Sunday, February 21, 2016

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வுப்   பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாரியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பானமே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ

கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ

வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைப் பெண்ணே......

உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்

என்றும்போல உன் அருளை
எமக்கும் நீ வாரிவழங்கிச் செல்



9 comments:

மீரா செல்வக்குமார் said...

கவிதைப் பெண்ணே......இவரை காயப்படுத்தி விடாதே ..இவர் இன்னும் எழுதட்டும் ..

G.M Balasubramaniam said...

/மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
கூர்மிகுக் கோடாரியே/ வலைத்தளத்தில் பதிக்கும் கவிதைகளுக்குமா. சந்தேகமே. பலரும் நுனிப்புல் மேய்வோரே

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Unknown said...

நற்கவிதைநண்பரே

Unknown said...

நற்கவிதைநண்பரே

Unknown said...

நற்கவிதைநண்பரே

சிந்தையின் சிதறல்கள் said...

neengal kathalikkum ival yenrum kaividamaddal

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
இரசித்தேன் அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

கவிதைப் பெண்ணே அவருக்கு எல்லா சக்தியும் கொடுத்து வாழ்த்து. அருமை சார்!

Post a Comment