முள்ளும் மலருமே
ரோஜாவை
அடையாளம் காட்டிப் போகின்றன
செடிக்கு
அழகு சேர்த்துப் போகின்றன
நண்பர்களும்
பகைவர்களுமே
வாழ்க்கையினை
அர்த்தப்படுத்திப் போகிறார்கள்
தொடர்ந்து
முன்னெடுத்துப் போகிறார்கள்
நீரும் நெருப்பும் போல
நட்பும் பகையும்
எதிர் எதிரானவை அல்ல
இடம் மாறத் தக்கவை எப்படி
எதிரானவைகளாக இருக்கக்கூடும் ?
நம் வளர்ச்சி கண்டு
குமுறித் தவிக்கும் நண்பன்
மோசமான எதிரியாகிறான்
நய வஞ்சகனாய்
உருமாறிப் போகிறான்
நம் தரம் கண்டு
மாற்ற்ம் கொள்ளும் பகைவன்
உண்மை நண்பனாகிறான்
உயிர்த் தோழனாய்
நிலை மாற்றம் கொள்கிறான்
நண்பர்கள் என அதிகம் கொண்டாடி
நட்பிழக்கவும் வேண்டாம்
பகைவரென அழிக்கமுயன்று
நிலை குலைதலும் வேண்டாம்
நட்பையும் பகையையும்
அதனதன் இடத்தில் வைத்து
பக்குவமாய்ப் பாதுகாப்போம்
இடம் மாறத் தக்கவைகளிடம்
அலட்சியம் கொள்வது
அறிவுடமையல்ல
இன்றைய நிலையில்...
அரசியலில் மட்டும் அல்ல
அன்றாட வாழ்வில் கூட
நிரந்தர எதிரியும்
நிரந்தர நண்பனும்
நிச்சயமாய் இல்லவே இல்லை
ரோஜாவை
அடையாளம் காட்டிப் போகின்றன
செடிக்கு
அழகு சேர்த்துப் போகின்றன
நண்பர்களும்
பகைவர்களுமே
வாழ்க்கையினை
அர்த்தப்படுத்திப் போகிறார்கள்
தொடர்ந்து
முன்னெடுத்துப் போகிறார்கள்
நீரும் நெருப்பும் போல
நட்பும் பகையும்
எதிர் எதிரானவை அல்ல
இடம் மாறத் தக்கவை எப்படி
எதிரானவைகளாக இருக்கக்கூடும் ?
நம் வளர்ச்சி கண்டு
குமுறித் தவிக்கும் நண்பன்
மோசமான எதிரியாகிறான்
நய வஞ்சகனாய்
உருமாறிப் போகிறான்
நம் தரம் கண்டு
மாற்ற்ம் கொள்ளும் பகைவன்
உண்மை நண்பனாகிறான்
உயிர்த் தோழனாய்
நிலை மாற்றம் கொள்கிறான்
நண்பர்கள் என அதிகம் கொண்டாடி
நட்பிழக்கவும் வேண்டாம்
பகைவரென அழிக்கமுயன்று
நிலை குலைதலும் வேண்டாம்
நட்பையும் பகையையும்
அதனதன் இடத்தில் வைத்து
பக்குவமாய்ப் பாதுகாப்போம்
இடம் மாறத் தக்கவைகளிடம்
அலட்சியம் கொள்வது
அறிவுடமையல்ல
இன்றைய நிலையில்...
அரசியலில் மட்டும் அல்ல
அன்றாட வாழ்வில் கூட
நிரந்தர எதிரியும்
நிரந்தர நண்பனும்
நிச்சயமாய் இல்லவே இல்லை
14 comments:
சரிதான் ஐயா
//நண்பர்கள் என அதிகம் கொண்டாடி
நட்பிழக்கவும் வேண்டாம்
பகைவரென அழிக்கமுயன்று
நிலை குலைதலும் வேண்டாம்// அருமை
த.ம.2
நல்ல மெஸேஜ்.
பக்குவமாய் சொன்னதும் அருமை + உண்மை தான் ஐயா...
//நட்பையும் பகையையும்
அதனதன் இடத்தில் வைத்து
பக்குவமாய்ப் பாதுகாப்போம்
//
நல்ல அறிவுரை.
த.ம. +1
வணக்கம்
ஐயா
100 வீதம் உண்மைதான் ஐயாசொல்லிய விதம் சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நண்பர்கள் என அதிகம் கொண்டாடி
நட்பிழக்கவும் வேண்டாம்
பகைவரென அழிக்கமுயன்று
நிலை குலைதலும் வேண்டாம்
அனைவரும் அறிய வேண்டிய, உணர வேண்டிய உண்மை இரமணி! இது எனக்கே பாடம்!
நண்பர்கள் என அதிகம் கொண்டாடி
நட்பிழக்கவும் வேண்டாம்
பகைவரென அழிக்கமுயன்று
நிலை குலைதலும் வேண்டாம்......
மிகச்சரியான தகுந்த வழிகாட்டல் பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.
/நட்பும் பகையும்
எதிர் எதிரானவை அல்ல/ நல்ல சிந்தனையும் கருத்தும் . வாழ்த்துக்கள்.
வணக்கம் ஐயா!
மனதிற் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டிய
அருமையான சிந்தனை!
மிகச் சிறப்பு!
நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!
கடைசிவரிகள் சத்தியமான உண்மை! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே :)
அருமையாக சொல்லியுள்ளீர்கள்,
யாரும் நிரந்தர நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை.
வாழ்த்துக்கள்.
நன்றி.
நட்பும் பகைமையும் எதிர் எதிரானவை அல்ல// ஆஹா...அருமை...
நிரந்தர எதிரியும்
நிரந்தர நண்பனும்
நிச்சயமாய் இல்லவே இல்லை//
உண்மையான வார்த்தைகள் 100%
பாரதியின் பாடல்னினைவுக்கு வருகின்றது...பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே ...
Post a Comment