Tuesday, June 30, 2015

வாழ்க அரசும் வளர்க நீதி மன்றங்களும்...

அரசையும் நீதிமன்றங்களையும் போல
மிக மிக வித்தியாசமாக
மக்களுக்காக சிந்திப்பதைப்போல
வேறு எவராலும் நிச்சயம்
சிந்திக்கவே முடியாது

குடலையும் உடலையும்
படிப்படியாய் உயிரையும் குடிக்கும்
மது விற்பனையை
தானே நடத்திக் கொண்டு
தலையை மட்டும் காப்பதில்
அரசு அதீத அக்கறை கொள்வதிலும்

நீதி மன்றங்கள்
தலையில் கவனம் கொண்டு
மது விற்பனையில்
அக்கறை கொள்ளதிருப்பதுவும்

குடிப்பதற்கு வகை வகையாய்
சரக்குகளை உற்பத்தி செய்ய
அனுமதி கொடுத்து விட்டு
குடிக் கூடங்களை நிறையத் திறந்து விட்டு
அரசு வருவாய்ப் பெருக்க முனைவதிலும்

குடி குடும்பத்தைக் கெடுக்கும்
வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு
என்கிற வாசகங்கள்
அவசியம் என்பதில் மட்டும்
நீதிமன்றங்கள் கவனமாய் இருப்பதுவும்

ஒட்டு மொத்த மனிதன்
குறித்த அக்கறைவிடுத்து
அவன் தலையை மட்டும் குறிவைக்கும்
அவைகளின் சமூக அக்கறை
அப்பப்பா
நினைத்தாலே புல்லரிக்கிறது

சட்டெனச் சாவதை தடுத்து
மெல்ல மெல்லச் சாக ஆவன செய்யும்
அதன் மக்கள் மீதான கரிசனம்
அம்மம்மா
நினைத்தாலே மெர்ஸலாகிறது

வாழ்க அரசும்
நீதி மன்றங்களும்

வளர்க அவைகளின் இதுபோன்ற
சமூகச் சிந்தனைகளும் அக்கறையும்...

18 comments:

ஸ்ரீராம். said...

எல்லாமே கே.கெ. அரசியல்!

வெட்டிப்பேச்சு said...

காந்தி பிறந்த நாடு இது. இங்குதான் குடி மனிதனின் பிறப்புரிமை என்று பேசும் ஆட்களும் இருக்கிறார்கள். என்ன செய்ய?

சரியாக கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.

God Bless You

வெங்கட் நாகராஜ் said...

அரசியல் - பதவி மோகமும், மக்களுக்கு இலவசங்கள் மீதான மோகம் குறையும் வரையும் இதெல்லாம் தொடரும் அவலம்!

த.ம. 3

G.M Balasubramaniam said...

இலவசங்கள் கொடுத்து மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் அரசு வருவாய்க்கு என்ன செய்யும் மக்களுக்கு ஊத்திக் கொடுப்பதுதானே நியாயம் இலவசங்கள் வேண்டாம் என சொல்லும் மக்கள் எங்கே. ? அதற்காகத் தலைக்கவசம் கூடாதென்று சொல்ல முடியுமா?.

திண்டுக்கல் தனபாலன் said...

அம்மம்மா "தலை"யெழுத்து... அம்மம்மா...

Yaathoramani.blogspot.com said...



G.M Balasubramaniam said..//.

அதற்காகத் தலைக்கவசம் கூடாதென்று சொல்ல முடியுமா?.

அதற்கு மட்டும் பிரச்சாரம்
கோர்ட் தலையிடாது
இதற்கு மட்டும் அதிரடி உத்தரவு
என்பதுதான் என்போன்றோரின் ஆதங்கம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதுதான் அரசியல்.

balaamagi said...

எல்லாவற்றிர்க்கும் தலம்மா,,,,,,,,,,,,,
நான் சொன்னது தலை
வாழ்த்துக்கள் சிந்திக்க தூண்டும் பதிவு
நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சட்டெனச் சாவதை தடுத்து, மெல்ல மெல்லச் சாக ஆவன செய்யும்//

தங்களின் ஆதங்கம் புரிகிறது. இதற்கு தீர்வு ஏதும் உண்டா என்றால், நம் கண்ணுக்கு எட்டிய அளவுக்கு ’இல்லை’ என்றே எண்ணத்தோன்றுகிறது. என்ன செய்ய ? :(

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சரியான சாட்டையடி

கவிஞர்.த.ரூபன் said...

வணககம்
ாஐயா
மக்களின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு... சரியாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்டன்-
-ரூபன்-

இராய செல்லப்பா said...

குடி, குடியைக் கெடுக்கும் என்று சுவறேங்கிலும் அரசே எழுதிவைத்துள்ளது. அதைப் பரிசோதித்துப் பார்க்கும் வண்ணம் எல்லா மக்களுக்கும் வாய்ப்புத் தரும் பொருட்டே டாஸ்மாக் கடைகள் வீதிகள்தோறும் நிரம்பி வழிவதாக நான் நினைக்கிறேன். இதற்காக அரசுக்கு நன்றி சொல்லவேண்டாமா? - இராய செல்லப்பா

Unknown said...

சட்டெனச் சாவதை தடுத்து
மெல்ல மெல்லச் சாக ஆவன செய்யும்
அதன் மக்கள் மீதான கரிசனம்
அம்மம்மா
நினைத்தாலே மெர்ஸலாகிறது

அருமை! தெளிவு கேள்வி பதில் வராது!

Seeni said...

செருப்பால அடிச்சிட்டீங்க ..
அய்யா..

தி.தமிழ் இளங்கோ said...

சரியான சாடல். மூச்சுக்கு மூச்சு அறிக்கை விடும், முழுநேர அரசியல்வாதிகள் கூட, இந்த ஹெல்மெட் விஷயத்தில், குறிப்பாக கொள்ளை விலைக்கு விற்பதைக் கூட கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

த.ம.9

”தளிர் சுரேஷ்” said...

அரசு சரக்கு விற்காவிட்டால் அதன் வருமானம் குறைந்துவிடுமே அந்த நோக்கில் சிந்திக்கிறது! அருமையான பதிவு! நன்றி!

ஸ்ரீ said...

மிகச் சரியாக கருத்து.ஒரு நெடுங்சாலையை பயணம் செய்வதற்கு லாயக்கற்றது என தெரிவித்து நீதிமன்றம் அதில் வாகனம் செல்ல தடை விதிக்கும் நிலையைவிடவா தலைகவசம் பிரச்னை முக்கியமானது?

Thulasidharan V Thillaiakathu said...

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிவிட்டு அரசே அதை ஊற்றியும் கொடுக்கின்றது....இதைவிடக் கேவலம் என்ன இருக்கும்...கேடு கெட்ட அரசியல் ஆட்சி...

Post a Comment