Monday, February 10, 2020

சடங்குகளும்...சில சம்பிராதயங்களும்..

பாலத்தின் உச்சத்தில்
அதிக சுமையேற்றப்பட்ட
அந்த வண்டி மாடுகள்
நிலை குலைந்து போகின்றன

நிலையுணர்ந்துக்
கீழிறங்கித்
தானும் தள்ளுதல் போல்
குரலால், உடல் மொழியால்
அதீத பாவனை செய்கிறான்
அந்த்க் கிராமத்து வண்டியோட்டி

பிரசவ அவஸ்தையின்
கடைசி நொடி உந்துதலாய்
உடல் சக்தியணைத்தையும்
ஒருங்கிணைத்து மாடுகள்  உந்த
உச்சம் கடக்கிறது வண்டி

உடல் மொழியும்
ஓங்கி ஒலித்தக் குரலும்
பொய்தான் ஆயினும் கூட
உச்ச நொடிக் கடக்க
அந்தப் பாவனைக் கூட
அவசியமானதாகத்தான் படுகிறது

நம்பிக்கைக் குலையாதிருக்க
இருக்கு நிலையிலிருந்து சரியாதிருக்க
பகுத்தறிவுக்கு ஒப்பவில்லையாயினும்
சில சடங்கு சம்பிரதாயங்கள்
மிக அவசியமாவதைப் போலவும்...

5 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அவசியமாவதைப் போலவும்..ரசித்தேன்.

வெங்கட் நாகராஜ் said...

பகுத்தறிவுக்கு ஒப்பவில்லயாயினும்... உண்மை தான் ஜி. வேண்டாம் என நினைத்தாலும் சில காரியங்கள் இந்த வகையிலேயே.

G.M Balasubramaniam said...

அறிவுக்கும் உணர்வுக்கும் இடையே நடக்கும் போட்டியில் அறிவு தோற்பதும் உணர்வு வெல்வது நடப்பது தானே

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அழகான கவிதை.

/நம்பிக்கைக் குலையாதிருக்க
இருக்கு நிலையிலிருந்து சரியாதிருக்க
பகுத்தறிவுக்கு ஒப்பவில்லையாயினும்
சில சடங்கு சம்பிரதாயங்கள்
மிக அவசியமாவதைப் போலவும்../

மனதில் உதிக்கும் நம்பிக்கைகள்தான் சம்பிரதாயங்களை வழி நடத்தி செல்கின்றன. நல்ல உவமானத்துடன் தெளிவாக உணர்த்தியிருக்கிறீர்கள். படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

சரியே...

Post a Comment