Tuesday, May 10, 2016

தேர்தல்-----சில உண்மைகள்

 1 )ஆட்சியில் இருந்த கட்சிகள் மீதுதான் ஊழலும்
     ஊழல் குற்றச்சாட்டுகளும் இருக்கச் சாத்தியம்

   எனவே ஆட்சியில் இல்லாதவர்கள் புனிதமானவர்கள்
   எனக் கொள்ளச் சாத்தியம் இல்லை

2 ) எந்தக் கட்சியும் செலவழிக்க வசதி அற்றவரையோ
   தொகுதியில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள
   ஜாதிக்காரர்களையோ போட்டியில் நிறுத்துவதில்லை

   எனவே எந்தக் கட்சியும் ஜாதி மத உணர்வு அற்றது
   என எண்ண வேண்டியதில்லை

3 ) வீட்டிற்கு வெளியில் அரசு செய்ய வேண்டியது
   நிறைய இருக்க, அதற்குத்தான் அரசு என்பதே இருக்க
   வீட்டிற்குத் தேவையான இலவசங்கள்
   தருகிற சொல்கிற எந்தக் கட்சியும் மதிக்கத் தக்கதல்ல

   எனவே ஓட்டளிக்க அதை ஒரு காரணமாகக் கொள்ள
   வேண்டியதில்லை

4 ) மக்களின் எண்ணத்தையும்,தேவைகளையும் மிகச்
   சரியாக எந்தக் கட்சியும் பிரதிபலிக்காமல்
   போவதற்கான காரணமே
   குடும்ப அரசியிலும்,வாரீசு அரசியலுமே

   எனவே எந்தக் கட்சி ஆயினும்,
   குடும்ப உறுப்பினர் எனில்
   வாரீசுகள் எனில் தேர்ந்தெடுக்கத் தயங்குவோம்

5 ) ஏற்கென்வே வென்று தொகுதிக்கு நன்மை
    ஏதும் செய்யாதவர் மீண்டும் வென்று திருந்தி
    நனமைச் செய்யச் சாத்தியமே இல்லை

   எனவே அப்படிப்பட்டவர் எவருமிருப்பின் நிச்சயம்
   அவரைப் புறக்கணிப்போம்

6 ) ஜெயிக்க வாய்ப்பு இருக்கிற கட்சிக்கு
     ஓட்டளிக்க வேண்டும் இல்லையெனில்
     நம் ஓட்டு வீண் என்பதெல்லாம் பம்மாத்துப்
    பிரச்சாரம்

   அதற்காகத்தான் கருத்துக் கணிப்பு
   மாய்மாலம் எல்லாம்

   இந்தத் தேர்தலில் அதிகச் சதவீதம் பெறுகிறக் கட்சி
   நிச்சயம் அடுத்த முறை பிற கட்சிகளால்
   கவனிக்கவும் படும்

   மிகச் சரியாக தன் அரசியல் நடவடிக் கையைத்
  தொடருமாயின் நிச்சயம் அடுத்த முறை
  வெல்லவும் வாய்ப்பு இருக்கும்

   அரசியலே மோசம், போட்டி இடுபவர்கள் எல்லாம்
   மோசம் என ஓட்டளிக்காது இருந்து விட்டுப்
   பின்  வியாக்கியானங்கள் செய்பவர்கள்
  கொஞ்சம் அதிகம் படித்தவர்களும் நடுத்தர ,மற்றும்
   உயர்தர மக்களுமே.

   அந்த இருபது சதவீதம் நிச்சயம் முடிவைத்
   தலைகீழாக்கும் சாத்தியம் அதிகமே.
  அதற்கு டெல்லியே  நல்ல உதாரணம்

  மேலும் இம்முறை புதிய இளைஞர்களின்
 வாக்குகள் நிச்சயம் ஊழல் அரசியல் வாதிகளுக்கோ
.ஜாதி மத அரசியல் வாதிகளுக்கோ
  போக நிச்சயம் சாத்தியமில்லை

  கட்சி வாக்களர்களை மீறி, நடு நிலையாளர்களின்
 வாக்குகள் இந்தத் தேர்தலில் முடிவினைத்
  தீர்மானிக்கும்படியாக 100 % வாக்களிக்க முயல்வோம்

  நல்லதே நிச்சயம் நடக்கும்.

 நம்பிக்கையுடன் வாக்களிப்போம்

15 comments:

ஸ்ரீராம். said...

சொல்வதெல்லாம் உண்மை.

sury siva said...

//சொல்வதெல்லாம் உண்மை.''//

ஜீ டி.வி. மாதிரி பின் ஊட்டம் போடறீங்க.. !!

அவுரே
என்ன சொல்றார் நே புரியல்ல..

அம்மாவுக்கா , தாத்தாவுக்கா, கேப்டனுக்கா,
மாம்பழமா, தாமரையா,

எதுக்கு அய்யா போடனும் ?

சுப்பு தாத்தா.

ஸ்ரீராம். said...

யாருக்கு வோட்டுப் போடணும்னு அவர் சொன்னா போட்டுடுவீங்களா என்ன? பேசாமல் தேர்தலை ஒத்தி வைத்துவிடச் சொல்லலாமா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுப்பு தாத்தா அவர்களின் பின்னூட்டத்தில் ஏதோ முக்கியமான விஷயம் இருப்பதுபோலத் தெரிகிறது, ஸ்ரீராம். :)

sury siva said...

எதுக்கும் எங்கள் ப்ளாக் ரசிகர்கள் பொதுக்குழு ஒன்று கூட்டி அதில் யாருக்கு ஆதரவு தருவது என்று முடிவெடுத்தால் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

சுப்பு தாத்தா.

sury siva said...

// ஏதோ முக்கியமான விஷயம் இருப்பதுபோலத் தெரிகிறது//
தேர்தல் 16ம் தேதி தானே!!
அன்னிக்கு பூரம் நக்ஷத்திரம். மகத்திலேந்து 2 வது நக்ஷத்திரம்.
பூரத்திற்கு சுக்ரன் அதிபதி.

சுக்ரன் சிம்ம ராசிக்கு 9 லே மேஷத்திலே இருக்கிறார்.
குருவோட பார்வை வேற இருக்கு.

ச்ரமப்படும் ஆனாலும் சரியாயிடுமோ ?

சு தா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

@ sury Siva said...

//தேர்தல் 16ம் தேதி தானே!! ........//

ஆமாம். அதிலென்ன சந்தேகம்.

பல்வேறு ஜோஸ்ய ஆராய்ச்சிகள் செய்து இறுதியில் ஏதோ ஒரு நல்ல இறுதி முடிவுக்கு வந்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. மிக்க மகிழ்ச்சி. நான் இந்த ஜோஸ்ய ஆராய்ச்சிகள் ஏதும் செய்யாமலேயே, அதே அந்த நல்ல முடிவுக்கு எப்போதோ மிகச் சுலபமாக வந்து விட்டேன். :)

இருப்பினும் எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் இந்த ஜோஸ்யங்களில் (நம்பிக்கை இல்லாவிட்டாலும்) ஞானம் உண்டு. அதனால் தாங்கள் சொல்லியுள்ள இரண்டாம் நக்ஷத்திரம், அதன் அதிபதியான சுக்ரன், அவரின் மேல் விழும் குரு பார்வை என எல்லாமே அந்த யாரோ ஒருவருக்கு மட்டுமே மிகவும் ஃபேவரபிள் ஆக உள்ளது எனத் தெரிகிறது.

பார்ப்போம் .... முடிவு தெரிய இன்னும் ஒன்பதே நாட்கள் உள்ளன.

‘சர்வோ ஜனா சுகினோ பவந்து!’

sury siva said...

ஜோசியம் சொல்லறேன் அப்படின்னா அதுலே நம்பணும் அப்படின்னு அர்த்தம் உண்டா என்ன?

எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். இப்படி நடக்கலாம் அப்படின்னு ..

எது எப்ப எப்ப எப்படி எப்படி நடக்கும் நடக்கணும் அப்படிங்கறத
பகவான் நா முடிவு பண்றார்.

பலானி கிரகசாராணி சூச்சயந்தி மநீஷனஹா
கோ வா தாரதம்யச்ய தமேகம் வேதசம் வினா.

அப்படின்னு ப்ருஹத் ஜாதகத்திலே சொல்லி இருக்கே.

ஸோ ஐ ஆம் நோ படி.

இருந்தாலும்,
மலைக்கோட்டை மாணிக்க வினயாகர் கோவில் லே ஒரு தேங்காய்
உடைக்கும்போது பல சில்லா உடையறது.
சுக்கு சுக்கா போகும்போது,
யாருக்கு சின்ன சில்லு, யாருக்கு பெரிய சில் அப்படிங்கறது
தேங்காய் உடையறதுக்கு முன்னாடி யாருக்குத் தெரியும் ?

சுப்பு தாத்தா.

Unknown said...

முருகா, சுப்பு தாத்தா கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்துடாப்பா.முடியல.

sury siva said...

vanthutten. vanthutten.

www.kandhanaithuthi.blogspot.com

G.M Balasubramaniam said...

என்னதான் சிந்தித்து முடிவெடுக்க விரும்பினாலும் வாக்களிக்கும் நேரத்தில் நம் கை ஏதோ ஒரு பட்டனை அழுத்திவிடும் சாத்தியமே அதிகம் தேர்தல் ஒரு லாட்டரி

வை.கோபாலகிருஷ்ணன் said...

sury Siva said...

//ஜோசியம் சொல்லறேன் அப்படின்னா அதுலே நம்பணும் அப்படின்னு அர்த்தம் உண்டா என்ன?//

தாங்கள் சொல்லும் ஜோஸ்யத்தை மட்டும், நான் நம்பவில்லை என்று சொல்லவே இல்லை.

பொதுவாக ஜோஸ்யத்தை நம்புபவன் அல்ல நான் என்று தான் சொல்லியுள்ளேன். மீண்டும் அதனை தயவுசெய்து ஊன்றிப் படிக்கவும்.

ஆனால் தாங்கள் இங்கு மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ள வெற்றி வாய்ப்புக்கு உரியவர் மட்டுமே வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதே என் கருத்தாகவும் உள்ளது.

//எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். இப்படி நடக்கலாம் அப்படின்னு ..//

தாங்கள் நினைப்பதே நடக்கட்டும். அதில் எனக்கும் எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை.

//ஒரு தேங்காய் உடைக்கும்போது பல சில்லா உடையறது. சுக்கு சுக்கா போகும்போது, யாருக்கு சின்ன சில்லு, யாருக்கு பெரிய சில் அப்படிங்கறது
தேங்காய் உடையறதுக்கு முன்னாடி யாருக்குத் தெரியும்?//

எனக்கென்னவோ இது சுக்கு நூறாக உடைந்து போகாத முழுக் கொப்பரைத் தேங்காயாக மட்டுமே இருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது.

அந்த முழுக்கொப்பரையும் ஒருவருக்கே கிடைத்து விடும் வாய்ப்பே அதிகம் என்றும் தோன்றுகிறது.

ஆனாலும் ஒன்று ....... மீதி அனைவருக்கும் கொட்டாங்கச்சி நிச்சயம் உண்டு.

sampath.g said...

கெட்டது நடக்கும் போது(தேர்தல் )நல்லது சாத்தியம் இல்ல ...

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டங்கள்! படிக்கப்படிக்க சுவாரஸ்யம்!

வெங்கட் நாகராஜ் said...

பதிவும் பின்னூட்டங்களும் ஸ்வாரஸ்யம்.... பொறுத்திருந்து பார்க்கலாம்....

Post a Comment