகர்களாகிய எங்களுக்கும் தான். சஸ்பென்ஸ் தொடருகிறது. நானும் தொடர்கிறேன்.
த.ம.3

Yarlpavanan Kasirajalingam said...

இலக்கியச் சுவை சொட்டும்
இனிய பதிவு இது!
தொடருங்கள்

Chellappa Yagyaswamy said...

பையனின் பெயரைக் கொண்டுவருவதற்கே மூன்று அத்தியாயங்கள் தேவைப்பட்டால், இது, சிந்துபாத் கதை மாதிரி போகுமோ என்ற ஐயம் எழுகிறது. எனவே தினமும் இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதினால் தேவலை என்று தோன்றுகிறதே!

Ramani S said...

Chellappa Yagyaswamy //

அடுத்த பகுதியில் நிச்சயம் முடியும்
அனுபவித்தபடி அனுபவிக்கும்படிச் சொல்ல
நினைப்பதில் சில சமயம் இப்படி நேர்ந்துவிடுகிறது
கடைசிப் பகுதியைப் படிக்க ஒருவேளை
என் கருத்துக்கு நீங்கள் உடன்படலாம்
மனம் திறந்த கருத்துக்கு மிக்க நன்றி

Post a Comment