Thursday, August 13, 2015

மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும் சொல்லக்
கற்றுக் கொள்வோம்

பொய்யாயினும்
நம்ப முடியாததாயினும்
தர்க்கத்திற்கு எதிரானதாயினும்..

மீண்டும் மீண்டும்சொல்லப்பட்டவைகள்தான்
திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவைதான்
பாசியாய் மிகஅதிகமாய்ப்   படர்கின்றன
தலைமுறை தாண்டி நிலையாய்த் தொடர்கின்றன

பால் குடிக்கும் நாகம் மட்டுமல்ல
வெள்ளைச் சேலை மோகினி மட்டுமல்ல
சொர்க்கம் நரகம் மட்டுமல்ல
சடங்குகள் சம்பிரதாயங்கள் மட்டுமல்ல
ஜாதி மதம் மட்டுமல்ல

நாம் நம்பிக்கை கொண்டிருக்கிற
பகுத்தறிவுக்கு ஒப்பாதவை எல்லாம்
நமக்கு திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டவையே
நம்மீது திமிரத் திமிரத் திணிக்கப்பட்டவையே

எனவே
இவைகளுக்கு எதிரான
சாட்சியங்களை நிரூபணங்களை
ஒருமுறை சொல்லி ஓய்ந்துவிடாது

இனியேனும்
மீண்டும் மீண்டும்
சொல்லக் கற்றுக் கொள்வோம்

இனியேனும்
பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம்

12 comments:

ஸ்ரீராம். said...

கற்றுக்கொள்வோம்.

வெட்டிப்பேச்சு said...

அது சரி, இந்த பொய் பித்தலாட்டங்களுக்கும் இது பொருந்துமா?

அரசியல் வாதிகள் அதைத்தானே கையில் எடுத்திருக்கிறார்கள். அதனால் தான் அவைகள் பாசிபோல மக்கள் மனதில் பதிந்து விட்டனவோ?

God Bless You

KILLERGEE Devakottai said...

கவிதை மீண்டும் மீண்டும் படிக்க வைத்தது கவிஞரே
தமிழ் மணம் 1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சற்றே சிரமம்தான், முயற்சிப்போம்.

G.M Balasubramaniam said...

அதனால்தான் சில கருத்துக்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்

கோமதி அரசு said...

பொய் பித்தலாட்டங்களை எளிதாய்
வெல்லக் கற்றுக் கொள்வோம்//

கற்றுக்கொள்ளவேண்டும் .

”தளிர் சுரேஷ்” said...

கற்றுக்கொள்வோம்! திரும்ப திரும்பசொல்வோம்! வெல்வோம்!

balaamagi said...

வணக்கம்,
கற்றுக்கொள்ள முடியுமா????
அருமையான வரிகள்,

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முயன்று பார்ப்போம்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

முயற்சி செய்து பார்ப்போம் ஐயா... த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் said...

கற்றுக் கொள்வோம்....

Thulasidharan V Thillaiakathu said...

ம்ம்ம்ம் சில சமயம் தவ்ரிக்க முடியாமல் வள்ளுவரின் வாக்குப்படி பொய் சொன்னாலும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும் தவிர்த்திட...

Post a Comment