Monday, May 21, 2018

நாளைப் பிடித்தல்

 லாகவமாய்ப்  பிடிக்கும்
 சூட்சுமம் அறிந்தவர்களிடம்
 பயிற்சிப் பெற்று                                   
முதல் நாள் இரவில்               
ஒத்திகையும் பார்த்து                           
மிகக் கவனமாய் ...                   
கண்கொத்திப் பாம்பாய் 
விடியலுக்காகக் காத்திருக்க.       

 சோம்பல் இடுக்கில்                 
சுவாரஸ்யப் புதர்களில்
அதன்  தன்மை மாறாது              
 மெல்ல மெல்ல நழுவி                     
மறைந்துத் தொலைகிறது
விடிந்த இந்த நாளும்         
எப்போதும் போலவே

சற்றும் மனம் தளரா
விக்கிரமாதித்தனாய்
இன்று இரவும்
ஒத்திகையைத் தொடர்கிறேன்

 நாளையேனும்
முழுப்பொழுதையும்
என் பிடிக்குள் அடக்கவேண்டும் எனும்
அசைக்கமுடியா உறுதியுடன்
எல்லோரையும் போலவே

15 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையானதொரு கருத்து கவிதை. ஆம். அனைவருமே பிடிக்குள் அடங்கா முழு பொழுதையும் எப்போதுமே தவற விட்டு வருந்துகிறோம். தங்கள் வார்த்தைகளின் லாவகத்தை நிரம்பவும் ரசித்தேன். அருமை...

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Yaathoramani.blogspot.com said...

முதல் வரவுக்கும் அற்புதமான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

வித்தியாசமான சிந்தனை. ஒரு நாளை அல்ல, ஒரு நிமிடத்தைக் கூட அல்ல, இந்த கணத்தை நம்மால் நம் பிடிக்குள் வைக்க முடிவதில்லை!

Yaathoramani.blogspot.com said...

ஆம் அது மட்டும் முடியுமானால்.நிச்சயம் வானம் வசப்பட்டுவிடும்தானே.இரசித்து இட்ட பின்னூட்டம் மனதுக்கு நிறைவைத்தருகிறது.வாழ்த்துக்களுடன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் உண்மைதான்.

’நாளைப் பிடித்தல்’ என்பது
நம்மில் பெரும்பாலோனருக்கு
‘திருநாளைப் போவார்’ கதை
போலத்தான் அமைந்து விடுகிறது.

அதனைப்பற்றிய தங்கள் ஆக்கம் அருமை.

கோமதி அரசு said...

நாளைப் பிடித்தல்’ என்பது
நம்மில் பெரும்பாலோனருக்கு
‘திருநாளைப் போவார்’ கதை
போலத்தான் அமைந்து விடுகிறது. //

அருமையான பின்னூட்டம் வை.கோ சார் நலமா?

கோமதி அரசு said...

கவிதை அருமை.

Yaathoramani.blogspot.com said...

ஆம் பதிவுலகப் பிதாமகரின் ஒரு வரி ஆயினும் அது எப்போதும் திருவரியாகவே இருக்கும்

Yaathoramani.blogspot.com said...

வரவுக்கும் உற்சாகமூட்டும்பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

Yarlpavanan said...


"சோம்பல் இடுக்கில்
சுவாரஸ்யப் புதர்களில்
அதன் தன்மை மாறாது
மெல்ல மெல்ல நழுவி
மறைந்துத் தொலைகிறது
விடிந்த இந்த நாளும்
எப்போதும் போலவே..." என
அருமையாகச் சொன்னீர்கள்!
பாராட்டுகள்!

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் அருமை கவிஞரே

Yaathoramani.blogspot.com said...

Jeevalingam Yarlpavanan Kasirajalingam //
வரவுக்கும் உற்சாகமூட்டும்பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai //வரவுக்கும் உற்சாகமூட்டும்பின்னூட்டத்திற்கும் நல்வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

அருமை! சொடக்கும் போடும் அந்த துளி நொடி கூட நம் கையில் இல்லை என்பதே உண்மை!!

துளசிதரன், கீதா

iramuthusamy@gmail.com said...

நேரம் நம்மிடமிருந்து நழுவிச் சென்றுகொண்டே இருக்கிறது. திட்டமிட்டும் பலனில்லை. வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை.

Post a Comment