Saturday, May 14, 2016

தேர்தல் முடிவு- சார்பு அற்றக் கணிப்பு

செய்தி என்பதற்கு ஆங்கிலத்தில்
நியூஸ் ( NEWS ) என்பதை நான்கு திசைகளில்
நடக்கும் நிகழ்வுகளைத்
தொகுத்துத் தருவதுதான் என்பார்கள்.

இப்போது செய்தித்தாள்கள் எவையும்
அப்படிக் கிடைகிற செய்திகளைக் கிடைக்கிறபடி
அப்படியே தொகுத்துத் தருவதில்லை .
மாறாக தன் கருத்தை(VIEWS )
அதில் லேசாகத் திணித்து சரியாகத் தருவதுபோல்
பாவனைதான் செய்கிறார்கள்

அதைப் போலத்தான் தேர்தல் காலங்களில்
கருத்துக் கணிப்பு என்கிற பெயரில் தங்கள்
கருத்துத் திணிப்பைத்தான் செய்கிறார்களே ஒழிய
நிஜமான மக்கள் கருத்தைத் தொகுத்துத்
தருவதில்லை

இதற்கு தொலைக் காட்சி நிறுவனங்களும்
விதி விலக்கானவைகள் இல்லை

அவர்கள் பின்னால் தேர்தல் முடிவுகள்
தங்கள் கணிப்புக்கு மாறுபட்டு இருப்பின்
தப்பித்துக் கொள்ளும்படியாக, முடிவு
சொல்லாதவர்கள்,குழப்பத்தில் உள்ளவர்கள்,
இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பவர்கள்
எனும்படியாக அதில் குறிப்பிட்ட சதவீதத்தினரை
வேண்டுமென்றே சேர்த்து வைத்திருப்பார்கள்

நாளை அந்த சதவீதத்தை எந்த  ஜெயித்த
பக்கம் சேர்த்தாலும்  நிச்சயம்
அவர்கள் கணித்தது மிகச் சரி என்பதைப்
போல்தான் இருக்கும்

( கடைசியாக வந்த கருத்துக் கணிப்பில் கூட
இழுபறி எண்ணிக்கை   75 )

எனவே அவைகளை வைத்து நாம்
முடிவு எடுக்க வேண்டியதில்லை

எந்தத் கணிப்பையும் சாராது
எந்த மத ஜாதி அபிமானத்திலும் சாராது
மிகக் குறிப்பாக பணத்திற்கு விலைபோகாது
நம் மனம் கட்சிகளையும் , தலைவர்களையும்
கணித்தபடி வாக்களிப்போம்

நம் கணிப்பே மிகச் சரியானக்  கணிப்பாக
இருக்கும்

நிச்சயம் அந்தக் கட்சியே வெல்லும்
அதுவே ஆட்சி பீடமும் ஏறும்

வாழ்த்துக்களுடன்....

10 comments:

சிவகுமாரன் said...

ஆமாம்.
நல்லவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்போம்.

சிவகுமாரன் said...

அவர்கள் எந்தக் கட்சியாயினும்.

Unknown said...

Please don't vote for DMK - the highly corrupted party in the world,,,

சீராளன்.வீ said...

நல்லதே நடக்க வேண்டுகிறேன் ஐயா
வாழட்டும் எம்மினம் வறுமைகள் ஒழித்து !

Anonymous said...

இந்த தேர்தல்முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பு எல்லாம் இப்ப கூடாது.
மே 19ந் தேதிக்கு பின் தான் மக்களின் மன நிலை தெளிவாகத்
தெரிய வரும்.

இப்போதைக்கு மூச்..சைலன்ஸ் ப்ளீஸ்.

இங்க்லீஷ் எழுத்துக்களில் எதுக்கு அப்புறம் எது வரது என்று ஒரு கிழம் நேற்று ஒரு எக்குத் தப்பா ஒரு கேள்வி கேட்டது.

புரியல்லையே என்றேன்.

இங்க்லீஷ் லே 26 எழுத்துக்கள் இருக்கா ? அதை வரிசையா சொல்லுங்க ...எது முன்னாடி வருது ? எது பின்னாடி வருது ?

யோசித்துப் பார்த்தேன்.

ஏ தான் முதலில் வருது. என்றேன்.

அப்பறம் ?

அதை அப்பறம் சொல்றேன் என்று
நடையைக் கட்டினேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எந்த ஊடகமாயினும் தங்கள் சொந்தக கருஹ்தியா இணைத்தே முடிவுகளை சொல்கிறார்கள். பார்ப்போ, இன்னும் சில தினங்கள்தானே உள்ளன. தெரிந்து விடும் கோட்டைத் தொடுவது யார் என்றும் கோட்டைவிடுவது யார் என்றும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எந்த ஊடகமாயினும் தங்கள் சொந்தக கருஹ்தியா இணைத்தே முடிவுகளை சொல்கிறார்கள். பார்ப்போ, இன்னும் சில தினங்கள்தானே உள்ளன. தெரிந்து விடும் கோட்டைத் தொடுவது யார் என்றும் கோட்டைவிடுவது யார் என்றும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நம் கணிப்பே சரி என்ற கணிப்பு உண்மைதான் ஐயா.

G.M Balasubramaniam said...

இப்போது இருக்கும் நிலையில் தலைவர்களைக் கொண்டே ஒரு அமைப்பு தீர்மானிக்கப் படுகிறது அவர்களும் இரண்டாம் வரிசை என்று யாரையும் உருவாக்குவதில்லை. அதை நாம்தான் உருவாக்க வேண்டும் எந்த அமைப்பு வந்தாலும் இந்தத் தலைவர்கள் வேண்டாம் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் எந்த அமைப்பு வந்தாலும் இப்போதைய தலைவர்கள் இல்லாவிட்டால் சரியாக இயங்க வாய்ப்பு உள்ளது

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு..... த.ம. +1

Post a Comment