- பல வருடங்களுக்கு முன்பு... தொலைக்காட்சித் தொடர்களில் ஆண்களே கதாநாயகர்களாக வில்லன்களாக இருந்தார்கள் கதாநாயகனின் நாயகிகள் அவனின் நற்செயல்களுக்கு உடனிருந்து உதவுபவர்களாக இருக்க வில்லனின் நாயகிகள் அவன் தீய செயல்களுக்கு எதிரானவர்களாகவும் முடிந்தால் அவனைத் திருத்த முயல்பவர்களாகவும் இருந்தார்கள்.. சில வருடங்களுக்குப் பின் ... ஆண் கதாநாயகர்களும் அவர்தம் நாயகிகளும் அதே நிலையில் தொடர.. வில்லனின் நாயகிகள் மட்டும் அவன் தீய செயல்களுக்கு உடந்தையானவர்களாவும் இன்னும் சரியாகச் சொன்னால் அவன் தீய செயல்களுக்கு திட்டம் தீட்டித் தருபவர்களாகவும் மாறிப்போனார்கள்.. இப்போதெல்லாம் ..... தொலைக்காட்சித் தொடர்களில் பெண்களே கதாநாயகியாகிப் போக. ஆண்கள் டம்மித் துணையாகிப் போனார்கள் பெண்களே வில்லனாகிப் போக அவர்களின் அடியாட்களாகக் கூட பெண்களே ஆகித் தூள்கிளப்புகிறார்கள் வீட்டின் சமையலறையில் விஷபாட்டில்களும் அலமாரிகளில் கைத்துப்பாகிகளும் எப்போதும் எடுக்குப்படியாய் வைத்திருந்து தொடர்களுக்குச் சுவைகூட்டிப் போவதோடு வருங்கால பெண்சந்ததிக்கு வழிகாட்டிகளாகவும் திகழ்கிறார்கள்..... வாழ்க நாளும் இதுபோன்ற தொலைக்காட்சித் தொடர்கள் வளர்க நாளும் இதுபோன்ற பெண்ணியப் பிரதாபங்களும்.....
Saturday, February 29, 2020
தொலைக்காட்சியில் பெண்ணியப் பிரதாபங்கள்(பரிதாபங்கள்)
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
அந்தப் பக்கமே போவதில்லை...
பெண்களுக்கு எதுவும் முடியும். ஆண்களுக்குப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் அவர்களே. என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்திருந்தும் இது முற்கால நாடகங்கள் திரைப்படங்களில் காட்டப்படவில்லை. இன்று எடுத்துக் காட்டுகின்றார்கள் ஆனால் சகிக்க முடியாமல் இருக்கின்றது. பெண்களுக்கு என்று ஒரு மென்மை அடிபணிந்து செல்வது போல் சென்று தமது காரியங்களை சாதிக்கும் நுண்மை திறன் போன்றவை இந்நாடகங்ளில் காட்டவில்லை. பெண்கள் எல்லாம் வில்லிகளாகத் தான் இருக்கின்றார்கள். பழிவாங்கும் பண்பு மனிதத்தன்மையைத் தோற்கடிக்கின்றது
நடப்பதை தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள் என்றால் பெண்க்ளை நினைத்தால் பயமாக இருக்கிறது
சீரியல்கள் பக்கமே செல்வதில்லை! In fact, தொலைக்காட்சியே பார்ப்பதில்லை!
செய்திகள் பார்ப்பதற்கு மட்டுமே தொலைக்காட்சி
வெங்கட் சொல்வதுபோல சீரியல் மட்டுமில்லை, தொலைக்காட்சிப் பக்கமே செல்வதில்லை.
Post a Comment