Saturday, June 20, 2015

விதியும் விதிகளும்

விதி எனில்
விதிக்கப்பட்டது
எவராலும் மாற்ற இயலாதது
என நம்பப்படுவது

விதிகள் எனில்
நம்மால் உருவாக்கப்பட்டது
பயனில்லையாயின்  மாறுதலுக்குட்பட்டது
என ஏற்றுக் கொள்ளப்பட்டது

அருளப்பட்டதான
இறக்கப்பட்டதான நம்பிக்கையில்
மாற்றவே இயலாததான
மதத்தின் பாதுகாப்பில் விதி

அனுபவத்தின் அடிப்படையில்
வகுக்கப்பட்டதே ஆயினும்
முன்னேற்றத்திற்குமுட்டுக்கட்டை எனில்
மாறியாக வேண்டியது
விதிகளின் விதி

மாற வேண்டியவர்கள்

விதியை சொல்லித் தன்
பிழைப்பை ஓட்டுபவர்கள் மட்டுமல்ல

விதிகளைச் சொல்லி
தன்னை நிலை நிறுத்த விரும்புவர்களும் கூட..

அநாகரீகத்தை
நாகரீகமாகச் சொல்லுதல் கூட
சகித்துக் கொள்ளக் கூடியதே

நாகரீகத்தை
அநாகரீகமாகப் போதித்தல்
நிச்சயம் அநாகரீகமானதே

22 comments:

வெட்டிப்பேச்சு said...

"அநாகரீகத்தை
நாகரீகமாகச் சொல்லுதல் கூட
ஏற்புடையது

நாகரீகத்தை
அநாகரீகமாகப் போதித்தல்
நிச்சயம் அநாகரீகமானதே"

முற்றிலும் உண்மையானது.

God Bless You

balaamagi said...

விதிகளைச் சொல்லி
தன்னை நிலை நிறுத்த விரும்புவர்களும் கூட..
இதை அனைவரும் உணர்ந்தால் நலமாக இருக்கும். தங்கள் வரிகள் அதனை உணர்த்துகின்றன, நன்றி.

KILLERGEE Devakottai said...

விதி செல்வது விதியின் வழியேதானோ....
தமிழ் மணம் 2

Anonymous said...

''..மாற வேண்டியவர்கள்

விதியை சொல்லித் தன்
பிழைப்பை ஓட்டுபவர்கள் மட்டுமல்ல

விதிகளைச் சொல்லி
தன்னை நிலை நிறுத்த விரும்புவர்களும் கூட..
..'' டிடி யும் விதி பற்றித் தான் எழுதியுள்ளார்

ப.கந்தசாமி said...

இந்தக் கவிதையில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா? வரவர என்னையே என்னால் நம்புவதற்கு முடியவில்லை.

Yaathoramani.blogspot.com said...

பழனி. கந்தசாமி //

உள்குத்து ஏதும் இல்லை
அடிப்படை நியாயம் உள்ளது
தங்கள் தார்மிகக் கோபத்தில்
விளைந்த பதிவுக்கு ஒரு
துணைப்பதிவாக இருக்கட்டுமே என இதை
எழுதினேன்

ஸ்ரீராம். said...

எதை நினைத்தேனோ, அதுதான் என்பது கந்தசாமி ஸார் பின்னூட்டமும், உங்கள் பதிலும் உறுதி செய்கின்றன.

Yaathoramani.blogspot.com said...

வெட்டிப்பேச்சு //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

mageswari balachandran said...
விதிகளைச் சொல்லி
தன்னை நிலை நிறுத்த விரும்புவர்களும் கூட..
இதை அனைவரும் உணர்ந்தால் நலமாக இருக்கும். தங்கள் வரிகள் அதனை உணர்த்துகின்றன, நன்றி//

தங்கள் உடன் வரவுக்கும் அருமையான
கருத்துரையுடன் கூடிய பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai //

தங்கள் உடன் வரவுக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவும் விதியே...!

கரந்தை ஜெயக்குமார் said...

///அனுபவத்தின் அடிப்படையில்
வகுக்கப்பட்டதே ஆயினும்
முன்னேற்றத்திற்குமுட்டுக்கட்டை எனில்
மாறியாக வேண்டியது
விதிகளின் விதி///

அருமை அருமை
உண்மை ஐயா
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாகரீகத்தை
அநாகரீகமாகப் போதித்தல்
நிச்சயம் அநாகரீகமானதே என்பதைப் போல நாகரீகத்தை அநாகரிகம் போதிப்பதும் அநாகரிகமானதே.

S.P.SENTHIL KUMAR said...

//அருளப்பட்டதான
இறக்கப்பட்டதான நம்பிக்கையில்
மாற்றவே இயலாததான
மதத்தின் பாதுகாப்பில் விதி

அனுபவத்தின் அடிப்படையில்
வகுக்கப்பட்டதே ஆயினும்
முன்னேற்றத்திற்குமுட்டுக்கட்டை எனில்
மாறியாக வேண்டியது
விதிகளின் விதி//

உண்மையை உணர்த்தும் அருமையான வரிகள்.
த ம 6

Unknown said...

அருமையான விளக்கம்!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். said..//.
எதை நினைத்தேனோ, அதுதான்//
அதே அதே
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said...//

இதுவும் விதியே...!//

இதுவே மதி
வரவுக்கும் மிக மிக புத்திசாலித்தனமான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்



Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...//

அருமை அருமை
உண்மை//

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்?!
அருமை

சென்னை பித்தன் said...

த ம+1

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் சிந்தனை பிரமிக்க வைக்கிறது.வாழ்க்கை தத்துவங்களை முரண்பாடுகளை அழகான கவிதை ஆக்கி விடுகிறீர்கள்.
வித்தியாசமான கவிதை நடை உங்களது பலம்

”தளிர் சுரேஷ்” said...

விதிகள் பற்றிய விளக்கம் அருமை! நன்றி!

Post a Comment