வெள்ளையன்
கொள்ளையன்
அவனை விரட்டினால்
பாலும் தேனும் ஓடும்
என்றார்கள்
இப்போது நீருக்கே
திண்டாடுகிறோம்
தொழிற்புரட்சிக்குப் பின்
உற்பத்திப் பெருக்கத்தில்
எல்லாருக்கும் எல்லாம்
எளிதாய்க் கிடைக்கும் என்றார்கள்
வேட்டியிலிருந்து
கோவணத்திற்கு வந்து விட்டோம்
பசுமைப் புரட்சியில்
விளைச்சல் பெருக்கத்தில்
தன்னிறைவு
அடைந்துவிட்டோம் என்றார்கள்
கருப்பை கெட்டதைப்போல்
நிலம் விஷமானதே மிச்சம்
வெண்மைப் புரட்சியில்
பால் உற்பத்தியில்
உலகில் நாம்தான்
முன்னணி என்றார்கள்
மாட்டுத் தீவனமே
குதிரைக் கொம்பாகிப் போனது
ஜனநாயகமே
சிறந்த அரசியல் நெறி
தேர்தலே அதற்கு
அச்சாணி என்றார்கள்
தேர்தலில் சர்வாதிகளையே
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்
பிள்ளையார்ப் பிடிக்க
குரங்கான கதையாய்
எல்லாமே மாறுபட
காரணம் எதுவாயிருக்கும் ?
சுட்டுவிரல் எதை எதையோ சுட்ட
மடங்கிய மூன்று விரல்களே
நிஜம் காட்டுகிறது
கொள்ளையன்
அவனை விரட்டினால்
பாலும் தேனும் ஓடும்
என்றார்கள்
இப்போது நீருக்கே
திண்டாடுகிறோம்
தொழிற்புரட்சிக்குப் பின்
உற்பத்திப் பெருக்கத்தில்
எல்லாருக்கும் எல்லாம்
எளிதாய்க் கிடைக்கும் என்றார்கள்
வேட்டியிலிருந்து
கோவணத்திற்கு வந்து விட்டோம்
பசுமைப் புரட்சியில்
விளைச்சல் பெருக்கத்தில்
தன்னிறைவு
அடைந்துவிட்டோம் என்றார்கள்
கருப்பை கெட்டதைப்போல்
நிலம் விஷமானதே மிச்சம்
வெண்மைப் புரட்சியில்
பால் உற்பத்தியில்
உலகில் நாம்தான்
முன்னணி என்றார்கள்
மாட்டுத் தீவனமே
குதிரைக் கொம்பாகிப் போனது
ஜனநாயகமே
சிறந்த அரசியல் நெறி
தேர்தலே அதற்கு
அச்சாணி என்றார்கள்
தேர்தலில் சர்வாதிகளையே
தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்
பிள்ளையார்ப் பிடிக்க
குரங்கான கதையாய்
எல்லாமே மாறுபட
காரணம் எதுவாயிருக்கும் ?
சுட்டுவிரல் எதை எதையோ சுட்ட
மடங்கிய மூன்று விரல்களே
நிஜம் காட்டுகிறது
7 comments:
மஞ்சளையும், அரிசியையுமெ பேடண்டுக்கு வெளிநாட்டுக்குத் தாரை வார்ப்பவர்கள்தானே நாம்!
இலவசங்களுக்கு மதம் மாறி, இலவசமாக கல்வியையும் பெற்று இப்பொழுது இலவசமாக அரிசியும்,பருப்பும் பெற்று, "இலவசங்கள்" கேவலம் என்று நினைக்கும் போது. . அதை "விலையில்லா"....என்று சொல்லி தன்மாணத்தை விலை பேசும் மாக்கள் உள்ளவரை..............
இலவசங்களுக்கு மதம் மாறி, இலவசமாக கல்வியையும் பெற்று இப்பொழுது இலவசமாக அரிசியும்,பருப்பும் பெற்று, "இலவசங்கள்" கேவலம் என்று நினைக்கும் போது. . அதை "விலையில்லா"....என்று சொல்லி தன்மாணத்தை விலை பேசும் மாக்கள் உள்ளவரை..............
’மடங்கிய விரல்களே நிஜம் காட்டுகிறது...’
மிகவும் அருமையான தலைப்பு !
அனைத்து வரிகளிலும் உண்மை உள்ளன.
பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அருமை ஐயா! தொடரட்டும் தங்களது விழிப்புணர்வு கவிதைகள்!
கடைசி வரிகளில் உடன்பாடு என்றாலும் . நாம் முன்னேற வில்லை என்னும் கருத்தே அதிகமாகத் தெரிகிறது எதிர்பார்ப்புகள் கூடியதால் இன்னும் முன்னேறி இருக்கலாம் என்பதே சரிஅரை நூற்றாண்டுகளுக்கு முன் இருந்ததை விட நிச்சயமாக முன்னேறி இருக்கிறோம் நாம் முன்பு இருந்த நிலையை ஊன்றி நோக்கினால் தெரியும்
அருமையாகச் சொன்னீர்கள்....
த.ம. +1
Post a Comment