Wednesday, August 19, 2015

சிரிக்கும் நாளே திரு நாள்

நாலே நாளு நிகழ்வுக்ளுக்காக
நம் வாழ்நாள் எல்லாம்
உழைத்துக் களைக்கிறோம்
என்பதுதான் எத்தனை அவலமானது

இப்போது
எந்தப் பிரசவமும்
இயற்கையானதில்லை
எல்லாமே ஆயுதம்தான்
இதற்கு கால் ஆஸ்தி போகும்

இப்போது
பள்ளிக் கூடங்கள் எதுவும்
கல்விக் கூடங்கள் இல்லை
எல்லாமே கொள்ளைக் கூடங்கள்தான்
இதற்கொரு கால் ஆஸ்தி போகும்

இப்போது
எந்தத் திருமணமும்
மனவிழாவாக இல்லை
எல்லாமே ஜம்பம் காட்டும் பெருவிழாதான்
இதற்கென கால் ஆஸ்தி போகும்

இப்போது
எந்தச் சாவையும்
துக்க நாளென முடிப்பதில்லை
எல்லாமே சடங்கு சம்பிரதாயத் திருவிழாதான்
இதிலிமொரு கால் ஆஸ்தி போகும்

இதிலும் மீறி
மிஞ்சும் ஆஸ்தியை
ஆசையும் ஆடம்பரமும்
கொண்டாட்டங்களும்
துடைத்தெடுத்துப் போகும்

ஆரோக்கியம் விடுத்து
நோய்க்கெனச் செலவழித்தலைப் போல

வாழ்க்கையைக்
கொண்டாடுதலை விடுத்து
கொண்டாட்டங்களையே
வாழ்க்கையெனக் கொண்டதை
என்று மாற்றிக் கொள்ளப் போகிறோம் ?

நாற்றினை வாடவிட்டு
களைகளுக்கு நீர்ப்பாய்ச்சும்
மடமையை என்று ஒழிக்கப் போகிறோம் ?

சிரிக்கும் நாளெல்லாம்
நிச்சயம் திருநாள்தான் என்பதை
வருத்தத்தில் இருக்கும்
எந்தத் திரு நாளும்
நிச்சயம் வெறும் நாளே என்பதை
என்று உணரப் போகிறோம்  ?

11 comments:

ஸ்ரீராம். said...

உணர விதி இருந்தால் உணர்வோம்!

:))))

கரந்தை ஜெயக்குமார் said...

நாற்றினை வாடவிட்டு
களைகளுக்கு நீர்ப்பாய்ச்சும்
மடமையை என்று ஒழிக்கப் போகிறோம் ?

உண்மை
வேதனை
தம +1

இராஜராஜேஸ்வரி said...

ஆஸ்திகளை தொலைத்தாலும்
ஆனந்தம் கனவாகவே இருக்கிறதே..
அவலம் தான்..!

Nagendra Bharathi said...

வாழ்க்கையைக் கொண்டாடுவோம்

Thulasidharan V Thillaiakathu said...

சிரிக்கும் நாளெல்லாம்
நிச்சயம் திருநாள்தான் என்பதை
வருத்தத்தில் இருக்கும்
எந்தத் திரு நாளும்
நிச்சயம் வெறும் நாளே என்பதை
என்று உணரப் போகிறோம் ?// அருமையான வரிகள். உணருவோமா..நாட்களில் இல்லை மகிழ்வு..மனதில் உள்ளது மகிழ்வு..

Thulasidharan V Thillaiakathu said...

சிரிக்கும் நாளெல்லாம்
நிச்சயம் திருநாள்தான் என்பதை
வருத்தத்தில் இருக்கும்
எந்தத் திரு நாளும்
நிச்சயம் வெறும் நாளே என்பதை
என்று உணரப் போகிறோம் ?// அருமையான வரிகள். உணருவோமா..நாட்களில் இல்லை மகிழ்வு..மனதில் உள்ளது மகிழ்வு..

Thulasidharan V Thillaiakathu said...

சிரிக்கும் நாளெல்லாம்
நிச்சயம் திருநாள்தான் என்பதை
வருத்தத்தில் இருக்கும்
எந்தத் திரு நாளும்
நிச்சயம் வெறும் நாளே என்பதை
என்று உணரப் போகிறோம் ?// அருமையான வரிகள். உணருவோமா..நாட்களில் இல்லை மகிழ்வு..மனதில் உள்ளது மகிழ்வு..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மை. சிரிக்க மறந்து நம்மை மறந்துவிடுகிறோம்.

G.M Balasubramaniam said...

ஆஸ்திகளைச் செலவிட்டு ஆநந்தத்தைத் தொலைக்கிறோம். இருந்தாலும் செலவிடும் போது ஒரு தனி மதிப்பே உணரப்படுகிறது.

”தளிர் சுரேஷ்” said...

இந்த ஆடம்பரங்கள் எனக்கும் பிடிப்பதில்லை! விட்டாலும் மீறித் திணிப்பவர்களை என்ன செய்வது?

அம்பாளடியாள் said...


இந்த உலகம் போலிகளைத் தான் அதிகம் விரும்புகின்றது ஆதலால்
மாற்றம் காண்பதும் கடினமே !மனம் மட்டும் இந்தப் போக்கை எண்ணித் தினமும் வேதனையில் வாடித்தான் போகிறது என் செய்வது !:( சிறப்பான பகிர்வு ஐயா பாராட்டுக்கள் .

Post a Comment