Tuesday, February 21, 2017

வீரப்பன் சமாதியும்....

சில வருடங்களுக்கு முன்பு
சந்தனக்  கடத்தல் வீரப்பன்
சமாதி இருந்த ஊரின்
வழியாக வரும் சந்தர்ப்பம் நேர்ந்தது

அன்று சமாதியில் அதிகக் கூட்டமும்
மலர் மாலைகளும் நிறைந்திருந்தன

என்ன காரணம் எனக் கேட்டேன்

அது அவரது நினைவு நாளெனவும்
அந்த நாளில் அவரது குடும்பத்தவரும்
அவரால் பயனடந்த கிராமத்தவர்களும்
வந்து அஞ்சலி செலுத்திப் போவார்கள்
என்றார்கள்

"மந்திரிகள், மக்கள் பிரதிநிதிகள்,
உயர் அதிகாரிகள் யாரும் வந்து போவார்களா ?"
என்றேன்

அந்தக் கிராமத்தான் என்னை மிக
இகழ்ச்சியாகப் பார்த்தபடிச் சொன்னான்

"ஏன் சார் சட்டப்படி குற்றவாளி யென
தீர்மானிக்கப்பட்ட ஒருவரை அதிகாரிகளோ
மந்திரிகளோ வந்து அஞ்சலி செலுத்திப் போனால்
அவர்கள் சட்டத்தை மதிக்காதவர்கள்
என ஆகிப் போகாதா ?

சட்டத்தை மதிப்பேன்,அதன்படி நடப்பேன்
என உறுதி ஏற்றுப் பதவி ஏற்றவர்கள்
அதை மீறியவர்கள் என ஆகிப் போகாதா ?

அவர்கள் இவ்விடம் வந்து உன் வழியில்
நடப்பேன் என உறுதி ஏற்றால்
கேலிக் கூத்தாகிப் போகாதா ?
பதவி  பறிபோகாதா " என்றான்

அப்போது அவன் கூற்று அவ்வளவு
முக்கியமானதாகப் படவில்லை

இப்போது ஏனோ அதிக நேரம்
அது குறித்து யோசிக்க வைக்கிறது 

10 comments:

ஸ்ரீராம். said...

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கிறிஸ்துதாஸ் காந்தி மிக அருமையாக இவர்களை 'வாரி'யுள்ள வாட்ஸாப் வீடியோ துண்டு வந்தது, பார்த்தேன். இதே கருத்துதான்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் ஐயா
தம +1

கரந்தை ஜெயக்குமார் said...

முதன் முறை தீர்ப்பு வந்தபோது அழுதவர்கள்
மீண்டும் அதே தீர்ப்பிற்கு
இனிப்பு வழங்கிக் கொண்டாடுகிறார்களே

Unknown said...

ஆனால் இப்போது சட்டத்தை மதிப்பவர்கள் யாரும் ஆட்சியில் இல்லையே

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்திக்க வேண்டிய சரியான கேள்விகள்...

அன்பே சிவம் said...

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.

Imayavaramban said...

அம்மா வழியில் சின்னம்மாவின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்வோம்! என்று கூச்சா நாச்சமின்றிப்பேசி வருகின்றனர்.

G.M Balasubramaniam said...

சட்டம் நீதி என்று ஒன்று இருக்கிறதா என்ன. அதுவும் அரசியல்வாதிகளுக்கா ஒன்னுமே புரியலே

Unknown said...

சூடான சூழ்நிலைக்கு ஏற்ற கேள்வி! நலமா!

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கருத்து. அவரால் பயனடைந்த கிராமத்தார்கள் செல்லலாம்....அவரால் பயனடைந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் செல்ல முடியுமோ??!!!

Post a Comment