எது பதியப்பட்டதோ அது நன்றாகவே பதியப்பட்டது
எது பதியப்படுகிறதோ அது நன்றாகவே பதியப்படுகிறது
எது பதியப்பட இருக்கிறதோ அதுவும் நன்றாகவே பதியப்படும்
உன்னுடையது என நீ எதைப் பதிந்தாய் ?
எதற்காக நீ பெருமிதம் கொள்கிறாய் ?
நீயாக எதைப் பதிந்தாய் பேரானந்தம் கொள்வதற்கு ?
நீயாக எதைக் கொடுத்தாய் பேருவகை கொள்வதற்கு ?
நீ எதைப் பதிந்தாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்ப்பட்டது
நீ எதைப் பகிர்ந்தாயோ
அதுவும் இதிலிருந்தே பகிரப்பபட்டது
எது இன்று உன்னுடையதோ அது
நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையாதாகும்
இதுவே காஃபி பேஸ்ட்நியதியும் காஃபி பேஸ்ட் சாரமுமாகும்
( இடையிடையே கூட ஏதேனும் ஒன்றிரண்டு கூடசுயமாக எழுதாது வெட்டி ஒட்டுதலை மட்டும்செய்து கொண்டிருப்பவர்களுக்காக )
எது பதியப்படுகிறதோ அது நன்றாகவே பதியப்படுகிறது
எது பதியப்பட இருக்கிறதோ அதுவும் நன்றாகவே பதியப்படும்
உன்னுடையது என நீ எதைப் பதிந்தாய் ?
எதற்காக நீ பெருமிதம் கொள்கிறாய் ?
நீயாக எதைப் பதிந்தாய் பேரானந்தம் கொள்வதற்கு ?
நீயாக எதைக் கொடுத்தாய் பேருவகை கொள்வதற்கு ?
நீ எதைப் பதிந்தாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்ப்பட்டது
நீ எதைப் பகிர்ந்தாயோ
அதுவும் இதிலிருந்தே பகிரப்பபட்டது
எது இன்று உன்னுடையதோ அது
நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடையாதாகும்
இதுவே காஃபி பேஸ்ட்நியதியும் காஃபி பேஸ்ட் சாரமுமாகும்
( இடையிடையே கூட ஏதேனும் ஒன்றிரண்டு கூடசுயமாக எழுதாது வெட்டி ஒட்டுதலை மட்டும்செய்து கொண்டிருப்பவர்களுக்காக )
11 comments:
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா. பதிவுலக கீதை அருமை.
என்ன செய்வது தோழரே? பிரதி செய்து வெளியிட செலவழிக்கும் நேரத்தை புதிய படைப்புகளை வெளியிட செலவழிப்பது நல்லது.
தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது காஃபி பேஸ்ட் தோழர்களுக்காக… பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
வைகோ ஐயா சொல்வது போல பதிவுலக கீதை!
காஃபி பேஸ்ட் தோழர்களுக்கு சொல்லுவதெல்லாம் செவிடன் காதில் சங்குதியது போலத்தான் அவர்கள் பாட்டிற்கு யார் என்ன சொன்னாலும் தன் கடமையை செய்து கொண்டிருப்பார்கள்
வைகோ சார் சொன்னது போல் பதிவுலக கீதை மிக அருமை.
உண்மை வேறொன்றில்லை.
கர்மத்தை செய். பலனை எதிர்பாராதே. உன்னுடைய கர்மம் கோப்பி பேஸ்ட் செய்வது செய்வது திருந்த செய். சரி அல்லவா?
கீதாம்மா கமெண்ட் காணோம்
மதுரைத் தமிழன் கருத்தை வழிமொழிகின்றேன்
திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது...
பதிவுலக கீதையா? கீதையில் எங்கு சொல்லி இருக்கிறது எனக்கென்னவோ கீதைமேற்கோள் சரியில்லையோ எனத்தோன்றுகிறது
வணக்கம் சகோதரரே
நல்லதோர் பதிவு. பெருந்தவறு செய்பவர்கள் கூட என்றாவது தன் தவறை உணர்ந்து திருந்தி விடுவார்கள். ஆனால் இந்த காஃபி பேஸ்ட் செய்பவர்கள் என்றுமே திருந்தவே வாய்ப்பில்லை போலும்..
கீதையின் சாராம்சத்தை போலவே இருந்த பதிவின் கருத்துக்கள் அருமை.
/இடையிடையே கூட ஏதேனும் ஒன்றிரண்டு கூடசுயமாக எழுதாது வெட்டி ஒட்டுதலை மட்டும்செய்து கொண்டிருப்பவர்களுக்காக )/
இறுதியில் நீங்கள் எழுதிய சாட்டையடியாய் தந்த பின்குறிப்பு படித்து மிகவும் ரசித்தேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
உண்மையில் கீதையில் இதுபோல சொல்லப்படவில்லை என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனாலும் அந்த வாசகங்களை மாற்றி இங்கு போட்டிருப்பது ரசிக்க வைத்தது.
நாம் எழுதுவதை எங்கிருந்தாவதுநாமும் காப்பிபேஸ்ட் செய்திருந்தால்தான் 'அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது' என்கிற வரிகள் பொருந்தும். ஹா.. ஹா... ஹா...
Post a Comment