Sunday, May 22, 2016

எரிக்கும் பசி தேடச் செய்து விடும்

"எப்படி உன்னால்
தினமொருப்  படைப்பைத்
தர முடிகிறது

அதற்காக  விஷயம்
எப்படித் தினந்தோரும்
கிடைத்து விடுகிறது  "
ஆச்சரியப்படுகிறான் நண்பன்

"எப்படி உனக்கு
மூன்று நேரமும்
உண்ண முடிகிறது

அதற்கான உணவும்
எப்படித் தினமும்
கிடைத்து விடுகிறது"
என்கிறேன் சிரித்தபடி

"உணவு கிடைப்பது
பெரிய விஷயமில்லை
எரிக்கும் பசி எப்படியும்
தேடச் செய்து விடும்
தேடிக்  கொடுத்து  விடும் "  என்கிறான்

"அதே அதே 
பசியை மட்டும்
பராமரித்தால் போதும்  "என்கிறேன்
மிக்க மகிழ்வுடன்

கேள்வி எழுப்பியவனே
நல்ல பதிலையும்
கொடுத்த திருப்தியுடன்

அவன் முகத்திலும்
மகிழ்வும்  திருப்தியும்
படரத் துவங்குகிறது


   

9 comments:

ஸ்ரீராம். said...

தேடினால்( )தானே கிடைக்கும்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
தேடுதல்தானே வாழ்க்கை
தேடுதல்தானே கவிதை
தம+1

sury siva said...

உங்களுக்கு பசிப்பதும்
நீங்கள் புசிப்பதும்
நாங்கள் ருசிப்பதும் ரசிப்பதும்
ஆக இருக்கிறதே !!

சுப்பு தாத்தா.

Jayakumar Chandrasekaran said...

ஆக,விவரங்கள் எங்கும் உள்ளன. அவற்றைத் தேர்ந்து பகிர்வதே பதிவு. அதையும் கவிதையாகச் சொல்வதே சிறப்பு. அதுவே பசியை தீர்க்கும். பசி தீர்ந்தால் மட்டும் போதாது. அது உண்ட திருப்தியையும் தர வேண்டும். அதுவே ரேங்க்.
--
Jayakumar

G.M Balasubramaniam said...

நமக்கு பசித்துத் தேடினாலும் சுவையான உணவு கிடைப்பதில்லையே

”தளிர் சுரேஷ்” said...

உண்மை! தேடினால் எல்லாமே கிடைக்கும்! தேடத்தான் பலர் முனைவது இல்லை!

ஸ்ரீமலையப்பன் said...

செம்ம

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தேடலில் வெற்றி பெறுபவர்களே சாதனையாளர்கள் ஆகிறார்கள். நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

தேடிக்கொண்டே இருக்க, படைத்துக் கொண்டே இருக்கலாம்.....

Post a Comment