அடுத்து அடுத்து இருக்கிற
வீடுகள்தான் ஆயினும்
சுப்ரமணி வீடு
வரும் கண்ணன்
காதர் வீட்டையோ
காதர் வீடு வரும் அல்லா
சுப்ரமணி வீட்டையோ
எட்டிப்பார்பதே இல்லை
இதில்
எட்வெர்ட் வீடு வரும்
ஏசுவும் விதிவிலக்கானவர் இல்லை
ஏனெனில்
அவரும் எதிர் வீட்டுக் காதரையோ
பக்கத்து வீட்டு சுப்ரமணியையோ
கண்டு கொள்வதே இல்லை
காரணம்
ஆண்டவர்கள் எல்லாம்
ஒரு சார்புடையவர்கள் என்பது
நிச்சயமாக இல்லை
வீரிய மருந்துதான்
எனினும் அது
உயிரற்ற உடலில்
தன் வீரியம் காட்ட இயலாது
கொண்ட நோய் தீர்க்க உதவாது
சக்தி மிக்கவர்தான்
ஆண்டவன் ஆயினும்
தன்மீது நம்பிக்கை
கொண்டவர்களையல்லாது
மற்றவருக்கு அருள் வழங்க இயலாது
இது
"எல்லா "ஆண்டவர்களுக்கும்
தெள்ளத் தெளிவாய்த் தெரியும்
நாம்தான் குழம்பிப்
பிரிந்துத் திரிகிறோம்
பலகூராய்ப் பிரிந்து...
அவர்களையும் நம் நோக்கில்
அற்பத்தனமாய்ப் பிரித்து...
வீடுகள்தான் ஆயினும்
சுப்ரமணி வீடு
வரும் கண்ணன்
காதர் வீட்டையோ
காதர் வீடு வரும் அல்லா
சுப்ரமணி வீட்டையோ
எட்டிப்பார்பதே இல்லை
இதில்
எட்வெர்ட் வீடு வரும்
ஏசுவும் விதிவிலக்கானவர் இல்லை
ஏனெனில்
அவரும் எதிர் வீட்டுக் காதரையோ
பக்கத்து வீட்டு சுப்ரமணியையோ
கண்டு கொள்வதே இல்லை
காரணம்
ஆண்டவர்கள் எல்லாம்
ஒரு சார்புடையவர்கள் என்பது
நிச்சயமாக இல்லை
வீரிய மருந்துதான்
எனினும் அது
உயிரற்ற உடலில்
தன் வீரியம் காட்ட இயலாது
கொண்ட நோய் தீர்க்க உதவாது
சக்தி மிக்கவர்தான்
ஆண்டவன் ஆயினும்
தன்மீது நம்பிக்கை
கொண்டவர்களையல்லாது
மற்றவருக்கு அருள் வழங்க இயலாது
இது
"எல்லா "ஆண்டவர்களுக்கும்
தெள்ளத் தெளிவாய்த் தெரியும்
நாம்தான் குழம்பிப்
பிரிந்துத் திரிகிறோம்
பலகூராய்ப் பிரிந்து...
அவர்களையும் நம் நோக்கில்
அற்பத்தனமாய்ப் பிரித்து...
8 comments:
சரியே...
வீதிகளும்,ஆண்டவர்களும் எப்போதுமே பிரித்துப்பார்ப்பதில்லை மனிதர்களை/
ஆம்
அவர்களையும் நம் நோக்கில் பிரித்து,
அருமை, வாழ்த்துக்கள்.
நன்றி.
ஆண்டவன் எங்கே பேதம் பார்க்கிறார். நாம்தான் பேதப்படுத்தி ஆண்டவர்களைப் படைத்திருக்கிறோம் பேதமும் பாராட்டுகிறோம்
ஆண்டவன் ஒருவனே! என்பதை உணர்தும் பா!
நல்ல கவிதை.
நமக்கு மேற்பட்ட ஒரு சக்தி - அதற்கு எத்தனை எத்தனை பெயர் வைத்து விட்டோம்.....
வணக்கம்
ஐயா.
அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ந்ல்லதொரு கவிதை...ஆண்டவன் எல்லோருக்கும் பொது ஒரு வர்தான் நாம் மனித வர்கம் தான் எல்லாவற்றையும் பிரித்து பேதம் பார்க்கின்றோம்....பல பெயர்கள்ம் பல கதைகள் சொல்லி..
Post a Comment