எளிமையாகத் தோற்றமளிப்பவர்கள்
அடக்கமாகப் பேசுபவர்கள்
இவர்களுக்குப் பின்னே மிகப் பெரும்
சாதனைச் சரித்திரம் இருக்கும் என்பது
எனது அனுபவம்.
அந்த வகையில் வை.கோ அவர்களைப் பற்றிய
பதிவில் பின்னூட்ட மிட்டவர்களில்
பதிவர் தேனம்மை லெட்சுமணன் அவர்களும்
மிகச் சாதாரணமாக அதிகப் பின்னூட்டம்
பெற்றவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி
சார் என மட்டும் பின்னூட்டமிட்டிருந்தார்.
பதிவுலகில் 2009 இல் இருந்து இன்றுவரை
ஒரு நிலையான இடத்தில் இருப்பவர்
அவர் என்பது சிலருக்குத் தெரியும்.
ஆனால் உண்மையில் இத்தனைச்
சாதனைக்குச் சொந்தக்காரர் என்பது
எத்தனை பேருக்குத் தெரியும்
இவர் எழுதியுள்ள பதிவுகளின்
மொத்த எண்ணிக்கை 1800 க்கும் மேலே
இவரின் பதிவினைத் தொடர்பவர்கள்
680 க்கும் மேலே
இவரது பதிவினைப் பார்வையிட்டவர்களின்
எண்ணிக்கை ஐந்து இலட்சத்திற்கும் மேலே
கதை ,கட்டுரை, விமர்சனம், கவிதை
சமையல் குறிப்பு என இவர் எழுத்தில்
இவர் தொடாத இலக்கியப் பகுதிகளே
நிச்சயம் இல்லை
ஜி + இல் இவர் பகுதியில் இணைந்தவர்கள்
ஏறக்குறைய 2300 க்கும் மேலே
பக்கப் பார்வையாளர்களின் எண்ணிகையை
நிச்சயம் மிகச் சரியாக யாரும்
யூகிக்கவே முடியாது
(வேண்டுமானால் யூகித்துவிட்டுப் பின்
சரியா என சோதித்துப் பாருங்களேன் /postshttps://plus.google.com/102047366403381778289/posts
இத்தகைய அளப்பரிய வலைத்தள
சாதனையாளர் எழுதுகிற வலைதளத்தில்
நானும் ஏதோ ஒரு ஓரத்தில் பதிவர் என குப்பைக்
கொட்டிக் கொண்டிருப்பதே எனக்கு மிகப்பெரிய
சாதனையாகப் படுகிறது
பெருகட்டும் அவரது சாதனைப் பட்டியல்
வளரட்டும் அவரது பன்முகத் திறன்கள் என
என் சார்பாகவும் உங்கள் அனைவரின் சார்பாகவும்
அவரை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்
35 comments:
ஹை தேனக்கா பற்றிய தேனான பதிவு! நன்றி ஐயா.
அக்காவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
நானும் உங்களோடு 'சாதனைப் பெண்'தேனம்மை அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள்/
முதலில் உங்களுக்கு ஒரு பாராட்டுகள் ரமணி.மற்றவர்களை பாராடுவதற்கும் ஒரு மனம் வேண்டும் அதற்காக .மேலும் மேலும்
சாதனைகள் படைக்க தேனம்மை லெட்சுமணன்
அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் .
கரிகாலன்
ஆஹா நல்ல பதிவரை அறிமுகப்படுத்திய தங்களுக்கும், அவருக்கும் வாழ்த்துக்கள்,,
தேனம்மை லட்சமணன் அவர்களின் பதிவுகளை கண்டு நானும் ஆச்சரியப் பட்டதுண்டு. ஒரேநாளில் இரண்டு மூன்று பதிவுகளை பதிவிடுவது அதுவும் தினமும் அதை தொடர்வது என்று பிரமிக்க வைக்கும் ஒரு சாதனையாளர். சகோவுக்கும் அவரை இனிமையாக அறிமுகப்படுத்திய தங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
த ம 3
தேனம்மை சகோவின் பதிவுகள் பிரமிக்க வைக்கும். பல பதிவுகள் வந்து கொண்டே இருக்கும். நாங்களும் அவரைத் தொடர்பவர்கள். அவரின் சாதனை அதுவும் பல வேலைப்பளுவிற்கு இடையில் மிகப்பெரிய சாதனையே!! அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! இங்கு நீங்கள் பகிர்ந்ததற்கும் வாழ்த்துகள்!!
அடடே! ஜாம்பவானுக்குப் பெண்பால் ஜாம்பவானியா? புதுசா இருக்கே? சகோதரி தேனம்மை பற்றிய புதுமையான அறிமுகம்! இருவருக்கும் வாழ்த்தும், வணக்கமும்.
ஜாம்பவானிதான். அவரது பதிவுகளைப் படிப்பவர்களில் நானும் ஒருவன். நன்றி.
ஹனி மேடம் ஓர் ஆச்சர்யமான பதிவர்தான். கவிதைகள், கதைகள், கட்டுரைகள், கட்டடங்கள், கலைகள், கோலங்கள், கோயில்கள், சமையல் கலை, பயணங்கள் என ஷேர் மார்க்கெட் உள்பட இவர் தொடாத சப்ஜெக்ட்களே ஏதும் இல்லை என்று சொல்லலாம்.
இவரைப்பற்றி என் பார்வையில் ஒருசில பதிவுகளில் சொல்லியிருக்கிறேன். என் நினைவுக்கு உடனே வந்தவை:
http://gopu1949.blogspot.in/2015/10/blog-post_31.html
http://gopu1949.blogspot.in/2015/06/6.html
அவர்களின் வலைத்தளத்தில் நானும் ஒருநாள் ஓர் பேட்டி அளித்துள்ளேன்:
http://honeylaksh.blogspot.in/2014/05/blog-post_10.html
தன் பதிவுக்கு வரும் பின்னூட்ட எண்ணிக்கைகளைப் பற்றியெல்லாம் கவலையே படாமல், தினமும் ஓரிரு பதிவுகள் வீதம் மிக உற்சாகமாகக் கொடுத்துக்கொண்டே இருப்பவர், நம் அன்புக்குரிய ஹனி மேடம் அவர்கள்.
வலைப்பதிவு மட்டுமல்லாமல் ஃபேஸ்புக் போன்ற இன்னும் எத்தனை எத்தனையோ இடங்களில்
’சு ம் மா’ க் கலக்கி வருபவர்.
இவரின் ஆக்கங்கள் இடம்பெறாத பிரபல பத்திரிகைகளே தமிழ்நாட்டில் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.
என் பெரும்பாலான பதிவுகளுக்கும் அவ்வப்போது வருகை தந்து பின்னூட்டமிட்டு மகிழ்வித்துள்ளார்கள்.
இப்போது சமீபகாலமாக இவரின் அனைத்துப்பதிவுகளை ரசித்துப்படித்து பின்னூட்டமிட்டுக்கொண்டு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.
ஜாம்பவானியான மிகச்சிறப்பான சாதனைப்பெண்மணியைப் பற்றி தங்கள் பதிவினில் இங்கு சிறப்பித்துச் சொல்லியுள்ளது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள், Mr. Ramani, Sir.
அன்புடன் VGK
தேனம்மை லக்ஷ்மணனைப் பதிவுலகில் அறிமுகம் ஆகும் முன்னரே குமுதம் பக்தி மூலமாக அறிவேன். அவரைக் குறித்த இந்தப் பதிவுக்கு வாழ்த்துகள். தேனம்மைக்குப் பாராட்டுகள்.
புன்னகை அரசிக்கு வாழ்த்துகள்...
அந்த அம்மாள் எழுதுவது பெரும்பாலும் "சுய விளம்பர" "தன் முன்னிலைப் படுத்தும் குப்பைகள் தான் ! எழுத்துக் குப்பைகளை எவ்வளவு விசினாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை. வாசிப்புச் சூழல் அசுத்தமாவது தான் ஒரே சாதனை. முடிந்தால் அவர் தரமாக எழுதட்டும் அல்லது எழுத கற்றுக்கொள்ளட்டும்.
வாழ்த்துக்கள்/
அஹா சந்தோஷ அதிர்ச்சியளித்த உங்களுக்கு நன்றி ரமணி சார். என்ன சொல்வதென்றே தெரில. சிறப்பான அறிமுகத்துக்கு என்ன நன்றி சொல்வது. எழுதிக்கொண்டே செல்கிறேன் அவ்வளவுதான் சார். நீங்க சிறப்பான பதிவர் என்பது தெரியும். உங்கள் வலைத்தளத்துக்கு மிகக் குறைவாகவே வந்து பின்னூட்டமிட்டிருக்கும் போதிலும் என்னைப் பற்றி இவ்வளவு சிறப்பித்துச் சொன்னமைக்கு என்ன செய்யப் போகிறேன். என் அன்பும் நன்றியும் வாழ்த்தும் என்றும் உரித்தாகட்டும் சார் :)
வணக்கம்
ஐயா
தேனம்மை லெட்சுமணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேனான கமெண்டுக்கு மிக்க நன்றி தேன்மதுரத் தமிழ் க்ரேஸ் :)
உங்கள் வாழ்த்துக்கு நன்றி தமிழ் இளங்கோ சார் !
நன்றி விமலன்
சரியாகச் சொன்னீங்க கரிகாலன். வழிமொழிகிறேன். நன்றி கரிகாலன் & ரமணி சார் :)
நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் :)
இனிமையான வாழ்த்துக்கு மிக்க நன்றி எஸ் பி செந்தில் குமார் சகோ :)
வேலைப் பளுவிற்கிடையே சாதனை செய்தவர்கள் எனக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)
மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா :)
அஹா மிக்க நன்றி ஜம்பு சார் :)
விவரமான பின்னூட்டத்துக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கும் நன்றி விஜிகே சார் :)
மிக்க நன்றி கீத்ஸ் மேம் !
மிக்க நன்றி டிடி சகோ :)
அஹா பாராட்டுக்களுக்கிடையில் விமர்சனம் வித்யாசம்
இருந்தும் அதை பாசிட்டிவாகவே எதிர்கொள்கிறேன் கோபாலன் சார். சுய விளம்பரம் சுய ஊக்கம் கொடுப்பதற்காக எடுத்துக் கொள்வது. அது அதிகப்படியாகிவிட்டது போல் தெரிகிறது.ஓகே. என்னுடைய பதிவுகள் அனைத்தையும் படிக்க வேண்டுகிறேன். பல கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதி இருக்கிறேன்.அவற்றில் எல்லாம் சுய விளம்பரம் இல்லை என நினைக்கிறேன். :)
பத்ரிக்கைகளில் வந்தவற்றைப் பெருமையுடன் பகிர்வேன். ஒருவேளை அவை தண்டோரா அடிப்பது போலத் தோன்றுகிறது போல. இனி குறைத்துக் கொள்ளலாம். வளர்ந்தவர்கள்தான் விமர்சனத்தைச் சந்திப்பார்கள் என்பதை உண்மையாக்கிய உங்களுக்கு நன்றி :)
நன்றி கவிதா :)
நன்றி ரூபன் சகோ :)
சாதனை அரசி. பாராட்டப்பட வேண்டியவர். பல்கலை வித்தகி.
தோழி தேனம்மையின் எழுத்தை அண்ணாந்து வியக்கும் வாசகி நான். அவருடைய எழுத்தாற்றல் மிக அற்புதமானது. அவருடைய சிறப்பை பறைசாற்றும் பதிவுக்கு நன்றி ரமணி சார். தோழிக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
Thanks Sriram. NHM writer work panala.
Thanks Geeths :)
Againg thanks Ramani sir. :)
நல்லதோர் பதிவர். அவருடைய பல பதிவுகளைப் படித்து, ரசித்திருக்கிறேன். ஒரே நாளில் மூன்று பதிவுகளை வெளியிடும் அவரது உழைப்பு அசர வைக்கும் ஒன்று.
வாழ்த்துகள் தேனம்மை சகோ.
Post a Comment