உலகிது விழிக்கும் முன்னே-நித்தம்
விழித்து எழுந்துப் பாரு
உலகிது வியக்கும் வண்ணம்-உந்தன்
உயர்வது இருக்கும் பாரு
உடலினை வருத்தி நாளும்- உடற்
பயிற்சியைச் செய்துப் பாரு
உடலது பணியாள் போல-உனக்கு
உதவிடும் முயன்றுப் பாரு
உணவது வயிற்றில் பாதி-நல்ல
நீரும் காற்றும் மீதி
தினமிதை மறவா திருந்தால்-உன்னிடம்
நோய்நொடிக் கில்லை ஜோலி
ஓய்வதும் வேலை போல-தினமும்
அவசியம் என்றே அறிவாய்
ஓய்வதும் சக்திக் கூட்டும் -என்னும்
உண்மையை என்றும் மறவாய்
சுவரினை வைத்தே என்றும்-நல்ல
சித்திரம் வரையக் கூடும்
பழமொழி மேன்மை அறிந்தால்-எளிதாய்
பலநிலைக் கடக்கக் கூடும்
தும்பதை விட்டு வாலைப்-பிடித்து
தோற்கிற அவலம் வேண்டாம்
மெய்நலம் போற்றிக் காத்து- எதிலும்
நிலையென நிற்போம் வாராய்
விழித்து எழுந்துப் பாரு
உலகிது வியக்கும் வண்ணம்-உந்தன்
உயர்வது இருக்கும் பாரு
உடலினை வருத்தி நாளும்- உடற்
பயிற்சியைச் செய்துப் பாரு
உடலது பணியாள் போல-உனக்கு
உதவிடும் முயன்றுப் பாரு
உணவது வயிற்றில் பாதி-நல்ல
நீரும் காற்றும் மீதி
தினமிதை மறவா திருந்தால்-உன்னிடம்
நோய்நொடிக் கில்லை ஜோலி
ஓய்வதும் வேலை போல-தினமும்
அவசியம் என்றே அறிவாய்
ஓய்வதும் சக்திக் கூட்டும் -என்னும்
உண்மையை என்றும் மறவாய்
சுவரினை வைத்தே என்றும்-நல்ல
சித்திரம் வரையக் கூடும்
பழமொழி மேன்மை அறிந்தால்-எளிதாய்
பலநிலைக் கடக்கக் கூடும்
தும்பதை விட்டு வாலைப்-பிடித்து
தோற்கிற அவலம் வேண்டாம்
மெய்நலம் போற்றிக் காத்து- எதிலும்
நிலையென நிற்போம் வாராய்
6 comments:
நல்ல அறிவுரை.
தகுதியான தங்களிடமிருந்து தரமான அறிவுரைக்கு நன்றி
நன்று கவிஞரே...
அருமையான ஆலோசனைகள்
மெய்யான வரிகள் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்
சிறுவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தேவையான அறிவுரைதான் வாழ்த்துகள்
Post a Comment