Monday, July 20, 2015

சூட்சும நாடி

எதிர்பார்ப்பிற்கும்
யதார்த்தத்திற்குமான இடைவெளியே
இன்ப துன்பத்திற்கான
இடைவெளி என்பது புரிந்து போக

யதார்த்தத்திற்கான
எதிர்திசை பயணம் விடுத்து
யதார்த்தத் திசையிலேயே
பயணிக்கத் துவங்குகிறேன் நான்

இடைவெளி குறைதல்
குறித்த அச்சத்தில்
எதார்த்தமும் தன்
வேகம் குறைக்கத் துவங்குகிறது

மேல்தாடை
நம்  வசத்தில் இல்லை என்பது
புரிந்து போக

கீழ்தாடை பலமறிய
மேல் தாடை நினைவொழித்து
மெல்லத் துவங்குகிறேன் நான்

தன் பலவீனம் அறிந்த
மேற்தாடையும்
கீழ்த்தாடையின் போங்கிலேயே
மெல்ல இயங்கத் துவங்குகிறது

10 comments:

Anonymous said...

யதார்த்தத்திற்கான எதிர்த் திசைப் பயணமா
இது வரை புரிந்தீர்கள்?...
யதார்த்தத்திற்கான
எதிர்திசை பயணம் விடுத்து
யதார்த்தத் திசையிலேயே
பயணிக்கத் துவங்குகிறேன் நான்
---- இது மனப்பக்குவம் வர தானாக நிகழும்.

திண்டுக்கல் தனபாலன் said...

தாடைகள் ஒப்பீடு ஆகா...!

UmayalGayathri said...

யதார்த்தத் திசையிலேயே
பயணிக்கத் துவங்குகிறேன் நான்//

யதார்த்தம் புரிகிற போது வருகிறது நிம்மதி. நல்ல கவிதை. தம +1.

Unknown said...

யதார்த்தத் திசையிலேயே
பயணிக்கத் துவங்கினேன் நானும் ஏனோ ஏதும் எனக்குப் புரியவில்லை!

எங்கே காணோம்!!?

ஸ்ரீராம். said...

வண்டி மாடுகள் இரண்டும் இரண்டு திசையில் போக முடியாது என்று பொருள் செய்து கொள்ளவா?

”தளிர் சுரேஷ்” said...

யதார்த்தின் வெளிப்பாடு அருமை!

சிகரம் பாரதி said...

அருமை. காலத்திற்கேற்ற கவிதை. அழகிய எடுகோள். நமது வலைத்தளம் : சிகரம்

Thulasidharan V Thillaiakathu said...

யதார்த்தத்தைப் பர்ரி யதார்த்தமான வரிகள்,,அழகான வரிகள்...

G.M Balasubramaniam said...

எதிர்பார்ப்பே இல்லாததுதான் யதார்த்தமா,?சூக்குமமாகச் சொல்லிப் போவதில் பல விஷயங்கள் அவ்ரவருக்குத் தோன்றியபடி பொருள் கொள்ளலாம்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

யாரவது ஒருவர் விட்டுக் கொடுத்துதான் ஆகவேணும்
வித்தியாசமான சிந்தனை

Post a Comment