Sunday, May 8, 2016

பாடையில் பணம், செத்த வீட்டில் சுடுகாட்டில் பணம் பட்டுவாடா

ஒரு நல்ல பேச்சாளரை பேச்சாளராகவே
வைத்திருக்காதுத்
தலைவராகக் கொண்டாடியதால்தான்

கட்சியில் பிளவு எனச் சொல்லத்  தக்க அளவு
பெரும்போலோர் அவர் பின் வந்தும்
அவர்களைத் தங்கவைத்துக் கொள்ள இயலாது
இன்று மிகச் சிலருடன் கட்சி நடத்தும்
வை. கோ அவர்கள்


ஒருங்கிணைப்பாளர் என மக்கள் நலக் கூட்டணிச்
சொல்ல இப்போது தினம் அந்த வேலையையும்
ஒழுங்காகப் பார்க்காது.....

ஆயிரம் கோடி ஐநூறு கோடி பேரம்,
கண்டெய்னரில் கோடிக் கோடியாய்ப் பணம்
கலைஞரின் பூர்வீகத் தொழில்,
ரேசன் கடையில் பட்டுவாடா என

தினம் தினம் பேப்பரில் பெயர் வரவேண்டும்
என்பதற்காக ஒரு கமர்சியல் கதாசிரியரைப்போல
மூன்றாம்தரப் பேச்சாளரைப் போல
தினம் ஒரு கதை விட்டுக் கொண்டிருக்கிறார்

அவருக்கு உதவும் விதமாக
வித்தியாசமாக உங்களுக்கு ஏதும் ஐடியா
தோன்றினால் சொல்லலாம்

நிஜமாய் இருக்கவேண்டும் என அவசியமில்லை
பொய்யை நம்ப வைக்கவேண்டுமெனில் அதில்
கொஞ்சம் உண்மை இருக்கவேண்டுமென்பது போல
கொஞ்சம் " இருக்கலாமோ " என எண்ணும்படியாய்
ஒரு இடம் பொருள்  இருந்தால் போதும்

எனக்கொரு யோசனை தோன்றுகிறது

இன்னும் அனைவரும் அவரைக் கவனிக்க வேண்டுமெனில்
பாடையில் பணம், செத்த வீட்டில்
சுடுகாட்டில் பணம் பட்டுவாடா எனச் சொல்லலாம்

இரண்டு நாள் கழித்து
உண்மையில் செத்ததாகச் சொன்னவர்
சாகவே இல்லை, சுடுகாட்டில் இரண்டு நாளில்
எந்தப் பிணமும் எரிக்கப் படவில்லை
இதோ ஆதாரம் என போடோவைக் காட்டலாம்

அதன் மூலம் இன்னும் இரண்டு நாள்
மக்கள் அவரை நினைக்கும்படியாகச் செய்யலாம்

அவருக்காக  என் ஐடியா  எப்படி ?

7 comments:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான ஐடியாதான் சார்! மக்கள் நலக்கூட்டணி என்பதெல்லாம் வெத்து வேட்டு என்று இப்போது பலருக்கும் புரிந்திருக்கும்!

G.M Balasubramaniam said...

வைகோவின் போக்கு குறித்து எனக்கும் வருத்தம் உண்டு. எப்படி இருக்க வேண்டியவர் ....!

KILLERGEE Devakottai said...

வைகோ மாது எனக்கு நல்ல அபிமானம் இருந்தது உண்மையே.... அது ஒரு கனாக்காலம்
த.ம. 2

KILLERGEE Devakottai said...

மீது என்பது மாது என்று வந்து விட்டது மன்னிக்கவும் - கில்லர்ஜி

KILLERGEE Devakottai said...

கருத்துரை போட்டு விட்டு பார்த்தால் தமிழ் மணத்தை காணவில்லை மீண்டும் வருவேன்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இதுதான் அரசியல் என்று நாம் மனதைத் தேற்றிக்கொள்ளவேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

நன்கு வந்திருக்க வேண்டியவர். அரசியல் மோசமானதாகவே இருக்கிறது.

Post a Comment