Saturday, February 20, 2016

ஊரான் வீட்டு நெய்யே.. ......

ஒரு பிரபலமான சோப்புக் கம்பெனியில்
ஒரு பெரும் பிரச்சனை.

சோப்பின் தரம்,சோப்பின் பெயர், மார்கெட்டிங்
எல்லாம்மிகச் சிறப்பாக இருந்தும்,எவ்வளவுதான்
கவனமாக இருந்தும்,இயந்திரத்தில் ஏற்படும்
சில தவறுதல்கள் காரணமாக சில சோப்பு பேக்கில்
சோப்பு இல்லாமல் மார்கெட்டுக்குப் போய்விடுகிறது.

இதனால் ஏற்படும் கம்பெனியின் மெரிட்
குறைவினைச்சரி செய்ய அந்தக் கம்பெனியின்
 உயர் மட்டஅதிகாரிகள் கூடி  விவாதித்து
முடிவுக்கு வந்தார்கள்

அதன்படி சோப்பு முடிவாக பேக் ஆகி செல்லும்
இடத்தில் எக்ஸ்ரே கருவியையப் போன்று ஒரு
கருவியை நிறுவுவதென்றும் அதன் மூலம்
சோப்பு இல்லாத பேக்கைக் கண்டு பிடித்து
எடுத்துவிடலாம் எனவும்,அதற்குச் சில இலட்சங்கள்
செலவாகும் என்றாலும் கம்பெனியின் தரம்
நிலை நிறுத்தப்படும் என்பதால் அந்தச் செலவு ஒரு
பெரிய பிரச்சனையில்லை என முடிவு செய்தார்கள்

அந்த உயர் அதிகாரிகளில் ஒருவர் மட்டும்
எப்போதும்கீழ் நிலை ஊழியர்களிடம் கலந்து பேசி
ஒருபிரச்சனைக்குத் தீர்வு கண்டால் அது
நடைமுறைக்குச் சாத்தியப்பட்டதாக இருக்கும்
என்கிற கருத்துக் கொண்டவர்.

அதனால் எப்போதும் கீழ் நிலை ஊழியர்களிடம்
கேண்டீனில் டீ சாப்பிடுகிற சாக்கில் எப்போதும்
அவர்களுடன் ஒரு சுமுக உறவினையும்
தொடர்பினையும் வைத்திருப்பார்

அதன்படி  மறு நாள் கேண்டீனில் டீ சாப்பிட்டபடி
இந்தக் காலி டப்பா பிரச்சனைக் குறித்தும்,அதற்கு
ஒரு மிஷின் வாங்க இருக்கிற விஷயம் குறித்தும்
மெல்லச் சொல்ல...

ஒரு ஓரம் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த
ஒரு தொழிலாளி

" ஐயா நாங்களும் இது விஷயம் கேள்விப் பட்டோம்
எக்ஸ்ரே மிஷினுக்கு என அத்தனை இலட்சங்கள்
செலவு செய்வதற்குப் பதிலாக , சோப்புபேக் ஆகி
வருகிற இடத்தில் கொஞ்சம் வேகமாக
காத்துவரும்படி ஏற்பாடு செய்தால்
காலி டப்பா விழுந்து விடும்
அதற்கு அதிகம் செலவாகாது.சரியாகச் சொன்னா
ஒரு ஃபேன் செலவுதான் " என்றார்

அந்த அதிகாரி இந்த சின்ன விஷயம் நமக்கு
எப்படித் தோன்றாது போயிற்று எனவெட்கப் பட்டுப்
போனார்

இந்தக் கதை இப்போது எதற்கெனில்..

நமது தமிழ் நாடு அரசு பல ஊதாரிச் செலவுகள்
செய்துஇலட்சம், கோடியென கடன் தொல்லையில்
இருக்கிற நிலையில், தமிழில் பெயர் வைத்தால்
அந்தத் திரைப்படத்திற்கு வரி விலக்கு எனச்
சொல்லி பல இலட்சம் வருவாயை வீணாக்குவதை விட
தமிழ் அல்லாது வேறு மொழியில் பெயர்
இருக்குமானால்கொஞ்சம் வரி கட்டணும் எனச்
சொன்னால் வீண் செலவுகள் குறையுமே

கோடிக் கோடியாய் நடிகர் நடிகையருக்கு
கருப்புப்பணம் கொடுத்து படம் எடுக்கும் நபருக்கு
எதுக்கு மக்கள் பணத்தை வீணாய்க்
கொட்டித் தொலைக்கணும் ?

தமிழில் பெயர் வைப்பதும் நிச்சயம் தொடருமே

இதை  இவர்கள் யோசிக்காததன் காரணம்
தலைப்பில் சொன்னதுதான்......

13 comments:

UmayalGayathri said...

ஆம். உண்மை தான் ஐயா. டாஸ்மாக்ல வருமானம் பார்ப்பதற்கு பதில் இப்படி செய்யலாம் தான்...நல்ல யோசனை.

MANO நாஞ்சில் மனோ said...

இன்னும் நிறைய தேவையல்லாத செலவுகளை அரசு செய்துகொண்டுதான் இருக்கிறது குரு...

G.M Balasubramaniam said...

என்ன பெயர் வைத்தாலும் அது தமிழ்தான் என்பார்கள்

iK Way said...

நீங்க இத பாக்கலையா??!!. இதும்படி எல்லாமே தமிழ்ப் படம் தானே....

http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_16.html

ஸ்ரீராம். said...

எனக்கும் தோன்றியது!

Avargal Unmaigal said...

மிக சரியாக சொன்னீர்கள்

ananthako said...

நம் நாட்டில்பேனர் ஸ்டிக்கர் மூக்ககும்
ேமாதிரம் வீண் ஆடம்பரம் அதிகம்

மிக அமையான இடுகை.

ananthako said...

நம் நாட்டில்பேனர் ஸ்டிக்கர் மூக்ககும்
ேமாதிரம் வீண் ஆடம்பரம் அதிகம்

மிக அமையான இடுகை.

Unknown said...

இதற்குநீதிமன்ற உத்தரவுகள் அரசியல் குறுக்கீடு கொடுமை

Unknown said...

இதற்குநீதிமன்ற உத்தரவுகள் அரசியல் குறுக்கீடு கொடுமை

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தி.தமிழ் இளங்கோ said...

நீங்கள் சொல்வது சரிதான். தமிழ்நாட்டில், தமிழ்ப் படத்திற்கு, தமிழில் பெயர் வைப்பதற்கு, தமிழ்நாடு காசு தரவேண்டி உள்ளது. முதலில் இதனை நிறுத்த வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் சரியே! அருமையான யோசனை...

Post a Comment