Thursday, July 2, 2015

மறை பொருள்

புரிகிறபடி
மிகத் தெளிவாகச்
சொல்லப்படுபவைகள் எல்லாம்
அசிரத்தையால்
கவனமின்மையால்
மிகச் சரியாகப்
புரிந்து கொள்ளப்படாதுப்  போக

புதிராக
 துளியும் புரியாதபடி
சொல்லப்படுபவைகள்
கூடுதல் கவனத்தால்
கூடுதல் சுவாரஸ்யத்தால்
சொன்னதைவிட
அதிகமாகப் புரிந்துகொள்ளப்படுவதைப்போல்

பட்டப் பகலில்
வெட்ட வெளியில்
தெளிவாகத் தெரிபவையெல்லாம்
அவ்வாறு தெரிவதாலேயே
சுவாரஸ்யமற்றுப் போக
நம் கவனம் கவராது போக

நடுஇரவில்
கரிய இருளில்
மின்னித் தொலைக்கும்
ஏதோ ஒன்று
கூடுதல் ஆர்வத்தால்
நம் கற்பனையை
அதிகம் தூண்டிப் போவதைப்போல்

அண்டசராசரங்களும்
அதைப் படைத்ததாக நம்பப்படும் பேரறிவும்
நம் அறிவுக்கும்
நம் புரிதலுக்கும்
 கொஞ்சம் தள்ளியே நின்று
முழுமையாய் வெளிக்காட்டாது
ஜாலம் காட்டுவது  கூட

அவரவர்கள் தகுதிக்கேற்பவும்
முயற்சிக்கேற்பவும்
தன்னைப் புரிந்து கொள்ளட்டும்

அதுவே
முழுமையானதாகவும்
மிகச் சரியான
புரிதலாயுமி ருக்கும் எனும்
உயரிய நோக்கத்தில்  தானோ  ?

12 comments:

ஸ்ரீராம். said...

இருக்குமோ!

Anonymous said...

புரியாதபடி வரிகள் எழுதலும்..
மறை பொருளாக.....

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். said...
இருக்குமோ!//
....கலாம்

முதல் உடன் வரவுக்கும் மிகவும் இரசிக்கும்படியான
சுருக்கமான ஆயினும் நிறைவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

balaamagi said...

வணக்கம்,
புரிதல் என்பது அவரவர் மனம் படி
நன்றி.

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

G.M Balasubramaniam said...

கற்பனை வளம் மிக்கவர்கள் புரிந்து கொள்வது சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் உண்மை தெரியாமல் , சொல்லப்படாமல் இருப்பது எந்த உயரிய நோக்கத்தில்..? யாருடைய நோக்கத்தில்....?

திண்டுக்கல் தனபாலன் said...

தன்னை ஒப்பிட்டே புரிதல் 90%

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

புரிதல் என்பது படிப்பவர்களின் எண்ண ஓட்டத்தை பொறுத்தது... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன்.

கே. பி. ஜனா... said...

ரசித்தேன்.

Thulasidharan V Thillaiakathu said...

ரசித்தோம்!

Post a Comment