அரசியல் வாதிகள் எல்லாம்
செவிடர்களா ?
இல்லை மடையர்களா ?
இல்லை நாம் தான் அப்படியா ?
"கல்வியில் கொள்ளையை ஒழியுங்கள்
கல்விக் கொள்கையை மாற்றுங்கள் "
என்றால்
கல்விக் கடன் தருகிறோம்
கல்விக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் "
என்கிறார்கள்
வேலைக்கு உத்திரவாதம் தாருங்கள்
வேலை வாய்ப்பைப் பெருக்குங்கள்
என்றால்
வேலைபெறாதோருக்கு உதவித் தொகை
வேலையற்றோரின் கடன் தள்ளுபடி
என்கிறார்கள்
நீர் நிலைகளைப் பராமரியுங்கள்
நீ ஆதாரத்தைப் பெருக்குங்கள்
என்றால்
பத்து ரூபாய்க்குக் குடி நீர்
கடல் நீரிலிருந்து குடி நீர்
என்கிறார்கள்
சாலைகளைச் சீர்ப்படுத்துங்கள்
சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துங்கள்
என்றால்
வாகனத்திற்கு மானியம்
பஸ் கட்டணச் சலுகை
என்கிறார்கள்
மது விலக்கை அமல்படுத்துங்கள்
மதுக் கடைகளை மூடுங்கள்
என்றால்
பெண்களுக்கு நிவாரணம்
தாலிக்குத் தங்கம்
என்கிறார்கள்
......................................
................................................
நிஜமாகவே
நம் கோரிக்கைகள் அவர்கள்
காதுகளில் மாறித்தான் விழுகிறதா
அல்லது
நம்மையெல்லாம் பார்க்க
மடையர்களாய்த் தெரிகிறதா ?
இனியும் ஏமாற மாட்டோம் என
நாம் சொல்லும் நாள்
மே 16
நமக்கான அரசை நாம்
தேர்ந்தெடுக்கும் நாள்
மே 16
மறக்காது வாக்களிப்போம் வாரீர் ! !
நம் பலத்தை நிரூபிப்போம் வாரீர் ! !
செவிடர்களா ?
இல்லை மடையர்களா ?
இல்லை நாம் தான் அப்படியா ?
"கல்வியில் கொள்ளையை ஒழியுங்கள்
கல்விக் கொள்கையை மாற்றுங்கள் "
என்றால்
கல்விக் கடன் தருகிறோம்
கல்விக் கடனைத் தள்ளுபடி செய்கிறோம் "
என்கிறார்கள்
வேலைக்கு உத்திரவாதம் தாருங்கள்
வேலை வாய்ப்பைப் பெருக்குங்கள்
என்றால்
வேலைபெறாதோருக்கு உதவித் தொகை
வேலையற்றோரின் கடன் தள்ளுபடி
என்கிறார்கள்
நீர் நிலைகளைப் பராமரியுங்கள்
நீ ஆதாரத்தைப் பெருக்குங்கள்
என்றால்
பத்து ரூபாய்க்குக் குடி நீர்
கடல் நீரிலிருந்து குடி நீர்
என்கிறார்கள்
சாலைகளைச் சீர்ப்படுத்துங்கள்
சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துங்கள்
என்றால்
வாகனத்திற்கு மானியம்
பஸ் கட்டணச் சலுகை
என்கிறார்கள்
மது விலக்கை அமல்படுத்துங்கள்
மதுக் கடைகளை மூடுங்கள்
என்றால்
பெண்களுக்கு நிவாரணம்
தாலிக்குத் தங்கம்
என்கிறார்கள்
......................................
................................................
நிஜமாகவே
நம் கோரிக்கைகள் அவர்கள்
காதுகளில் மாறித்தான் விழுகிறதா
அல்லது
நம்மையெல்லாம் பார்க்க
மடையர்களாய்த் தெரிகிறதா ?
இனியும் ஏமாற மாட்டோம் என
நாம் சொல்லும் நாள்
மே 16
நமக்கான அரசை நாம்
தேர்ந்தெடுக்கும் நாள்
மே 16
மறக்காது வாக்களிப்போம் வாரீர் ! !
நம் பலத்தை நிரூபிப்போம் வாரீர் ! !
11 comments:
பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் நீங்கள் அவர்களை மதிக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறார்கள். எனவே எப்போதுமே பிரச்சினைகளை வைத்துக்கொண்டே தான் இருப்பார்கள்.
அவர்களா மடையர்கள்.. நம் மடமையையும் மறதியையும் தங்களுக்கு வசதியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரிந்த சாமர்த்தியசாலிகள்... என்ன ஒரு கொடுமை என்றால் எவ்வளவு சிந்தித்தாலும் எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டியதாய் இருப்பதும் அக்கொள்ளிக்கட்டையாலேயே நம் தலையை சொரிந்துகொள்வதும்தான் தொடர்ந்துவரும் நம் சாபக்கேடு..
அருமை!எல்லாவற்றையும் மாற்றி விடுகிறேன் என்பவர்களின் தலையெழுத்தை மாற்ற எல்லோரும் மறக்காமல் வாக்களிப்போம்!
ஒரு நல்ல விடியலை மே 16-ம் தேதி எதிர் நோக்குவோம்
நன்றாகத் தெரிந்த விஷயத்தில் எதற்கு இந்த சந்தேகம்?
மாற்றம் வந்தும் மாறாமல் போனால் நாம் ஏமாளிகளே
நம்மை மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை
ஒரு வாரம் தான் பொறங்கள் நண்பரே தெரியும்!
நம்மை மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை
நீயும் பொம்மை நானும் பொம்மை, நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை.!
நீயும் பொம்மை நானும் பொம்மை, நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை.!
Post a Comment