பதிவுலகில் பக்கப் பார்வைகளும்
தமிழ்மண வாக்கும் பதிவின் தரவரிசைக்கு
முக்கிய காரணங்கள் என்றாலும்...
பின்னூட்டங்களின் எண்ணிக்கையே பதிவரின்
எழுத்துச் செல்வாக்கையும் பதிவின் தரத்தையும்
நிர்ணயிக்கிறமுக்கிய காரணியாக நான் கருதுகிறேன்
ஏறக்குறைய ஆறு ஆண்டுகள்
எழுதிக் கொண்டு வந்தாலும் நான் என் ஒரு பதிவில்
பெற்ற அதிகப் பட்ச பின்னூட்டம்
அனேகமாக நூறு மட்டுமே இருக்கும்.
அதுவும் என்னுடைய பதில்
பின்னூட்டங்களும் சேர்த்து..
அந்த வகையில் இன்று மதிப்பிற்குரிய
பதிவுலகப்பிதாமகர் அவர்களின் பதிவுக்கு
நான் பின்னூட்டபோது
அது 231 ஆக இருந்தது அதிக மகிழ்ச்சியையும்
ஆச்சரியத்தையும் அளித்தது
http://gopu1949.blogspot.in/ 2015/12/100-2015.html
மத ரீதியாக முரண்பட்ட விஷயத்தை முன்வைத்த
பதிவுகள் அன்றி நேர்மறையான ஒரு பதிவுக்கு
அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவு இதுவாகத்தான்
இருக்கும் என நினைக்கிறேன்
இந்த வகையில் பதிவின் தரவுகள் குறித்து
முழுமையான தகவல் தர முடிந்த பதிவர்கள்
(மிகக் குறிப்பாக திண்டுக்கல் தன்பாலன்,
தமிழ் இளங்கோபோன்றவர்கள் )
அவர்களுக்குத் தெரிந்து அதிகப் பின்னூட்டங்கள்
பெற்றப் பதிவுகள் இருந்தால் பதிவிடலாமே
அது அந்தப் பதிவுகளைப் படிக்கவும்
அந்தப் பதிவரைத் தொடர இணைப்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும்
வசதியாய் இருக்கும் தானே ?
தமிழ்மண வாக்கும் பதிவின் தரவரிசைக்கு
முக்கிய காரணங்கள் என்றாலும்...
பின்னூட்டங்களின் எண்ணிக்கையே பதிவரின்
எழுத்துச் செல்வாக்கையும் பதிவின் தரத்தையும்
நிர்ணயிக்கிறமுக்கிய காரணியாக நான் கருதுகிறேன்
ஏறக்குறைய ஆறு ஆண்டுகள்
எழுதிக் கொண்டு வந்தாலும் நான் என் ஒரு பதிவில்
பெற்ற அதிகப் பட்ச பின்னூட்டம்
அனேகமாக நூறு மட்டுமே இருக்கும்.
அதுவும் என்னுடைய பதில்
பின்னூட்டங்களும் சேர்த்து..
அந்த வகையில் இன்று மதிப்பிற்குரிய
பதிவுலகப்பிதாமகர் அவர்களின் பதிவுக்கு
நான் பின்னூட்டபோது
அது 231 ஆக இருந்தது அதிக மகிழ்ச்சியையும்
ஆச்சரியத்தையும் அளித்தது
http://gopu1949.blogspot.in/
மத ரீதியாக முரண்பட்ட விஷயத்தை முன்வைத்த
பதிவுகள் அன்றி நேர்மறையான ஒரு பதிவுக்கு
அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவு இதுவாகத்தான்
இருக்கும் என நினைக்கிறேன்
இந்த வகையில் பதிவின் தரவுகள் குறித்து
முழுமையான தகவல் தர முடிந்த பதிவர்கள்
(மிகக் குறிப்பாக திண்டுக்கல் தன்பாலன்,
தமிழ் இளங்கோபோன்றவர்கள் )
அவர்களுக்குத் தெரிந்து அதிகப் பின்னூட்டங்கள்
பெற்றப் பதிவுகள் இருந்தால் பதிவிடலாமே
அது அந்தப் பதிவுகளைப் படிக்கவும்
அந்தப் பதிவரைத் தொடர இணைப்பினை
ஏற்படுத்திக் கொள்ளவும்
வசதியாய் இருக்கும் தானே ?
44 comments:
சரிதான்
உண்மைதான்.சார்.
அவரது பதிவுகளில் பின்னூட்டங்கள் அதிகமாக வரும். அவரது பதில்களும் 231-ல் உண்டு. அவருக்கு வரும் பின்னூட்டங்களும், தனபாலன் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களும் எண்ணிக்கையில் அதிகம்.
ஆறு ஆண்டுகள் தொடர்ந்து எழுதி சாதனை படைத்து வரும், உங்களுக்கு வாழ்த்துக்கள். மூத்த வலைப்பதிவர் V.G.K. அவர்களைப் பற்றிய உங்கள் பார்வை நல்ல உதாரணம்.
என்னைப் பொருத்த வரையில், எனக்கு வரும் பின்னூட்டங்களை விட, வரும் பார்வையாளர்கள் அதிகம்.
பதிவுல்சகில் எல்லாமே பார்டர் டீல்தான் உனக்கு நான் எனக்கு நீ. நாம் சில பதிவுகளுக்குப் போகாவிட்டால் அங்கிருந்தும் பின்னூட்டம் வருவது குறைந்து விடும் மேலும் பின்னூடமிடுபவர் பெரும்பாலும் புகழ்ந்தே செல்கின்றனார். விமரிசனம் குறை சொல்லி எழுதக் கூடாது அதை யாரும் விரும்புவதில்லைநான் பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் படுவதை நிறுத்தி விட்டேன் எம் பணி பதிவெழுதிக் கிடப்பதே
சில தட்டச்சுப் பிழைகள் பொறுத்தருள்கவும் பிதாமகர் போன்ற புகழ் வார்த்தைகள் கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது கோபு சார் பதிவுலகில் சிறந்த எழுத்தாளர் சில செயல்களுக்கு முன்னோடி அதற்காக....?அவருக்கும் முன்பாகப் பதிவிடத் தொடங்கியவர்களும் இருக்கிறார்கள்
வாழ்த்துக்கள் ஐயா, தொடர்கிறேன்.
பாராட்டுகள்
சாதனை தொடரட்டும்.
நல்ல யோசனைதான் அய்யா! எனது பதிவுகளில் அதிகப் பின்னூட்டம் பெற்ற பதிவுகள் இரண்டு -
(1)http://valarumkavithai.blogspot.com/2014/05/blog-post_31.html (143 பின்னூட்டங்கள்)
(2)http://valarumkavithai.blogspot.com/2014/11/blog-post_26.html (129 பின்னூட்டங்கள்) இவற்றில் என் கருத்துகளும் சேரும். பொதுவாக எந்தவகைப் பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் அதிகம் வருகின்றன என்றும் ஓர் ஆய்வு செய்ய வேண்டும் என்று உங்கள் பதிவு யோசிக்க வைக்கிறது அய்யா நன்றி வணக்கம்.
அய்யா நீங்கள் தந்திருக்கும் கோபு அய்யாவின் வலைப்பக்க இணைப்புக் கிடைக்கவில்லை! கொஞ்சம் இணைப்பைச் சரிபார்க்க வேண்டுகிறேன்
பத்வுலகத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களின் பதிவுகள்.
பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். அதுவே முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது.
வைகோ ஸார் பதிவுகள் தனிரகம். தமிழ்மண இணைப்பு போன்றவை இல்லாமலேயே புகழ் பெற்றவர் அவர். நண்பர்கள் ஜாஸ்தி. இத்தனைக்கும் மற்றவர்களின் பதிவுகளில் அவர் சமீப காலமாகத்தான் அதிகம் பின்னூட்டம் போடுகிறார். மற்றவர்கள் பதிவுக்கு அவர் வாராத நேரங்களிலும் அவருக்கு வாசகர் எண்ணிக்கைக் குறையவில்லை என்பது சிறப்பு.
உங்கள் லிங்க் திறக்கவில்லை என்பது ஒருபுறம், தனி ஜன்னலில் திறப்பது போல அமைத்தால் நன்றாயிருக்கும்.
திரு. வி. ஜி. கே. அவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையைவிட என்னைக் கவர்ந்த அம்சம், பின்னூட்டங்களின் சுவாரஸ்யத் தன்மைதான்.
நானும் பின்னூட்டமிட்டுவிட்டேன்.. சிறப்பு..
நல்ல லிஷயம் தான்.கோபால் சார் பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் பற்றி ஏற்கனவே புள்ளி விவரங்களுடன் சொல்லி இருக்காங்க. அதுமட்டுமில்லாம அவங்கமட்டுமே 200-----பின்னூட்டங்களுக்கு மேல வந்தா பாக்க முடியும் மத்தவங்களால 200
பின்னூட்டம் மட்டுமே பாக்கமுடியும்னும் சொல்லி இருந்தாங்க
மேலே ஒருவர் சொல்லி இருப்பது போல கோ..பூ.. சார் பதிவில் வரும் பின்னூட்டங்களிவ் சுவாரசியம் அதிகமாக இருப்பது ஒருபுறம் இருக்க அவர் அனைவருச்கும்.கொடுக்கும் ரிப்ள பின்னூட்டங்களோ லென்தியாகவும் ஆத்மார்த்தமாகவும் சுவாரசியமாகவும் இருக்சும். சக பதிவர்கள் ஹேல் அவர் வைத்திருக்சும் அன்பின் வெளிப்பாடு புரிந்துகொள்ள முடிகிறது...
உண்மைதான். திரு கோபால்சாமியின் பதிவில் பின்னூட்டங்கள் தனி நாவலாகும் தகுதி பெற்றவை நன்றி ஸ்ரீ ரமணன் ஜி.
திரு வைகோ அவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்கள் வரவில்லை என்றால் தான் அதிசயம். என்னைப் பொறுத்தவரை இதற்கு அதிகம் கவனம் கொடுப்பதில்லை. ஆறு ஆண்டுகளாய் எழுதி வரும் உங்களுக்கும், பின்னூட்டங்களில் சாதனை படைத்து வரும் வைகோவுக்கும் வாழ்த்துகள்.
//பதிவுலகில் பக்கப் பார்வைகளும் தமிழ்மண வாக்கும் பதிவின் தரவரிசைக்கு முக்கிய காரணங்கள் என்றாலும்...//
இவற்றையெல்லாம் முக்கியக் காரணங்களாக நான் ஒருபோதும் நினைப்பது இல்லை. தமிழ்மணம் உள்பட எந்தத்திரட்டிகளிலும் என் பதிவுகளை நான் 01.01.2012 முதல் 31.12.2015 வரை, கடந்த நான்கு ஆண்டுகளாக இணைத்ததே இல்லை.
>>>>>
2
//பின்னூட்டங்களின் எண்ணிக்கையே பதிவரின்
எழுத்துச் செல்வாக்கையும் பதிவின் தரத்தையும்
நிர்ணயிக்கிறமுக்கிய காரணியாக நான் கருதுகிறேன்.//
நானும் அப்படியேதான் கருதுகிறேன்.
’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்’ என்ற தலைப்பிலேயே 2015 மார்ச் மாதம் நான் தொடர்ச்சியாக 15 பதிவுகள் கொடுத்துள்ளேன்.
பகுதி-1 க்கான இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2015/03/1.html
இறுதிப்பதிவுக்கான இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2015/03/120404.html
இதுபோலத் துணிந்து யாரும் இதுவரை பதிவுலகில் செய்தது இல்லை. நினைத்தாலும் இதுபோன்று எல்லோராலும் செய்து காட்டவும் முடியாது என்பதே இதிலுள்ள நிதர்சனமான உண்மையாகும்.
>>>>>
3
கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவுலகில் தொடர்ந்து நீடித்து வந்துள்ளதுடன், அனைத்துப்பதிவர்கள் மத்தியிலும் நன்கு பிரபலமாகி, மிகச்சிறப்பான சுமார் 850 பதிவுகளுக்கு மேல் கொடுத்துள்ளீர்கள். அதற்குத் தங்களுக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துகள், திரு. ரமணி, சார்.
>>>>>
4
//.............. VGK அவர்களின் பதிவுக்கு நான் பின்னூட்டபோது அது 231 ஆக இருந்தது அதிக மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது
http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html//
என் பதில்கள் உள்பட, எனக்கு 126 க்கு மேல் 289 வரை பின்னூட்டங்கள் கிடைத்துள்ள ஒரு சில பதிவுகளை மட்டும் அவற்றின் பின்னூட்ட எண்ணிக்கைகளுடன் இங்கு பட்டியலிட விரும்புகிறேன்:
http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
(289 Comments)
http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html
(237 Comments)
http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html#comment-form
(236 Comments)
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
(226 Comments)
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
(220 Comments)
http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
(204 Comments)
http://gopu1949.blogspot.in/2012/09/blog-post.html
(198 Comments)
http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html
(190 Comments)
http://gopu1949.blogspot.in/2012/10/blog-post.html
(185 Comments)
http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html
(183 Comments)
http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html
(179 Comments)
http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html
(174 Comments)
http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html
(167 Comments)
http://gopu1949.blogspot.in/2012/07/blog-post_06.html
(162 Comments)
http://gopu1949.blogspot.in/2013/01/blog-post.html
(152 Comments)
http://gopu1949.blogspot.in/2011/12/blog-post.html
(151 Comments)
http://gopu1949.blogspot.in/2013/02/2.html
(147 Comments)
http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html
(147 Comments)
http://gopu1949.blogspot.in/2013/04/9.html
(146 Comments)
http://gopu1949.blogspot.in/2013/03/4.html
(140 Comments)
http://gopu1949.blogspot.in/2013/03/1.html
(137 Comments)
http://gopu1949.blogspot.in/2013/09/52.html
(132 Comments)
-=-=-=-=-
101 முதல் 125 வரை பின்னூட்டங்கள் கிடைத்துள்ள பதிவுகளும் நிறையவே உள்ளன. அவை பற்றிய மேலும் விபரங்கள் + இணைப்புகள் இதோ இவ்விரு பதிவுகளில் உள்ளன.
http://gopu1949.blogspot.in/2015/03/5.html
http://gopu1949.blogspot.in/2015/03/6.html
-=-=-=-=-
51 முதல் 100 வரை பின்னூட்டங்கள் கிடைத்துள்ள பதிவுகளும் மிக அதிகமாகவே உள்ளன. அவை பற்றிய மேலும் விபரங்கள் + இணைப்புகள் இதோ இந்த நான்கு பதிவுகளில் உள்ளன.
http://gopu1949.blogspot.in/2015/03/1.html
http://gopu1949.blogspot.in/2015/03/2.html
http://gopu1949.blogspot.in/2015/03/3.html
http://gopu1949.blogspot.in/2015/03/4.html
-=-=-=-=-
49 பின்னூட்டங்களுக்குள் கிடைத்த பதிவுகளே இங்கு காட்டப்படாத மற்ற அனைத்துப் பதிவுகளும் ஆகும்.
பின்னூட்டம் ஏதும் கிடைக்காத பதிவுகள் என்று எதுவுமே என் வலைத்தளத்தினில், இதுவரை இல்லை என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)
>>>>>
பதிவுலகில் இதுபோன்ற என் தொடர் வெற்றிகளுக்குக் காரணம், தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகள் பலரும், என் பதிவுகளை முழுமையாகப் படித்து, ரசித்து, போட்டி, பொறாமை, கடுப்புகள், ஏதுமின்றி, ஆத்மார்த்தமாகவும், மிகத்தரமாகவும், மாறுதலாகவும், வித்யாசமாகவும், விரிவாகவும் எனக்கு அளித்துள்ள மிகச்சிறப்பான பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம் மட்டுமே.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அதற்கான என் ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>
//இந்த வகையில் பதிவின் தரவுகள் குறித்து
முழுமையான தகவல் தர முடிந்த பதிவர்கள்
அவர்களுக்குத் தெரிந்து அதிகப் பின்னூட்டங்கள்
பெற்றப் பதிவுகள் இருந்தால் பதிவிடலாமே//
இது மிகவும் கஷ்டமான வேலையாகும். யாரும் இதையெல்லாம் பொறுமையாகக் கணக்கிட்டுச் சொல்வது என்பது மிகவும் கடினமாக இருக்கக்கூடும்.
அந்தந்த பதிவர்களே தங்களின் வலைத்தளத்தினை ஆராய்ந்து என்னைப்போல, நான் மார்ச் 2015-இல் கொடுத்துள்ளதுபோல, புள்ளிவிபரங்களை புட்டுப்புட்டு வைத்தால் மட்டுமே உண்டு.
இதற்கெல்லாம் மிகப்பொறுமையும், திறமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் அவர் இதில் உண்மையிலேயே சாதனை படைத்தவராக இருந்தால் மட்டுமே இதனைத் துணிந்து ஏற்று செய்து, பிறருக்கு பெருமையாக எடுத்துச் சொல்ல இயலும்.
>>>>>
7
//அது அந்தப் பதிவுகளைப் படிக்கவும் அந்தப் பதிவரைத் தொடர இணைப்பினை ஏற்படுத்திக் கொள்ளவும் வசதியாய் இருக்கும் தானே ?//
நிச்சயமாக இருக்கக்கூடும். தங்களின் ஆலோசனை மிகச்சிறந்ததுதான். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
>>>>>
8
இந்தத் தங்களின் பதிவினில் எனக்கு ஆதரவாகக் கருத்தளித்துள்ள அன்புள்ளங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
என்றும் அன்புடன் VGK
ஆறு ஆண்டுகளாகத் தாங்கள் வலையுலகில் எழுதிவருவதற்கு முதலில் வாழ்த்துகள் சார். ஆம் வைகோ சாருக்குத், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் அவர் இல்லை என்றாலும், பின்னூட்டங்கள் வருவது தனிச் சிறப்புதான். அதுவே வலையுலகில் அவரது பெருமையைச் சொல்லிவிடுகின்றது. தற்போது அவரது ஊக்கம் நிறைந்த பின்னூட்டங்கள் எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளிக்கின்றது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.
டிடி யின் பதிவுகளும் தரம்வாய்ந்தவையே. அது போன்று தமிழ் இளங்கோ ஐயா அவர்கள். இன்னும் பலர் உள்ளனர் சார் தரமான பதிவுகள் எழுதுபவர்கள்... நகைச்சுவையில் மிளிர்பவர்களும் உள்ளனர். ஆனால் தற்போது பதிவுகள் பார்வையிடல் என்பது இருந்தாலும் பின்னூட்டங்கள் இடுவது என்பது குறைந்துள்ளது என்றே தோன்றுகின்றது.
நல்ல ஆலோசனையும் கொடுத்துள்ளீர்கள்.
சார் ஒரு சிறிய வேண்டுகோள் தங்கள் பதிவுகளை மின் அஞ்சலில் பெற மின் அஞ்சல் சப்ஸ்க்ரிப்ஷன் வைக்க முடியுமா சார். பல சமயங்களில் நாங்கள் வரும் சமயம் பதிவுகள் கீழே சென்று விடும் போது விடுபட்டு விடுகின்றது என்பதால்...மிக்க நன்றி சார்
வாழ்த்துகள் சார்,
வை கோ அய்யாவின் பின்னூட்டங்களே தனித்தன்மை வாய்ந்தவை. மிக ஆழமான பின்னூட்டமாக இருக்கும். அதிலும் சில வரிகளைக் குறிப்பிட்டு அதை விமர்சித்திருப்பார். அதுவும் அருமையாக இருக்கும். அவரது சாதனையை யாரும் தொடுவது கடினமே.
எனக்கெல்லாம் 50 பின்னூட்டங்கள் வருவதே சாதனைதான். தில்லையகத்தார்கள் சொல்வதுபோல் பொதுவாகவே பின்னூட்டம் இடுவது குறைந்து வருவதாகவே படுகிறது.
சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் சார்.
திரு வைகை அய்யாவை தொடர்கிறேன்
திரு வைகை அய்யாவை தொடர்கிறேன்
திரு வைகை அய்யாவை தொடர்கிறேன்
அவர் பதிவுலக ஜாம்பவான்...பின்னூட்டங்களும் கதை படிக்கும்.
வணக்கம்
ஐயா
நல்ல யோசனைதான்... வைகோ ஐயாயாவின் ஒவ்வொரு பதிவும் வித்தியாசமானவையாகவும் படிப்பதற்கு இனிமையாகவம் இருக்கும். இதைப்போன்றுதான் தங்களின் பதிவும் ஐயா நானும் இயன்றளவு பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டுத்தான் வருகிறேன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வெங்கட் நாகராஜ் said...
//அவரது பதிவுகளில் பின்னூட்டங்கள் அதிகமாக வரும். அவரது பதில்களும் 231-ல் உண்டு.//
நம் திரு. ரமணி சார் சுட்டிக்காட்டியுள்ள பதிவுக்கு (http://gopu1949.blogspot.in/2015/12/100-2015.html ) நம் நெருங்கிய நண்பரான இந்த வெங்கட்ஜி உள்பட, பலர் இன்னும் வருகை தரவே இல்லை.
அவர்கள் அனைவரும் வழக்கம்போல வருகை தந்திருந்தால் இந்த 231 என்ற எண்ணிக்கை 321 எனக்கூட ஆகியிருக்கும். :)
என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் இதுவரை வருகை தந்துள்ளோர், இதுவரை வருகை தராதோர் பற்றிய புள்ளிவிபரங்கள் யாவும் என் விரல் நுனியில் எப்போதுமே உள்ளன என்பதும் என்னுடைய தனிச்சிறப்பாகும் என்பதையும் அனைவருக்கும் இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் யாரையும் என் பதிவுப்பக்கம் வருகை தரச்சொல்லி கட்டாயப்படுத்துவதும் இல்லை.
என்னிடம் Specific ஆக விரும்பிக்கேட்டுள்ள ஒருசிலருக்கு மட்டும், அதுவும் ஜஸ்ட் ஒரு தகவலுக்காக மட்டும், அதுவும் எப்போதாவது என் நினைவுக்கு வந்தால் மட்டும், என் புதிய பதிவுக்கான இணைப்புகளை நான் மெயில் மூலம் அவர்களுக்கு சமயத்தில் முன்பெல்லாம் அனுப்பி வைத்தது உண்டு.
பதிவுகளைப் போலவே பின்னூட்டங்களுக்குப் பதிலளிப்பதிலும் சிறப்பு கொடுப்பவர் கோபால் சார் அவர்கள்.
எல்லார் பதிவுகளிலும் இருக்கும் சுவாரசியத் தன்மையைக் குறிப்பிடுவதோடு பிடிக்காத சிலது இருந்தால் நாகரீகமாகக் குட்டவும் செய்வார் :)
அதிகப் பின்னூட்டம் பெற்ற படைப்புகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ரமணி சார்
ஆஹா! நல்ல யோசனை ஐயா.
நான் பல பதிவுகளைப் படித்தாலும் அப்போதைய நேரமின்மை காரணமாகப் பின்னூட்டம் இட முடியாமல் பிறகு மறந்துவிடும். நமது பின்னூட்டம் பொறுத்தே நமக்கும் வருகிறது என்று நினைக்கிறேன் ஐயா.
வைகோ ஐயாவின் சாதனைக்கு அவருக்கு வாழ்த்துகள்!
பதிவுலகில் பெரும் சாதனையாளரான கோபு சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள். அவரையும் அவருடைய சாதனையையும் இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றி ரமணி சார். கோபு சாரின் பின்னூட்டங்கள் பெருகுவதற்குக் காரணம் பின்னூட்டமிட்ட ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக அவர் பெரியதொரு பதில் தருவதும் அப்பதில் ஏனோ தானோ என்றில்லாமல் அர்ப்பணிப்புடன் இருப்பதும்தான் என்று நினைக்கிறேன். பின்னூட்டங்களைக் கணக்கெடுத்து அவற்றை முறைப்படுத்தித் தொகுத்து பதிவில் வெளியிட்டு சிறப்பிப்பதும் அவரது பதிவுகளில் வாசகர்களின் எண்ணிக்கையும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் காரணம். அவரிடமிருந்து நாம் கற்கவேண்டியவை பல உண்டு.
Post a Comment