Monday, June 22, 2015

தொலைக்காட்சியில் தோன்ற சுருக்கு வழி

 "தொலைக்காட்சியில் நீயும்
 உன் குடும்பமும் தோன்றவேண்டுமா ?
என்றான் நண்பன்

ஆர்வத்தில் "அதற்கு யாரைப் பார்க்கணும்
என்ன செய்ய வேண்டும் " என்றேன் நான்

"அதற்கு ஏஜெண்டுகளைப் பார்க்கவோ
சென்னை செல்லவோ வேண்டாம் "
என்றான் சிரித்தபடி

"பின் எப்படிச் சாத்தியம் "
என்றேன் எரிச்சலுடன்

அவன் பொறுமையாய்ச் சொன்னான்

"தொடர்ந்து தமிழில் வருகிற அத்தனை
தொடர்களையும் விடாதுப் 
பார்த்தாலே போதும் "

" பார்த்தால் போதுமா ?
நாம் பார்ப்பது எப்படி
அவர்களுக்குத் தெரியும் ?"
என்றேன் அவசரக் குடுக்கையாய்

"அவசரப்படாதே அவர்கள் நம்மைத் தெரிந்து
கொள்ள வேண்டிய அவசியமே இல்லை
நாம் கவனமாய்த் தொடர்களை தொடர்ந்து
கவனித்து வந்தால் மட்டும் போதும்

எப்படி எல்லாம் துரோகம் செய்யலாம்
எப்படி எல்லாம் ஒரு குடும்பத்தைக் கெடுக்கலாம்
என்பன போன்ற அற்புதமான
வித்தைகளையெல்லாம்
மிகத் தெளிவாக ஒரு குழந்தைக்குச்
சொல்வதைப்போலச் சொல்லி நமக்குப்
புரிய வைப்பார்கள்

தொடர்களில் முதல்  எபிஸோடில் சிரித்த
நல்லவர்கள் கடைசி
எபிசோடில்தான் சிரிப்பதும்..

இரண்டாம் எபிஸோடில் இருந்து
கடைசிக்கு முந்திய எபிஸோடுவரை
சந்தோஷமாய் இருக்கும் தீயவர்கள் எல்லாம்

உனக்குள்  நிச்சயம் ஒரு ஒரு மாற்றத்தை
ஏற்படுத்திப் போவார்கள் " என்றான்

"அப்புறம் என்ன "என்றேன் அப்பாவியாய்

அவன் மிகத் தெளிவாக

"அப்புறம் என்ன ?
சொல்வதெல்லாம் உண்மை  நிகழ்ச்சிக்கு
நீயும் கதாநாயகன்  போல ஆகி விடுவாய்
அப்புறம் உன்னை தொலைக்காட்சிக்காரர்கள்
தேடி வந்துதானே ஆகணும்  ? "
என்றான் தீர்மானமாக

28 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நிச்சயமாக ஓர் மாற்றத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் .... நல்லவர்களும் தீயவராக !

balaamagi said...

நெடுந்தொடர் குறித்த தங்கள் பகிர்வு அருமை, வாழ்த்துக்கள்.

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

தொலைக்காட்சித் தொடர்கள் முன்வைப்பது
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அழைப்பு
"பாருங்கள் தொலைக்காட்சி!"

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்படியும் ஓர் உத்தி உள்ளதா?

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அற்புதமான சிந்தனைகள்.. பகிர்வுக்கு நன்றி த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

அப்படி விடாமல் தொடர் பார்த்த யாரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்திருக்கிறார்களா?

வெட்டிப்பேச்சு said...

எதையோ இழுத்து எங்கயோ முடிச்சு போட்டுட்டார் பாருங்க...

நண்பர் உண்மையிலேயே சாமார்த்திய சாலிதான்.

அம்பாளடியாள் said...

நிகழ்வைப் பார்க்கும் போதே கண்ணைக் கட்டுகிறது சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது போல் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தால் போதும் இதுவும் நடக்கும் என்பதே உண்மை! அருமையான ஆக்கம் வாழ்த்துக்கள் ஐயா .

அம்பாளடியாள் said...

ஒரு வகையில் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் ஐயா இந்த நிகழ்வைப் பார்க்கும் போதே கண்ணைக் கட்டுகிறது சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது போல் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தால் போதும் இதுவும் நடக்கும் என்பதே உண்மை! அருமையான ஆக்கம் வாழ்த்துக்கள் ஐயா .

சென்னை பித்தன் said...

இதுதான் உண்மை.நல்லாச் சொன்னீங்க

Manimaran said...

ஹா..ஹா.. நல்ல ஐடியாவா இருக்கே... :-) TM8

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சரியாக சொன்னீர்கள் நெடுந்தொடர் எல்லாம் கொடுந் தொடர்தான்

”தளிர் சுரேஷ்” said...

அட! உறைய வைத்த உண்மை! வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” said...

அட! உறைய வைத்த உண்மை! வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
நிச்சயமாக ஓர் மாற்றத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் .... நல்லவர்களும் தீயவராக !//

உடன் முதல் வரவுக்கும்
மிகச் சரியானப் புரிதலுடன் கூடிய
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

mageswari balachandran said...
நெடுந்தொடர் குறித்த தங்கள் பகிர்வு அருமை, வாழ்த்துக்கள்.//


உடன் வரவுக்கும்
மிகச் சரியானப் புரிதலுடன் கூடிய
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Yarlpavanan Kasirajalingam said...
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Dr B Jambulingam said...
இப்படியும் ஓர் உத்தி உள்ளதா?//
முடிவில் அப்படித்தான் ஆகும் இல்லையா ?
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said..//.
சரி தான்..//
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
.

Yaathoramani.blogspot.com said...

ரூபன் said...
வணக்கம்
ஐயா
அற்புதமான சிந்தனைகள்.. பகிர்வுக்கு நன்றி //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...
அப்படி விடாமல் தொடர் பார்த்த யாரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்திருக்கிறார்களா?//

அப்படி ஆகிவிடக் கூடும்
என்கிற ஆதங்கத்தில் எழுதியதே
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வெட்டிப்பேச்சு said...
எதையோ இழுத்து எங்கயோ முடிச்சு போட்டுட்டார் பாருங்க...

நண்பர் உண்மையிலேயே சாமார்த்திய சாலிதான்//தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்



Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் said...
நிகழ்வைப் பார்க்கும் போதே கண்ணைக் கட்டுகிறது சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது போல் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தால் போதும் இதுவும் நடக்கும் என்பதே உண்மை! அருமையான ஆக்கம்//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் said...
இதுதான் உண்மை.நல்லாச் சொன்னீங்க//
தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்



Yaathoramani.blogspot.com said...

Manimaran said...
ஹா..ஹா.. நல்ல ஐடியாவா இருக்கே.//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
சரியாக சொன்னீர்கள் நெடுந்தொடர் எல்லாம் கொடுந் தொடர்தான்//


தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

‘தளிர்’ சுரேஷ் said...
அட! உறைய வைத்த உண்மை! வாழ்த்துக்கள்!//

தங்கள் வரவுக்கும் உற்சாகமூட்டிப்போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Post a Comment