Sunday, July 12, 2015

அழகுக்கு அலகு

பூமிக்கு நீர்நதி அழகு
பூஜைக்கு பூக்களே  அழகு
சாமிக்கு இருண்மையே  அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு படைபலம்  அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்கு நளினமே  அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகை ரசித்தேன் ஐயா...

Pandiaraj Jebarathinam said...

மலருக்கு மணமே அழகு
மன்னருக்கு மக்கள்பலம் அழகு
--------என்று எனக்குத் தோன்றியது

அத்தனையழகையும் ரசித்தேன்,.....

yathavan64@gmail.com said...

இருபது அழகுகளை
இணையத்தில் தந்தீரே! அய்யா!
இருபத்தி ஒன்றாவது அழகு
உண்டு என்பேன்!
அது
உம் கவிதை!
அழகு என்பேன்.
நன்றி!
த ம 3
நட்புடன்,
புதுவை வேலு

சசிகலா said...

அழகின் அணிவகுப்பு அழகு..

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாமே அழகோ அழகு !!

கவிதைக்குப் பொய்யழகு என்று வைரமுத்து எழுதினார். ஆனால் கவிதைக்கு மெய்(யும்) அழகு(தான்) என்பதை நீங்கள் பறைசாற்றி விட்டீர்கள். அழகோ அழகு...உங்கள் வரிகளும் அழகு!

G.M Balasubramaniam said...

அழகு... எத்தனை அழகு.. எல்லாமே அழகு. இந்தப் பதிவும் அழகு. வாழ்த்துக்கள்

balaamagi said...

வணக்கம்,
இந்த பதிவுக்கு நான் வந்து கருத்து இடுவது,,,, அழகு,
எப்புடி,
எல்லாம் அழகு,
நன்றி,

”தளிர் சுரேஷ்” said...

அழகை விவரித்த அழகு அருமை! வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

பதிவுக்குப் பின்னூட்ட மழகு. தளத்துக்குத் த.ம வாக்களிப்பதும் அழகு!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அழகான கவிதை.

Post a Comment