Saturday, July 18, 2015

பட்டவைகள் துளிர்க்க...

இருள்
தூரம்
அறியாமை
வெறுப்பு மட்டுமல்ல

கூடுதல் வெளிச்சம்
அதிக நெருக்கம்
பரிபூரணமாய் அறிதல்
அதீத அன்பு கூட

புரிதலையும்
அன்னியோன்யத்தையும்
அடியோடழித்துப் போகிறது

இப்போதெல்லாம்
போதுமான ஒளி
கண்ணுக்கெட்டியதூரம்
தேவையான அறிதல்
கைகுலுக்கும் நெருக்கத்தோடு
என்னை நிலை நிறுத்திக்கொள்கிறேன்

பட்டுப்போனவைகள் கூட
மிக லேசாய் துளிர்க்கத் துவங்குகின்றன

9 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

உண்மையான வரிகள் ஐயா.. ஒவ்வொரு வரிகளையும் இரசித்துப்படித்தேன்.. பகிர்வுக்கு நன்றி. த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

மீண்டும் வசந்தம்!

திண்டுக்கல் தனபாலன் said...

திருப்தி...

அருமை ஐயா...

vimalanperali said...

துளிர்க்கும் நம்பிக்கையும் சேர்ந்து/

Thulasidharan V Thillaiakathu said...

அதீத அன்பு கூட

புரிதலையும்
அன்னியோன்யத்தையும்
அடியோடழித்துப் போகிறது// உண்மைதானோ?!!! நல்ல வரிகள்...அளவுக்கு மீறினால் எதுவாக இருந்தாலும் நஞ்சுதானே இல்லையா...நல்ல கருத்துள்ள வரிகள்...

வெங்கட் நாகராஜ் said...

அருமை....

த.ம. +1

balaamagi said...

வணக்கம்,
கூடுதல் வெளிச்சம்
அதிக நெருக்கம்
பரிபூரணமாய் அறிதல்
அதீத அன்பு கூட
ஆம் உண்மை சரியாகச் சொன்னீர்கள்,
நன்றி.

சசிகலா said...

மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா.
அளவுக்கு மீறினால் அமிர்தம் மட்டுமல்ல..அன்பும் நஞ்சாகுமோ?

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான் ஐயா! அதிக சிநேகம் பிராண சங்கடம் என்ற பழமொழியும் உண்டு! அதை எளிமையாக சொல்லிவிட்டீர்கள்!

Post a Comment