Wednesday, June 1, 2016

மெய்நலம் போற்றிக் காத்து...

உலகிது விழிக்கும் முன்னே-நித்தம்
விழித்து எழுந்துப்  பாரு
உலகிது வியக்கும் வண்ணம்-உந்தன்
உயர்வது இருக்கும் பாரு

உடலினை வருத்தி நாளும்- உடற்
பயிற்சியைச் செய்துப்  பாரு
உடலது பணியாள் போல-உனக்கு
உதவிடும் முயன்றுப்  பாரு

உணவது வயிற்றில் பாதி-நல்ல
நீரும் காற்றும் மீதி
தினமிதை மறவா திருந்தால்-உன்னிடம்
நோய்நொடிக் கில்லை ஜோலி

ஓய்வதும் வேலை போல-தினமும்
அவசியம் என்றே அறிவாய்
ஓய்வதும் சக்திக் கூட்டும் -என்னும்
உண்மையை என்றும் மறவாய்

சுவரினை வைத்தே என்றும்-நல்ல
சித்திரம் வரையக் கூடும்
பழமொழி மேன்மை அறிந்தால்-எளிதாய்
பலநிலைக்  கடக்கக் கூடும்

தும்பதை விட்டு வாலைப்-பிடித்து
தோற்கிற அவலம் வேண்டாம்
மெய்நலம்  போற்றிக் காத்து-  எதிலும்
நிலையென நிற்போம்  வாராய்


6 comments:

ஸ்ரீராம். said...

நல்ல அறிவுரை.

கவியாழி said...

தகுதியான தங்களிடமிருந்து தரமான அறிவுரைக்கு நன்றி

KILLERGEE Devakottai said...

நன்று கவிஞரே...

Muruganandan M.K. said...

அருமையான ஆலோசனைகள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மெய்யான வரிகள் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்

G.M Balasubramaniam said...

சிறுவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தேவையான அறிவுரைதான் வாழ்த்துகள்

Post a Comment