"வரப்புயர "
எனச் சொல்லிப் பின்
அதன் காரணமாய்
நீர் உயரும்
நெல் உயரும்
குடி உயரும்
கோன் உயரும்
எனச் சொன்ன
ஔவையைப் போல்
"மது ஒழிய "
நிச்சயம்
அதன் காரணமாய்
மடி ஒழியும்
மடிமை ஒழியும்
மடமை ஒழியும்
மிடிமை ஒழியும்
அதற்காகவேனும்
அதற்காக மட்டுமேனும்
அடர்ந்த இருள்
இன்றோடு
விலகி ஒழியட்டும்
கிழக்கில் ஒளி
மெல்ல எழுந்துப்
படர்ந்து விரியட்டும்
( மடி--நோய்,,மடிமை ..சோம்பல்
மடமை ..அறியாமை
மிடிமை...வறுமை
வார்த்தைகளுடன் சிநேகம்
கொள்ளும் நோக்குடனும் )
எனச் சொல்லிப் பின்
அதன் காரணமாய்
நீர் உயரும்
நெல் உயரும்
குடி உயரும்
கோன் உயரும்
எனச் சொன்ன
ஔவையைப் போல்
"மது ஒழிய "
நிச்சயம்
அதன் காரணமாய்
மடி ஒழியும்
மடிமை ஒழியும்
மடமை ஒழியும்
மிடிமை ஒழியும்
அதற்காகவேனும்
அதற்காக மட்டுமேனும்
அடர்ந்த இருள்
இன்றோடு
விலகி ஒழியட்டும்
கிழக்கில் ஒளி
மெல்ல எழுந்துப்
படர்ந்து விரியட்டும்
( மடி--நோய்,,மடிமை ..சோம்பல்
மடமை ..அறியாமை
மிடிமை...வறுமை
வார்த்தைகளுடன் சிநேகம்
கொள்ளும் நோக்குடனும் )
6 comments:
சூசகமாக சொல்லி விட்டீர்கள். நல்லதே நடக்க வேண்டும்
சூசகமாக சொல்லி விட்டீர்கள். நல்லதே நடக்க வேண்டும்
நல்லவர் நீங்கள்,தங்கள் எண்ணத்தில் இப்படி அவலம் கூறலாமா?
நல்லவர் நீங்கள்,தங்கள் எண்ணத்தில் இப்படி அவலம் கூறலாமா?
ஒளியை இலை மறைத்துவிட்டது தற்காலிகமாக!
நல்லதே நடக்கட்டும்....
Post a Comment