Saturday, May 9, 2015

தலைமை பண்புப் பயிற்சி

கரை புரண்டோடும் ஆற்றில் நீந்துபவன்
முன்னேறிச் செல்லவில்லையாயினும்
இருக்கிற இடத்தில் இருக்கவாவது தொடர்ந்து
நீந்திக்கொண்டிருக்கவேண்டும் என்பதைப் போல

இன்றைய போட்டி நிறைந்த காலச் சூழலில்
உச்சம்தொட இயலவில்லையாயினும்
தொடர்ந்து நம் நிலையிலேயே தொடரக் கூட
நாம் தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் 
அயற்சியின்றி மேற்கொள்ளவேண்டியுள்ளது

அந்த வகையில் உலகளாவிய 
சேவை இயக்கமான அரிமா இயக்கத்தில்
2003 முதல் இணைந்திருந்தாலும் தொடர்ந்து
உறுப்பினர், பொருளாளர், செயளாளர் ,தலைவர்
மாவட்டத் தலைவர் என பல பொறுப்புக்களை
வகித்திருந்தாலும் இன்னும் தலைமைப்பண்பினை
கூர்தீட்டிக் கொள்ளத் தொடர்ந்து பயிற்சி
மேற்கொள்ளத்தான்வேண்டியுள்ளது

அதற்காக வருகிற 13 ஆம் தேதி முதல்
20 ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற
இருக்கிற தலைமைப் பண்புக்கான 
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள நானும் 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்பதனை 
நமது பதிவுல நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

தங்கள் அன்பான வாழ்த்துக்களை வேண்டி  .... 

                                                                                                                                                                                                                                                                                                                                        

10 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

மிக்க மகிழ்ச்சியான தகவல்... தங்களின் பயணம் இனிதாக அமைய எனது வாழ்த்துக்கள் வாருங்கள்....வாருங்கள் நிச்சயம் சந்திப்போம் ஐயா.

நன்றி
அன்புடன்
ரூபன்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

தங்களை சந்திப்பது மகிழ்ச்சியான தருனம்...
த.ம2
நன்றி
அன்புடன்
ரூபன்

Yarlpavanan said...

மலேசியாவில் நடைபெற இருக்கிற தலைமைப் பண்புக்கான
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளத் தாங்களும்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்வடைகின்றோம்.
தங்களின் பயணம் வெற்றிகரமாக அமைய எமது வாழ்த்துகள்!

ப.கந்தசாமி said...

பாராட்டுகள். கற்றுக்கொண்டதில் கொஞ்சம் எங்களுக்கும் பகிருங்கள்.

Yaathoramani.blogspot.com said...


ரூபன் //

16.05 2015 அன்று லெபுவானில்
மாலை மற்றும்

19 .05 2015 அன்று ஒரு நாள்
கோலாலபூரில் தனியாக ஷாப்பிங்க்
மற்றும் தனிப்பட்டவேலைக்கு என்று

ஒதுக்கி உள்ளார்கள்.
அன்று ஒரு நாள் உடன் இருக்க
முடியுமானால் எங்களுக்கு
வசதியாக இருக்கும்

உங்கள் வசதி பொறுத்து முடிவு செய்யவும்
சிரமப்படவேண்டாம்

வாழ்த்துக்களுடன்...

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள் ஐயா...

G.M Balasubramaniam said...

வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் ஐயா!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வாழ்த்துக்கள் ரமணி சார். பயிற்சியில் பங்கு பெறுவது என்ன நீங்கள் பயிற்சி அளிபதற்கே தகுதி படைத்தவராயிற்றே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்கள் பயணமும் கருத்தரங்க அமர்வுகளும் சிறப்பாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Post a Comment