காதல் உணர்வு பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே
வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே
கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே
மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
கூர்மிகுக் கோடாலியே
தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே
குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு பான மே
எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே
தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச் தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ
கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே
வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே
கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே
மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
கூர்மிகுக் கோடாலியே
தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே
குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு பான மே
எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே
தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச் தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ
கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்
5 comments:
வணக்கம் சகோதரரே
கவிதை அருமை..
/கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல். /
உண்மைதான்... கண்டிப்பாக தங்களுக்கும் கவிதை பெண்ணின் அருள் நிறைய இருப்பதால்தான் இதுபோன்ற கவிதைகள் நாங்கள் ரசிக்கும் வண்ணம் இனியதாக எளிதாக பிறக்கிறது.
தங்களது ஆழமான அர்த்தங்கள் நிறைந்த அழகான இந்த கவிதையை பலமுறை படித்து ரசித்தேன். பாராட்டுக்களுடன், பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல கவிதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அருமை...
ரசித்தேன் ஐயா...
கவிதைப் பெண் தங்களுக்கு வாரித்தான் வழங்கி இருக்கிறார் ஐயா
அருளட்டும் கவிதைப் பெண்.
Post a Comment