Saturday, May 28, 2016

சூட்சுமக் கோடே லெட்சுமணக் கோடு

கஞ்சத்தனத்திற்கும்
சிக்கனத்திற்கும் இடையில்
தாராளத்திற்கும்
ஊதாரித்தனத்திற்கும் இடையில்

பழக்கத்திற்கும்
நட்புக்கும் இடையில்
நட்புக்கும்
காதலுக்கும் இடையில்

விளக்கதிற்கும்
விவாதத்திற்கும் இடையில்
விவாதத்திற்கும்
பகைமைக்கும் இடையில்

வேண்டுதலுக்கும்
கோரிக்கைக்கும் இடையில்
கோரிக்கைக்கும்
போராட்டத்திற்கும் இடையில்

பொறுமைக்கும்
சகிப்பினுக்கு இடையில்
சகிப்பினுக்கும்
வெறுப்பினுக்கும் இடையில்

எதிர்பார்ப்பிற்கும்
ஆசைக்கும் இடையில்
ஆசைக்கும்
வெறித்தனத்திற்கும் இடையில்

அனுபவ உரைக்கும்
அறவுரைக்கும் இடையில்
அறவுரைக்கும்
அறிவுரைக்கும் இடையில்
.....................................
...........................................
மொத்தத்தில்

சிவப்புக்கும்
பச்சைக்கும் இடையில்
மஞ்சளாய் எச்சரிக்கும்
ஒரு சூட்சுமக் கோடே
லெட்சுமணக் கோடு

அதைக்
காணத் தெரிந்தவனுக்கு
கண்டுத் தெளிந்தவனுக்கு
அதன் பலம் அறிந்தவனுக்கு
என்றும் இல்லை கேடு

13 comments:

ஸ்ரீமலையப்பன் said...

அடடா !!!

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
அருமை
ஐயா
தம+1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புரிந்துகொள்வோர் பயனடைவர்.

ஜீவி said...

அனுபவம் படிப்பித்த கல்வியை ரசித்தேன்.

மனோ சாமிநாதன் said...

மிக அருமை!
துபாய் பயணம் என்னவாயிற்று?

தி.தமிழ் இளங்கோ said...

உண்மைதான் கவிஞரே! கோடு போட்டு நிற்கச் சொன்னால் சீதை நிற்கவில்லையே.... சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே... (ஒரு திரைப்படப்பாடல் வரிகள்)

G.M Balasubramaniam said...

இருந்தும் லக்ஷ்மணக் கோட்டை மீறுகிறவர்களே அதிகம்

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக அருமையாகச் சொல்லி விட்டீர்கள்.

Unknown said...

Very very Great Lines

சிவகுமாரன் said...

அனுபவப் பாடம் அருமை.
சிக்னல் உதாரணம் சிந்திக்க வைத்தது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை .கோடு இருப்பதை உணர்தல் நலம்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை .கோடு இருப்பதை உணர்தல் நலம்

V Mawley said...

"இருந்தும் லக்ஷ்மணக் கோட்டை மீறுகிறவர்களே அதிகம்"அது காலத்தின் கோலம் ..
மாலி

Post a Comment